செடிகளுடன் கூடிய கண்ணாடி மாஸ்க்கோடு வீதியில் உலாவும் பெல்ஜிய கலைஞர் - வீடியோ
செடிகளுடன் கூடிய கண்ணாடி மாஸ்க்கோடு வீதியில் உலாவும் பெல்ஜிய கலைஞர் - வீடியோ
வித்யாசமான மாஸ்க்
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கண்ணாடிக் குடுவைக்குள் சிறு சிறு நறுமண செடிகளை வளர்த்து அதனை மாஸ்க்காக அணிந்து கொண்டு வீதியில் உலாவும் வீடியோ இணையவாசிகள் இடையே பாராட்டு பெற்று வருகின்றது.
பெல்ஜிய கலைஞரும் சமூக சேவையாளருமான அலன் வெர்சுவரன் பெல்ஜியம் நாட்டின் தலைநகரில் செடிகள் நிறைந்த கண்ணாடி பெட்டிக்குள் தனது தலையை விட்டபடி மாஸ்க் ஒன்றை அணிந்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், நான் மிகவும் நறுமணமாக உணர்கின்றேன். இந்த கூண்டில் உள்ளது நறுமணச் செடிகள். நான் சுவாசிக்க இவை நன்றாக உதவுகின்றது. எனக்கு ஆஸ்துமா உள்ளது. இவ்விதம் சுவாசிப்பது கூட எனக்கு வசதியாக உள்ளது. காற்று மற்றும் ஒலி மாசுபாட்டிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவையைக் குறைப்பதாகவும் கூறியுள்ளார்.
அந்நாட்டில் கொரோனா காரணமாக கடைகள் மூடப்பட்டுளள்து. எனினும் ஏதேனும் தேவைக்காக வீதியில் நடக்கும் போது பலரும் தன்னை கவனிப்பதாகவும், தனிமையில் இருப்பதாக உணர்வதாகவும் அது இந்த கொரோனா காலத்தில் பிறர் தன்னிடம் வந்து பேசுவதை குறைப்பதாகவும் கூறியுள்ளார்.
This man is wearing a ‘portable oasis’ around his head instead of a face mask 🌿 pic.twitter.com/QhKv96VvyW
'இது ஒரு கிரீன்ஹவுஸ்? இது தேனீக்களுக்கானதா? இது தாவரங்களுக்கானதா? என்று எங்களுக்குத் தெரியாது, ஆனால் இது ஒரு நல்ல யோசனை என்று அந்நாட்டை சேர்ந்த நகைக்கடை விற்பனையாளர் சார்லி எல்கிஸ் ராய்ட்டர்ஸிடம் கூறியுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.