பனிப்புயலுக்கு அஞ்சி காருக்குள் பதுங்கிய கரடியின் சாதுர்யம்... வீடியோ!

மிகவும் லாவகமாக காரின் கதவை தனது கைகளால் திறந்து அந்தக் கரடி உள்ளே ஏறி அமர்ந்துகொண்டது.

பனிப்புயலுக்கு அஞ்சி காருக்குள் பதுங்கிய கரடியின் சாதுர்யம்... வீடியோ!
வீடியோகாட்சி
  • News18
  • Last Updated: December 2, 2019, 6:51 PM IST
  • Share this:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட கரடி ஒன்று நகருக்குள் நுழைந்தது. ஒரு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரைக் கண்ட கரடி அதன் அருகே வந்தது. மிகவும் லாவகமாக காரின் கதவை தனது கைகளால் திறந்து அந்தக் கரடி உள்ளே ஏறி அமர்ந்துகொண்டது.

பனிப்புயலுக்காக ஒதுங்கிய கரடியால் மீண்டும் காரைவிட்டு வெளியே வரத் தெரியவில்லை. இதைக் கண்ட அந்தக் காரின் உரிமையாளர் மெதுவாக வந்து காரின் மற்றொரு பக்கக் கதவைத் திறந்துவைத்துவிட்டு ஓடிவிட்டார். சில விநாடிகளில் கரடி தப்பித்தோம் எனக் கதவைத் திறந்துகொண்டு துள்ளிக்குதித்து ஓடியது.




இப்பகுதியில் இதுபோன்று அடிக்கடி காருக்குள் கரடிகள் ஏறி சேதங்களையும் ஏற்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: மூங்கில் குச்சிகளால் ஆன மிகவும் உயரமான சைக்கிள்... அநாயசமாக ஓட்டிக்காட்டிய இளைஞர்!
First published: December 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்