Home /News /trend /

எனக்காக ரொம்ப கஷ்டப்படுறா... வாழ்நாள் முழுதும் யாசித்த பணத்தில் மனைவிக்காக மொபட் வாங்கிய கணவர்

எனக்காக ரொம்ப கஷ்டப்படுறா... வாழ்நாள் முழுதும் யாசித்த பணத்தில் மனைவிக்காக மொபட் வாங்கிய கணவர்

வாழ்நாள் முழுதும் யாசித்த பணத்தில் மனைவிக்காக மொபட் வாங்கிய கணவர்

வாழ்நாள் முழுதும் யாசித்த பணத்தில் மனைவிக்காக மொபட் வாங்கிய கணவர்

Viral | ஒரு மனைவிக்கு கணவன் இரண்டு சக்கர வாகனம் வாங்கி கொடுப்பது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது.

  முதியவர்கள் தள்ளுவண்டி கடை நடத்துவது, சிறிய அளவில் ஆனால் சுவையான சாப்பாட்டுக் கடை நடத்துவது அல்லது தின்பண்டங்கள் விற்பது என்று பல இடங்களில் கண்டுள்ளோம். அவ்வாறு வேலை செய்ய இயலாதவர்கள் யாசகர்கள் ஆக அங்கங்கே இருக்கிறார்கள். நாடு முழுவதும் பல இடங்களில் வயதான தம்பதிகள், யாசகர்களாக சிரமப்பட்டு வருவதை அன்றாடம் பலரும் பார்க்கின்றோம். குடும்பங்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டவர்கள், தொடக்கம் முதலே வசதி வாய்ப்பு இன்றி வாழ்ந்து வருபவர்கள் என்று இவர்களில் பல பிரிவுகளில் உள்ளனர். ஆனால் பிச்சை எடுத்தாலும் எந்த தொழில் செய்தாலும் உடலுக்கு யாரும் உடனுக்குடன் யாருமில்லை என்றாலும் இந்த தம்பதி ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து வருகின்றனர்.

  அவர்களில் ஒரு தம்பதிதான் மத்தியப் பிரதேசத்தில் அமர்வாரா என்ற இடத்தில் யாசித்து வரும் முதிய தம்பதியான சந்தோஷ் குமார் சாஹு மற்றும் முன்னி சாஹு. ஆதரவற்ற நிலையிலும் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் அன்பாகவும் இருந்து வருகின்றனர். அது மட்டுமின்றி எந்த நிலையில் இருந்தாலும் தன் மனைவியின் தேவையை நிறைவேற்றவேண்டும் என்பதை இந்த முதியவர் செயல்படுத்தியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் பரவி பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

  ஒரு மனைவிக்கு கணவன் இரண்டு சக்கர வாகனம் வாங்கி கொடுப்பது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. ஆனால் தங்களின் ஜீவனத்துக்கு யாசித்து வாழும் நிலையில் இருக்கும் ஒரு முதியவர் தன் மனைவிக்காக நான்கு ஆண்டுகளாக சேமித்து ₹90,000 மதிப்புள்ள ஒரு மொபட்டை வாங்கிக் கொடுத்தது மிகப்பெரிய சாதனை தான்.

  Also Read : உங்கள் மூளைக்கு சவால்.. காபி கொட்டைகளுக்கு நடுவில் மனித முகம்

  முதியவரான சந்தோஷுக்கு கால்கள் செயலிழந்த நிலையில் இருக்கிறது. இவரின் மனைவி இவரை டிரை சைக்கிளில் அமர்த்தி எல்லா இடத்துக்கும் தள்ளிக்கொண்டு செல்வார். அமர்வாரா என்ற ஊர் முழுவதும் இவர்கள் யாசித்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் வாழ்ந்து வருகின்றனர். இருவருக்கும் வயதாகி வரும் நிலையில், உதவி இல்லாமல் இயங்க முடியாத நிலை, மனைவியாலும் மூன்று சக்கர வண்டியை தள்ளிக்கொண்டு செல்ல இயலவில்லை. அடிக்கடி உடல் பலவீனம் மற்றும் முதுகுவலியால் அவதிப்படுகிறார். அதுமட்டுமின்றி மழை குளிர் காலங்களில் இருவருமே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு கூட மிகவும் கஷ்டப்பட்டு வந்திருக்கிறார்கள்.

  தினமும் 300 – 400 ரூபாய் வரை சம்பாதிக்கும் இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சில ஆண்டுகளாக சேமித்து வந்துள்ளனர். அந்த சேமிப்பில் இருந்து தன்னுடைய மனைவிக்கு ஒரு மொபெட்டை வாங்கியுள்ளார் முதியவர்.  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சந்தோஷ் “எங்களிடம் இதற்கு முன்பு ஒரு ட்ரை சைக்கிள் இருந்தது. ஆனால் என் மனைவி அடிக்கடி முதுகு வலிக்கிறது என்று கூறிக் கொண்டிருந்தார். எனவே இந்த வாகனத்தை நான் ₹90,000 கொடுத்து வாங்கியுள்ளேன். இனி நாங்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் இடர்ஸி, போபால், இந்தோர் ஆகிய ஊர்களுக்கு செல்ல முடியும்” என்று தெரிவித்தார்.

  உடல் நல குறைபாடு மற்றும் வயோதிகம் காரணமாக எந்த வேலையும் இவர்களால் செய்ய முடியவில்லை. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இவர்கள் தங்களுக்கு ஜீவனத்துக்கான தேவையை யாசித்துப் பெறுகின்றனர். அதுமட்டுமின்றி ஆலயங்கள் அல்லது பேருந்து நிலையங்களில் இரவு தூங்கிக் கொள்வார்கள். புதிய மொபட் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதில் முன்னி அமர்ந்து செல்லும் காட்சி வைரலாக பரவி வருகிறது.
  Published by:Vijay R
  First published:

  Tags: Trends, Viral

  அடுத்த செய்தி