முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து டிரக்கில் ஏற்றி சென்ற கும்பல்... தூங்கி எழுந்த காவலாளி அதிர்ச்சி

ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து டிரக்கில் ஏற்றி சென்ற கும்பல்... தூங்கி எழுந்த காவலாளி அதிர்ச்சி

சிசிடிவி கேமிரா

சிசிடிவி கேமிரா

குற்றம் நடந்த இடத்திற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில், சரக்கு வாகனத்தில் இயந்திரத்தை எடுத்துச் செல்லும் கும்பலின் படங்கள் பதிவாகியுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • bang, India

ஏடிஎம்களில் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் சமீபத்தில் குறைந்து இருந்த நிலையில் , சமீபத்தில் ஒரு கும்பல் பெங்களூரு  நகரில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தையே பெயர்த்து  திருடிச் சென்றுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களுருவில் சனிக்கிழமை அதிகாலை ஹர்லூர் பிரதான சாலையில் மின் இணைப்பை துண்டித்து, சிசிடிவி கேமராவில் கருப்பு பெயின்ட் தெளித்து  ஏடிஎம் ஒன்றில் முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட கும்பல் இயந்திரத்தை எடுத்துச் சென்றுள்ளனர் .

பாங்க் ஆப் பரோடா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம்  மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் காவலாளி தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். இந்த நேரத்தை பயன்படுத்திக்கொண்டு 4 பேர் கொண்ட கும்பல் ஒரு சரக்கு வண்டியில் வந்து இறங்கியுள்ளனர்.

இதையும் படிங்க : அறிவியல் கண்காட்சி... காட்சிப்படுத்தும்போது வெடித்த ராக்கெட்.. 11 மாணவர்கள் காயம்!

ஏடிஎம்-ல் புகுந்த கும்பல், முதலில் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றதாக போலீசார் தெரிவித்தனர். அவை தோல்வியடைந்ததால், மின் இணைப்பை துண்டிக்க முடிவு செய்து, சிசிடிவி கேமராவில் கருப்பு பெயிண்ட் தெளித்துள்ளனர்.

பின்னர், ஏடிஎம் இயந்திரத்தை முழுமையாக பெயர்த்து எடுத்து சரக்கு வண்டியில் எடுத்து சென்றுள்ளனர். குற்றம் நடந்த இடத்திற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில், சரக்கு வாகனத்தில் இயந்திரத்தை எடுத்துச் செல்லும் கும்பலின் படங்கள் பதிவாகியுள்ளன.

இதையும் படிங்க: 1 கோடி சம்பளம் ஆனால் வேலையே இல்லையாம்..! அந்த ஊழியர் என்ன செய்தார் பாருங்கள்..!

மறுநாள் காலையில் காவலாளி  பார்த்தபோது ஏடிஎம்  அடித்து நொறுக்கப்பட்டதையும், இயந்திரத்தோடு  ₹3.13 லட்சம் பணத்தை திருடர்கள் எடுத்துச்சென்றதும் தெரிய வந்து வங்கிக் கிளை மேலாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

பெல்லந்தூர் போலீசார், சம்பவ இடத்தை ஆய்வு செய்வதற்காக, கைரேகை நிபுணர்கள் ,மோப்ப நாய்கள் படையினரை பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். திருடிய கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என ஒயிட்பீல்டு பிரிவு டிசிபி எஸ்.கிரீஷ் தெரிவித்தார்.

First published:

Tags: ATM, Bangalore, Theft