முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / கல்யாணத்துக்கு லேட்டாச்சு வழிவிடுங்க... மெட்ரோவில் பயணித்த மணப்பெண் - வைரல் வீடியோ

கல்யாணத்துக்கு லேட்டாச்சு வழிவிடுங்க... மெட்ரோவில் பயணித்த மணப்பெண் - வைரல் வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral | ரயிலுக்குள் குடும்பத்தினருடன் செல்பி எடுத்தும், குதூகலத்துடன் சென்ற பெண்ணின் வீடியோ இணையத்தில் பதிவிட்ட நிலையில், நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகில் எந்த மூலையில் என்ன நடந்தாலும்? நொடியில் நம் கண் முன்னே கொண்டு வரும் அற்புத பணியை மேற்கொள்கிறது இணையதளங்கள். தினமும் நம்மைச் சுற்றி ஏராளமான விஷயங்கள் நடப்பது என்பது இயல்பான ஒன்று தான். இந்நிலையில் சில விஷயங்கள் மட்டுமே நம் மனதில் நீங்கா இடம் பிடிக்கும். இதற்கு முக்கிய காரணம் சோசியல் மீடியாக்களின் மூலம் வைரலாகும் வீடியோக்கள் தான். இதுபோன்ற வீடியோ ஒன்று தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்படி என்ன இருந்தது? என்பது குறித்து இங்கே நாமும் அறிந்துக் கொள்வோம்..

மெட்ரோவில் பயணித்த மணப்பெண் : பெங்களூர் என்றாலே அதிக போக்குவரத்து நெரிசல் மட்டும் தான் அனைவரின் நினைவுக்கு வரும். அரை மணி நேரத்தில் செல்லக்கூடிய இடத்திற்குக் கூட போக்குவரத்து நெரிசலால் ஒரு மணி நேரம் எடுக்கும். இந்த மாதிரியான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த மணப்பெண் செய்த செயல் தான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆம் பெங்களூரில் உள்ள மணப்பெண் ஒருவர் தனது திருமணத்திற்காக காரில் குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அப்போது பெரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய நிலையில் , சரியான முகூர்த்த நேரத்திற்கு செல்ல முடியுமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில், அந்த மணப்பெண் மற்றும் அவருடன் குடும்பத்தினர் இணைந்து ஒரு முடிவை எடுத்தனர். அதன்படி, போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் சரியான நேரத்திற்கு சென்றடைய வேண்டும் என்பதற்காக காரை மெட்ரோ ஸ்டேஷன் வாசலின் முன்பாக நிறுத்திவிட்டு, மெட்ரோ ரயிலில் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். மணப்பெண் அலங்காரத்தில் மெட்ரோ ரயில் நிலையத்தில் சென்ற பெண்ணை மற்ற பயணிகள் வியப்புடன் பார்த்த நிலையில், சிரித்த முகத்துடன் குடும்பத்தினருடன் பயணம் செய்யத் தொடங்கினார் புதுமணப்பெண். ரயிலுக்குள் குடும்பத்தினருடன் செல்பி எடுத்தும், குதூகலத்துடன் சென்ற பெண்ணின் வீடியோ இணையத்தில் பதிவிட்ட நிலையில், நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

புதுமணப் பெண்ணின் சாதுர்த்தயமான செயல் பாராட்டத்தக்கது என்றும், இதுப்போன்று பிரச்சனைகளை பாசிட்டிவ் ஆக எடுக்கும் மனதை நிச்சயம் பாராட்டியாகவே ஆக வேண்டும் என்றும் திருமண தின வாழ்த்துக்கள் என்பது போன்ற கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். நிச்சயம் எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிக்கும் திறன் இப்பெண்ணிடம் உள்ளது என்பது போன்ற கருத்துகளையும் நெட்டிசன்கள் பதிவிடுகின்றனர்.பொதுவாக, மணப்பெண் மேக்கப் களையாமல் இருப்பதற்கு காரில் அல்லது வேனில் தான் திருமணத்திற்குச் செல்ல வேண்டும் என்று நினைக்கும் சூழல் இருந்தாலும், புதுவிதமாக மெட்ரோ ரயிலில் மணப்பெண் அலங்காரத்துடன் பயணித்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்துவிட்டது என்று தான் கூற வேண்டும்.

First published:

Tags: Trending, Viral