முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / தூக்கம் வருது.. டிஸ்டர்ப் பண்ணாதீங்க.. உபர் டாக்ஸியை கேன்சல் செய்த டிரைவர்

தூக்கம் வருது.. டிஸ்டர்ப் பண்ணாதீங்க.. உபர் டாக்ஸியை கேன்சல் செய்த டிரைவர்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

உபர் பொறுத்தவரை பணத்தை எவ்வாறு செலுத்தப் போகிறீர்கள் ஆன்லைன் வழியாகவா அல்லது கேஷ் ஆக கொடுப்பீர்களா என்பது போன்ற பல கேள்விகளை நீங்கள் எதிர் கொண்டு இருக்கலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவின் மிகப்பெரிய டெக் நகரமான பெங்களூருவில் தினமும் பல்வேறு வித சம்பவங்கள் நடந்து வருகின்றன. அவற்றின் சில நகைச்சுவையாகவும், விசித்திரமாகவும், அனைவரையும் புருவம் உயர்த்தி பார்க்கும் படியாகவும் வைத்து விடும். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் சமீபத்தில் உபர் நிறுவனத்தில் பணிபுரியும் ஓட்டுநருடன் வாடிக்கையாளர் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுவாகவே நீங்கள் உபர் அல்லது வேறு ஏதேனும் டாக்ஸி நிறுவனங்களில் ஆன்லைன் வழியாக டாக்ஸி புக் செய்து இருக்கும்போது சில நேரங்களில் ஓட்டுநர்கள் பல்வேறு வித கேள்விகளை கேட்பார்கள்.

பணத்தை எவ்வாறு செலுத்தப் போகிறீர்கள் ஆன்லைன் வழியாகவா அல்லது கேஷ் ஆக கொடுப்பீர்களா என்பது போன்ற பல கேள்விகளை நீங்கள் எதிர் கொண்டு இருக்கலாம். இதை தவிர சில சமயங்களில் ஓட்டுநர்கள் சிலர் அடாவடியாக அந்த புக்கிங்கை கேன்சல் செய்து விடுவதும் அல்லது நம்மையே கேன்சல் செய்ய சொல்வதும் நடப்பதுண்டு.

ஆஷி என்ற பெண்மணி ட்விட்டரில் தனக்கு நேர்ந்த சம்பவத்தை பற்றி பகிர்ந்து உள்ளார். அதில் அந்த பெண்மணி புக் செய்த ரைடை பிக்கப் செய்வதற்காக பரத் என்ற ஓட்டுனர் புக் செய்யப்பட்டுள்ளார். எது எப்படியோ ஓட்டுனரும் புக்கிங்கை அக்செப்ட் செய்த பின்பு, சாட் பாக்ஸ் வழியாக ஆசியை ரைடை ரத்து செய்யுமாறு கேட்டு கொண்டுள்ளார். இதில் முக்கிய விஷயமே அவர் ரத்து செய்ததற்கான காரணம் தான்.

Read More : ஆயிரத்தில் ஒருவரால் மட்டுமே இந்த புகைப்படத்தில் இருக்கும் யானையை கண்டுபிடிக்க முடியும்... நீங்கள்.?

சாட்பாக்ஸ் வழியாக அந்த பெண்மணியிடம் பேசிய அந்த நபர் “இந்த ரைடை கேன்சல் செய்து விடுங்கள்! எனக்கு தூக்கம் வருகிறது!” என்று கூறியுள்ளார். இதற்கு ஆஷி ஓகே என பதில் அளித்து விட்டார். அவர் ஓட்டுநருடன் பேசிய இந்த ஸ்கிரீன்ஷாட் ஐ தான் ஆஷி ட்விட்டர் வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளார்.

அவர் பதிவிட்டதிலிருந்து தற்போது வரை கிட்டத்தட்ட 3 லட்சத்திற்கும் அதிக பார்வைகளை அந்த பதிவு பெற்றுள்ளது. பலர் இதை நகைச்சுவையாகவும் தங்களுக்கு ஏற்பட்ட பல்வேறு சம்பவங்களையும் பொருத்தியும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதைப் பற்றி தங்களது கருத்தை பதிவிட்ட ட்விட்டர் வாசி ஒருவர் கூறுகையில் “இந்த நபர் நேர்மையாக இருந்துள்ளார் என்பதற்காக இவரை பாராட்டலாம். நான் ஒரு முறை பெங்களூரு விமான நிலையத்திலிருந்து திரும்பி வரும் வழியில் கார் ஓட்டுநர் திடீரென அவுட்டர் ரிங் சாலையில் செல்லும் போது மேடம் என்னால் இனி வண்டி ஓட்ட இயலாது. எனக்கு தூக்கம் வருகிறது” என்று கூறியுள்ளார். “அப்போது நேரம் அதிகாலை 3.30. நான் மிகவும் பயந்து விட்டேன்!” என்று பதிவிட்டுள்ளார்.

இதைப் பற்றி நகைச்சுவையாக பதிவிட்ட மற்றொருவர் “தூக்கம் தான் முக்கியம்” என தனது கருத்தை பதிவு செய்துள்ளார். மற்றொருவரோ “தூக்கம் தான் முக்கியம் எனில், எதற்காக அவர்கள் ரைடை அக்செப்ட் செய்கிறார்கள்? அதன்பின் புக்கிங் செய்தவரையே கேன்சல் செய்ய சொல்கிறார்கள்? என்று வெறுப்புடன் கருத்தை பதிவு செய்துள்ளார்.

First published:

Tags: Trending, Uber, Viral