ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மொட்டையடிக்க வந்த கேன்சர் நோயாளி.. சலூன் கடைக்காரர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்.. கண் கலங்க வைக்கும் சம்பவம்!

மொட்டையடிக்க வந்த கேன்சர் நோயாளி.. சலூன் கடைக்காரர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்.. கண் கலங்க வைக்கும் சம்பவம்!

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

பொதுவாக கேன்சர் நோயாளிகளுக்கு ரேடியேஷன் தெரபி, கீமோதெரபி ஆகிய சிகிச்சைகளைக் கொடுக்கும் போது ஏற்படும் உஷ்ணத்தால் முடி உதிர்தல் ஏற்படும் வழக்கம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இணைய ஆதிக்கத்தில் நாம் ஒவ்வொரு நாளும் பயணித்துக் கொண்டிருந்தாலும், ஒரு சில விஷயங்கள் மட்டும் நம்மை விட்டு எப்போதும் நீங்காது. குறிப்பாக ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டா போன்ற சோசியல் மீடியாக்களில் வைரலாகும் வீடியோக்களில் சிலர் நமது நெஞ்சை ரணமாக்குவதோடு நமக்கு பல அறிவுரைகளைத் தரும் விதமாகவே அமையும். அப்படியொரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி சில நாள்களிலேயே பல மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.

உயிர்கொல்லி நோய்களில் ஒன்றாக உள்ளது புற்றுநோய். இந்நோயின் பாதிப்பை தொடக்கத்திலேயே கண்டறிவது கஷ்டம். ஒருவேளை அப்படி நாம் கண்டறிந்து சிகிச்சைகள் பெற்றுக்கொண்டாலும் இதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்பது மிகவும் மோசமானது. பொதுவாக கேன்சர் நோயாளிகளுக்கு ரேடியேஷன் தெரபி, கீமோதெரபி ஆகிய சிகிச்சைகளைக் கொடுக்கும் போது ஏற்படும் உஷ்ணத்தால் முடி உதிர்தல் ஏற்படும் வழக்கம்.

ஒருவேளை அவர்களுக்கு கேன்சர் முற்றி போகும் சமயத்தில் தினசரி ஒரு பேக்கேஜ் போல் ரேடியேஷன் தெரபி கொடுக்கப்படும் போது, முடி மொத்தமாக கொட்டி ஆங்காங்கே இருக்கும். இதனையடுத்து முடியே தேவையில்லை என மொட்டையடித்துக் கொள்வார்கள். இது வழக்கமான நிகழும் விஷயம் என்றாலும், சில நேரங்களில் இதுப்போன்றவர்களைப் பார்க்கும் நம்மை அறியாமலே கண்கள் கலங்கிவிடுகிறது.

இப்படித் தான் தற்போது ட்விட்டரில் வைரலாகும் வீடியோவில் இருந்தாலும், அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. அப்படி என்ன இருந்தது தெரியுமா? குட்நியூஸ் மூவ்மென்ட் என்ற ட்விட்டரில் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோவில், ஒரு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் சலூன் கடையில் அமர்ந்திருப்பது போன்று வீடியோ தொடங்குகிறது. தனது முடியை பார்பர் ஷேவ் செய்யத் தொடங்கியதும், கண்களில் கண்ணீர் ததும்புகிறது. அந்த சூழலில் பெண்ணிற்கு ஆறுதல் தெரிவித்தபடி முடி முழுவதையும் மொட்டையடித்து விடுகிறார்.

இந்த வீடியோவைப் பார்க்கும் போதே மிகவும் வேதனையாக உள்ளது. இறுதியில் அப்பெண்ணின் வேதனையைப் பார்க்க முடியாத அந்த பார்பர், தனது முடியையும் அவருக்கு முன்னதாக மொட்டையடித்துக் கொள்கிறார். சுமார் 1.21 நிமிட வீடியோ கிளிப் தான் என்றாலும் பகிரப்பட்ட சில தினங்களிலே இதுவரை 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.

இதோடு இது தான் உண்மையான கண்ணீரைத் துடைக்கும் தருணம் என்றும், பார்பரின் இச்செயல் மிகுந்த பாராட்டுதலுக்குரியது என கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். மேலும் மார்பக புற்றுநோய் பாதிக்கப்பட்டுவிட்டதே என வீட்டிலேயே முடங்காமல் சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழ வாருங்கள் எனவும், எங்களின் ஆசிர்வாதம் என்றுமே உங்களுக்கு உள்ளது என்பது போன்ற கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

First published:

Tags: Breast cancer, Trending, Viral