ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஊர் சொன்ன குறையை வைத்தே உலக பிரபலமாக மாறிய பெண்! கண் கலங்கும் கதை இதுதான்!

ஊர் சொன்ன குறையை வைத்தே உலக பிரபலமாக மாறிய பெண்! கண் கலங்கும் கதை இதுதான்!

உலகின் மிக அசிங்கமான பெண் என்று கூறப்பட்ட மேரி ஆன் பீவன்

உலகின் மிக அசிங்கமான பெண் என்று கூறப்பட்ட மேரி ஆன் பீவன்

தன்னுடைய குறையை நினைத்து மூலையில் முடங்கிவிடாமல் அதையே ஒரு கருவியாக எடுத்துக்கொண்டு உலகப் புகழ் பெற்றிருக்கிறார் என்பது மிக மிக அரிதானது!

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • internation, IndiaEnglandEnglandEngland

  உலக அழகிகள் பற்றி அனைவருக்கும் தெரியும். அழகு என்பது ஒவ்வொருவரின் கண்ணோட்டத்தில் வேறுபடும். தோற்றத்தின் அழகு காலம் செல்ல செல்ல குறைந்து போகும். பளபளப்பான சருமம், சுண்டியிழுக்கும் தோற்றமும், நாசி, பெரிய கண்கள் என்று வெளிப்புற பார்வைக்கு தெரிவது நாட்கள் செல்ல செல்ல மங்கி விடும்.

  உண்மையான அழகென்பது ஒரு நபரின் குணம், எப்படி நடந்து கொள்கிறார், அவருடைய வாழ்க்கை எவ்வாறு இன்ஸ்பையரிங் ஆக இருக்கிறது என்பதன் அடிப்படையில் தான் இருக்கும். உலகின் அசிங்கமான பெண் என்று அழைக்கப்படும் மேரியின் கதையைக் கேட்டால், இவரை விட உலகின் அழகான இருக்க முடியாது என்று கண்கள் கலங்கும்.

  உலகின் மிக அசிங்கமான பெண் என்று கூறப்பட்ட மேரி ஆன் பீவன் என்ற பெண்மணி கடந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்! இவருடைய கதை கண்களை கலங்க வைக்கும். 1874 ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் தான் மேரி.

  இவருக்கு 28 வயதாக இருக்கும் போது, திருமணம் நடந்தது மற்றும் அடுத்தடுத்து நான்கு குழந்தைகள் பிறந்தன. மேரிக்கு 32 வயது ஆகும் பொழுது அக்ரோமெகாலி என்ற ஒரு அரிதான ஹார்மோன்கள் குறைபாடு நோய் இவரை பாதித்தது.

  பொதுவாக உடல் வளர்ச்சிக்கு, உடல் சீராக செயல்படுவதற்கு உடலில் இருக்கும் அனைத்து ஹார்மோன்களும் சரியான அளவில் சுரக்க வேண்டும். இந்த ஹார்மோன் கோளாறு, பிட்யூட்டரி சுரப்பியை தூண்டிவிட்டு, வளர்ச்சிக்கான ஹார்மோனை அதிகமாக சுரக்கும்படி செய்தது. இதனால் மேரினுடைய தாடை, மூக்கு மற்றும் கை கால்கள் ஆகியவை பெரிதாகின வளர்ந்தன. முகம் நீளமாகி, கண்களுக்கும் இதழ்களுக்கும் இடையில் தாடை வளர்ந்து, தோற்றமே முழுவதுமாக மாறிப் போனது. துரதிஷ்டவசமாக அடுத்த சில ஆண்டுகளிலேயே மேரியின் கணவர் காலமானார்.

  பெரிதாக வசதி இல்லாத குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் தன்னுடைய குடும்பத்தினுடைய பொருளாதார தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் மேரிக்கு ஏற்பட்டது. உடல்நல பாதிப்பால் ஏற்பட்ட தனது குறைபாட்டையே துருப்பு சீட்டாக வைத்து மேரி சர்க்கஸில் கலந்து கொண்டார். அதுமட்டுமில்லாமல், அரிதாக உடல்ரீதியான குறைபாடுகள் நபர்களுக்கான ஷோக்களில் பங்கேற்றார். அத்தகைய நிகழ்ச்சிகளை பார்க்க வரும் நபர்கள் செலுத்தும் கட்டணத்தின் மூலம் இவர் தன்னுடைய பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்தார்.

  1917 ஆம் ஆண்டில் உலகின் அசிங்கமான பெண் என்ற போட்டியில் மேரி கலந்து கொண்டார்.
   
  View this post on Instagram

   

  A post shared by @griefhistory  வரலாற்றின் மிக அற்புதமான மற்றும் வினோதமான சாகசம் செய்தவர்களின் என்சைக்ளோபீடியாவில் மேரி ஆன் பீவனின் பெயரும் இடம் பெற்றுள்ளது. மேரி, அயர்லாந்து ட்ரீம் லாண்ட் ஷோவில் பங்கேற்று இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தான் இறக்கும்வரை பெரும்பாலான நேரத்தை அங்கே செலவிட்டுள்ளார். உலகப் புகழ்பெற்ற, ரிங்க்லிங் பிரதர் சர்க்கஸிலும் 1933 ஆம் ஆண்டு வரை பலவித நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று இருக்கிறார்.

  கடந்த நூற்றாண்டைச் சேர்ந்த மேரி பற்றிய செய்தி தற்போது எப்படி வைரலாக பகிரப்பட்டு வருகிறது என்று கேள்வி எழும்பலாம்!

  Read More: குடித்துவிட்டு ஹாங்ஓவர் ஆகிவிட்டால் ஜாலியாக லீவு எடுங்க: இப்படி உண்மையை சொல்லி லீவு கூட எடுக்கிறாங்களாம் பா?

   

  கடந்த வாரம் கிரீஃப் ஹிஸ்டரி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மேரியின் புகைப்படங்களுடன் அவருடைய கதை. பகிரப்பட்டது அதில் மேரி எவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறார் அதை எப்படியெல்லாம் எதிர்கொண்டு செய்திருக்கிறார் என்பதைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பதிவு வைரலாகி 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை குவித்துள்ளது.

  தன்னுடைய குறையை நினைத்து மூலையில் முடங்கிவிடாமல் அதையே ஒரு கருவியாக எடுத்துக்கொண்டு உலகப் புகழ் பெற்றிருக்கிறார் என்பது மிக மிக அரிதானது! உலகத்தில் இருக்கும் அனைவருக்குமே இது மிகப்பெரிய ஒரு ஊக்கமாகவும் இருக்கும்.

  Read More: ஹெல்மெட் போடாததற்கு ஆதாரத்தை காட்டுங்க... சவால்விட்டு அசிங்கப்பட்ட வாகன ஓட்டி

  மேரியை பாதித்த இந்த நோய் பொதுவாக ஐம்பதாயிரத்தில் மூன்று நபர்களை பாதிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பெரும்பாலானவர்களுக்கு கைகள் அல்லது கால்கள் தான் பெரிதாக வளரும். ஆனால் அரிதானவர்களுக்கு நெற்றி, தாடை மற்றும் மூக்கு ஆகியவையும் பெரிதாகும்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Trending, Trending News