நம் நாட்டில் திருமணங்கள் என்பது பல சடங்குகளை உள்ளடக்கிய பிரமாண்டமான மற்றும் ஆடம்பரமான நிகழ்வாக இருக்கிறது. பொருளாதார நிலையை பொருட்படுத்தாமல் அனைத்து மணமக்களும் தங்களது திருமணத்தன்று எப்போதும் இருப்பதை விட அழகாகவே இருக்க விரும்புகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. பலர் தங்கள் திருமண உடைகள் மற்றும் மேக்கப் தோற்றத்தை பற்றி சில மாதங்களுக்கு முன்பே யோசனை செய்கிறார்கள். திருமணத்திற்கு முன் உடல் எடையை குறைப்பதிலிருந்து சரியான மணப்பெண் உடையை அணிவது வரை எந்தளவு தங்களை தனித்துவமாக காட்ட முடியுமோ அதற்கான செயல்களில் மணப்பெண்கள் இறங்குகிறார்கள்.
அந்த வகையில் திருமணத்தன்று தங்களை சிறப்பாகவும், வித்தியாசமாகவும் காட்ட முயற்சிப்பதில் சிலர் வினோதமான ஃபேஷன் யோசனைகளை முயற்சித்து பார்ப்பார்கள். இதுபோன்ற முயற்சியில் ஒரு பெண் தனது திருமணத்திற்காக தனித்துவ ஹேர்ஸ்டைலுடன் இருக்கும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. அப்படி என்ன ஸ்பெஷல் ஹேர் ஸ்டைல் என்று நீங்கள் யோசிக்கலாம். வழக்கமாக மணமகளுக்கான ஹேர் ஸ்டைலில் இடம்பெறும் ரைன்ஸ்டோன்ஸ் (rhinestones) அல்லது பூக்கள் இந்த ஸ்டைலில் இடம்பெறவில்லை. மாறாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ள சாக்லேட்ஸ் மற்றும் டோஃபிஸ்களை கொண்டு செய்யப்பட்டுள்ளதே இந்த சிகையலங்காரம் சோஷியல் மீடியாவில் வைரலாக காரணம்.
Read More : மெட்ரோ ரயிலில் நுழைந்த சந்திரமுகி! பதறி ஓடிய பயணிகள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
சில நாட்களுக்கு முன் _chitras_makeup_artist_28 என்ற இன்ஸ்டா அக்கவுண்டில் இருந்து ஷேர் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோ சுமார் 6 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை கொண்டுள்ளது. ஆனால் இந்த ஹேர் ஸ்டைல் நெட்டிசன்களை பெரிதாக கவரவில்லை. ஏனென்றால் சில யூஸர்கள் இந்த வித்தியாசமான ஹேர் ஸ்டைலை பாராட்டினாலும் பலர் இது அவ்வளவாக அழகாக இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.
View this post on Instagram
ஒரு யூஸர் கூறுகையில் மணப்பெண்ணின் மேக்கப் நன்றாக உள்ளது, ஆனால் அவரது முட்டாள்தனமான தேர்வுகளால் பாழாகிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு யூஸர் இந்த மேக்கப்பிற்கு ஆதரவாக கமெண்ட் செய்துள்ளார். "நண்பர்களே, இது ஒருவரின் படைப்பாற்றல் மற்றும் திறமை, எனவே நாம் அதை விமர்சிக்காமல் பாராட்ட வேண்டும்" என்று கூறி இருக்கிறார்.
மற்றொரு யூஸர் குறிப்பிடுகையில் "நாங்கள் குழந்தை பருவத்தில் வீட்டில் விளையாடும் போது இது போன்ற செயல்களை செய்திருக்கிறோம்" என கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிகை அலங்காரங்களை இதற்கு முன்பு பார்த்திருக்கிறோம், ஆனால் இது மிகவும் தனித்துவமானது என்று ஒரு யூஸர் கூறி இருக்கிறார். மற்றொரு யூஸர் குழந்தைகள் அருகில் இருந்தால் கவனமாக இருக்க வேண்டும் என்று வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.