ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஸ்பூனில் சாப்பிட சொன்னா ஸ்பூனையே சாப்பிட்டு வந்த நபர் - அறுவை சிகிச்சை மூலமாக அகற்றம்!

ஸ்பூனில் சாப்பிட சொன்னா ஸ்பூனையே சாப்பிட்டு வந்த நபர் - அறுவை சிகிச்சை மூலமாக அகற்றம்!

மாதிரி படம்

மாதிரி படம்

தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்திலும் இதுபோன்ற வினோத நிகழ்வு நடைபெற்றுள்ளது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Uttar Pradesh, India

  மருத்துவ உலகிற்கு இது நிச்சயம் சோதனையும், சவாலும் நிறைந்த காலகட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அல்சர், கேஸ்ட்ரிக் போன்ற பிரச்சினைகளால் வயிற்று வலி என்று நோயாளிகள் வந்து கொண்டிருந்த காலம் போய், இப்போதெல்லாம் வினோத காரணங்களால் வயிற்று வலியுடன் நோயாளிகள் வரத் தொடங்கியிருக்கின்றனர்.

  பம்மல் கே சம்பந்தம் திரைப்படத்தில் வயிற்றில் கடிகாரத்துடன் நடிகர் கமல் வேதனையை அனுபவித்து வருவார் அல்லவா? அது நம்ப முடியாத விஷயமாக அப்போது நமக்கு தோன்றினாலும், இப்போதெல்லாம் அதையே விஞ்சும் அளவுக்கு பல நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

  வயிற்றில் சிக்கும் வினோத பொருட்கள்

  அண்மையில் மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு 24 பரகானாஸ் மாவட்டத்தில் 27 வயதான இளைஞர் வயிற்று வலியுடன் வந்தார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது வயிற்றில் இருந்து செண்ட் பாட்டில் ஒன்றை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றினர்.

  இதற்கு முன்னதாக, ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் வயிற்றில் கிளாஸ் துண்டுகள் அறுவை சிகிச்சை மூலமாக நீக்கப்பட்டன. குடிப்பழக்கம் உடைய அவர், உடைந்த பாட்டிலில் இருந்த மதுவை அருந்தியதன் மூலமாக இது நிகழ்ந்திருக்கலாம் என தெரியவந்தது.

  தொடர்கதையாகும் வினோத நிகழ்வுகள்

  தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்திலும் இதுபோன்ற வினோத நிகழ்வு நடைபெற்றுள்ளது. முசாஃபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த விஜய் என்ற 32 வயது நபருக்கு அண்மைக்காலமாக வயிற்று வலி பிரச்சனை இருந்து வந்தது.

  இதை தொடர்ந்து, மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். நோயாளி விஜய்க்கு சிடி ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே ஆகிய பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர். இதில், பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, ஏதோ மெட்டல் போன்ற பொருட்கள் அவரது வயிறு நிறைய இருந்தன.

  இந்நிலையில், மருத்துவர்கள் குழுவினர் விஜய்க்கு அறுவை சிகிச்சை செய்தனர். இதில், மொத்தம் 62 ஸ்பூன்கள் அகற்றப்பட்டன. ஸ்பூன்களின் மேல் பகுதியை உடைத்துவிட்டு ஸ்டிக் போன்ற பகுதியை மட்டும் விழுங்கி வந்திருக்கிறார் விஜய்.

  மருத்துவர்கள் விஜய்யிடம் விசாரித்ததில் கடந்த ஓராண்டாக இதுபோன்று ஸ்பூன் விழுங்கி வருவதாக கூறினாராம் அவர். இதுகுறித்து மருத்துவர் ராகேஷ் குரானா கூறுகையில், “அறுவை சிகிச்சையை நாங்கள் 2 மணி நேரத்தில் செய்து முடித்தோம். கடந்த ஓராண்டாகவே ஸ்பூன்களை விழுங்கி வருவதாக அவர் கூறினார். தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்’’ என்று தெரிவித்தார்.

  இதற்கு முன்பு விஜய்க்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. அதில் இருந்து விடுவிக்க அவரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்திருக்கின்றனர். அங்கு ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக விஜய் ஸ்பூன்களை விழுங்க தொடங்கியிருக்கலாம் என்று உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

  Read More: தன் செலவுகளை கவனித்துக் கொள்ள ஆண் நண்பரை நியமித்த இளம்பெண் - இறுதியில் நடந்த ட்வீஸ்ட்

  எது எப்படியோ, நாமெல்லாம் காலையில் சாப்பிட்ட சாப்பாடு, மாலை வரி செரிமானம் ஆகவில்லை என்றாலே வயிற்று வலி வந்து விடுகிறது. இந்த நபர் எப்படி ஓராண்டாக ஸ்பூனை விழுங்கி வந்தாரா என்று நினைக்கையில் ஆச்சரியமும், அதிர்ச்சியுமே மிஞ்சுகிறது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Doctor, Mental Health