பெங்களூருவில் சமீபத்தில் அதிகளவில் நாய் விற்பனை நடந்தது. நகரின் பிரபல நாய் வளர்ப்பு நிறுவனமான கடபோம்ஸ் கென்னலின் உரிமையாளர் சதீஷ், ரூ.20 கோடிக்கு "காகேசியன் ஷெப்பர்டு" இன நாயை வாங்கி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
செல்லப்பிராணிகளை தங்களது வீடுகளில், நிறுவனங்களில் வளர்ப்பது தொழிலதிபர்கள், பணக்காரர்களுக்கு பிடித்த செயல். இந்நிலையில், கர்நாடகம் மாநிலம் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ.20 கோடிக்கு வாங்கியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
காகேசியன் ஷெப்பர்டு என்ற இன நாய் ஓநாயையே கொன்று வீழ்த்தும் திறன் கொண்டது. இது மிகவும் விலையுயர்ந்த நாய் எனவும் கூறலாம். இதன் விலையானது கோடியில்தான் ஆரம்பிக்கும் அது மட்டும் இல்லாமல் இது மிகவும் ஆக்ரோஷமான நாய். காவலுக்கு வளர்க்கப்படும் இந்த நாயின் திறன் மிகவும் அதிகமாக இருக்கும்.
இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவரும், பெங்களூருவில் உள்ள கட போம்ஸ் கென்னல்ஸ் என்ற நாய் விற்பனை கடை வைத்திருப்பவர் சதீஷ். இவர் ஹைதராபாத்தில் உள்ள நாய் விற்பனையாளரிடம் இருந்து இந்த வகை (காகேசியன் ஷெப்பர்டு) இன நாயை தான் வாங்கியுள்ளார்.
அதன் விலை ரூ.20 கோடி என கூறப்படுகிறது. ஒன்றரை வயதுடைய அந்த நாய்க்கு 'கடபோம் ஹைடர் என பெயர் சூட்டியுள்ளார். ரஷ்யா, ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளில் அதிகம் காணப்படும் இந்த காகேசியன் ஷெப்பர்டு நாயை, இந்தியாவில் மிக மிக அரிதாகவே காண முடியும். ஏற்கனவே சதீஷ் 'திபெத்தியன் மஸ்டிப்' இன அரிய வகை நாயை ரூ.10 கோடிக்கும், 'அலஸ்கன் மலமுடே இன அரிய வகை நாயை ரூ.8 கோடிக்கும் வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.