அழகான பட்டாம்பூச்சி வடிவ ஐஸ்கட்டிகள் - வைரலாகும் புகைப்படங்கள்!

அழகான பட்டாம்பூச்சி வடிவ ஐஸ்கட்டிகள்

முதல் படத்தில், பிங்க் நிற பானம் ஒன்று உள்ளது. அதில் மிதக்கும் ஐஸ்கட்டிகள் பிங்க் நிற பட்டாம்பூச்சியாக, கண்கவரும் வண்ணம் காட்சியளிக்கின்றன.

 • Share this:
  “கண்டதும் காதல் கொண்டேன்” என்று முதல் பார்வையிலேயே காதல் கொள்வது இயல்பு தான். ஆனால், இது எதற்கெல்லாம் பொருந்தும் என்ற வரையறை இருக்கிறதா? ஐஸ் கட்டிகளை பார்த்தால் காதல் வருமா? கண்டிப்பாக வரும்.

  அழகான பட்டாம்போச்சி வடிவ ஐஸ் கட்டிகளைக் கண்டதும் காதல் கொண்டதாக டிவிட்டர் யூசர் ஒருவர் டிவீட்டில், கியூட்டான பட்டாம்பூச்சி வடிவத்தில் ஐஸ்கட்டிகளின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

  ஐஸ்கட்டிகளை, அதன் அடிப்படையான கியூப் வடிவம் தவிர்த்து, பல்வேறு வடிவத்தில் உருவாக்கலாம். அதற்கேற்ற ஐஸ் டிரேக்கள் கிடைக்கின்றன. வட்ட வடிவம், நீள் சதுரம், செவ்வகம், உள்ளிட்ட வடிவங்களில் ஐஸ் கட்டிகளைப் பார்த்துள்ளோம். ஆனால், பட்டாம்பூச்சி வடிவ ஐஸ் கட்டிகளை பார்த்துள்ளீர்களா?

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பட்டாம்பூச்சி வடிவ ஐஸ் கட்டி, டிவிட்டரில் வைரலாகி உள்ளது. டிவிட்டர் யூசரின் பதிவில் பகிரப்பட்ட இரண்டு புகைப்படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த ஐஸ் கட்டிகளை நீங்கள் பார்க்கும் போது, உங்களுக்கும் நிச்சயமாக ஆச்சரியமாக இருக்கும். அந்த புகைப்படங்கள் இங்கே.

  @blestallure என்ற டிவிட்டர் யூசர், “எனக்கு பட்டாம்பூச்சி வடிவ ஐஸ் கட்டிகள் தேவை” என்று இந்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இரண்டு படங்களில், இரண்டு வெவ்வேறு நிறத்தில் உள்ள பானங்களில் ஐஸ் கட்டிகள் மிதக்கின்றன.

  அதில், முதல் படத்தில், பிங்க் நிற பானம் ஒன்று உள்ளது. அதில் மிதக்கும் ஐஸ்கட்டிகள் பிங்க் நிற பட்டாம்பூச்சியாக, கண்கவரும் வண்ணம் காட்சியளிக்கின்றன. இரண்டாவது படத்தில், பச்சை நிற பானம். அதில் மிதக்கும் பட்டாம்பூச்சி ஐஸ்கட்டிகள், பச்சை நிறத்தில் காணப்படுகின்றன.

  Also read... தண்ணீர் தொட்டியில் சிக்கி கொண்ட புதிதாக பிறந்த யானை குட்டி - வைரலாகும் மீட்பு வீடியோ!

  இதனை பார்க்கும் போது, ஐஸ்கட்டிகள் என்பதே மறந்து போகும் அளவு அவ்வளவு அழகாக காட்சியளிக்கின்றன. ஒரு கோணத்தில் பார்க்கும் போது, வண்ண ஐஸ்கட்டிகளோ என்று நினைக்கத் தோன்றும்.

  ஆகஸ்ட் 4 ஆம் தேதி, பகிரப்பட்ட இந்த புகைப்படங்கள், மிகக்குறைவான நேரத்திலேயே, 3.9 லட்சம் லைக்குகள் பெற்றன. தொடர்ந்து பகிரப்பட்டும் வருகிறது. இந்த புகைப்படங்களைப் பார்த்த யூசர்கள், தொடர்ந்து கமெண்ட்டுகள் தெரிவித்தும், பகிர்ந்தும் வருகின்றனர். அது மட்டுமின்றி, பானங்களில் இருப்பது போன்ற டிசைனிலேயே ஐஸ் டிரேக்கள் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்பது பற்றியும் பகிர்ந்து கொண்டனர்.

  “நான் இதைப் பார்த்தேன். பார்த்தவுடனே காதல் கொண்டேன். இப்போது நான் அதனை கண்டுபிடிக்க வேண்டும்” என்று முதலில் பகிர்ந்த டிவிட்டர் யூசர் போலவே நீங்கள் இந்த பட்டாம்பூச்சி ஐஸ்கட்டிகளைப் பார்த்து உணர்கிறீர்களா?

  “omg, எனக்கும் அதே போல ஒன்று வேண்டும்” என்று ஒருவர் கமென்ட் செய்திருந்தார்.

  “என்னுடைய வங்கிக்கணக்கை கொடுத்து விடுகிறேன்” என்று மற்றொருவர் நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார்.
  Published by:Vinothini Aandisamy
  First published: