Home /News /trend /

ஒரு கால் இல்லை.. ஊன்றுகாலோடு சொந்த காலில் உழைக்கும் நபர் - வைரலாகும் நெகிழ்ச்சி பதிவு.!

ஒரு கால் இல்லை.. ஊன்றுகாலோடு சொந்த காலில் உழைக்கும் நபர் - வைரலாகும் நெகிழ்ச்சி பதிவு.!

ட்ரெண்டிங்

ட்ரெண்டிங்

Trending | ஒரு கால் இல்லாத போதும் குடும்பத்திற்காக சொந்த காலில் உழைக்க வேண்டும் என்று ஊன்றுகோல் உதவியோடு உணவு டெலிவரி செய்து வரும் பெங்களூருவைச் சேர்ந்த கிருஷ்ணப்பா ரத்தோடை பற்றி நெகிழ்ச்சி கதை தான் தற்போது இணையத்தில் வைரலாகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Bangalore, India
இன்றைக்கு வீட்டில் சமைக்கிறோமோ? இல்லையோ? ஸ்விக்கி, சொமோட்டோ போன்ற உணவு விநியோக தளங்களில் ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம் மக்களிடம் அதிகரித்துவிட்டது. மழை, வெயில், குளிர் என எதையும் பொருட்படுத்தாமல் ஆர்டர் செய்த சில மணி நேரங்களிலேயே உணவுகளை முறையாக டெலிவரி செய்யும் கடமை டெலிவரி ஏஜெண்டுகளுக்கு உள்ளது. இன்றைக்கு பெரும்பாலான இளைஞர்கள் வேலை எதுவும் கிடைக்காத போது உணவு விநியோக தளங்களில் தான் அதிகம் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் சில நேரங்களில் சரியான நேரத்தில் உணவை டெலிவரி செய்யவில்லை என்றால் ஆர்டர் செய்தவர்கள் போன் செய்து எப்ப வருவீர்கள்? என்று கேட்டு குடைச்சல் செய்வார்கள். இப்படித் தான் பெங்களூருவில் வசிக்கும் லிங்க்ட்-னில் பணியாற்றும் ஊழியர் ரோஹித் குமார் சிங் என்பவர் தனக்காக உணவை ஸ்விக்கியில் ஆர்டர் செய்திருக்கிறார். கடுமையான மழையின் காரணமாக வர தாமதம் ஆன நிலையில் பொறுமை தாங்காமல் திட்ட வேண்டும் என்று நினைத்தவரைப் பற்றி சோசியல் மீடியாவில் பாராட்டி எழுதியுள்ளார்..

ரோஹித் குமார் சிங் என்பவர் சமூக வலைத்தளத்தில், பகிர்ந்துள்ள அந்த பதிவில், நான் ஸ்விக்கியில் உணவை ஆர்டர் செய்திருந்தேன். குறிப்பிட்ட நேரத்திற்குள் வராமல் அதிக நேரமானது. வழக்கம் போல உணவு டெலிவரி மேனுக்கு கால் செய்து எங்கே உள்ளீர்கள்? என்று கேட்டேன். அவரும் நான் உங்களது ஆர்டரைக் கொண்டு வந்துகொண்டு இருக்கிறேன். விரைவில் வந்துவிடுவேன் என்று நிதானமாக பதலளித்ததாகவும் பதிவிட்டுள்ளார்.ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லை. மீண்டும் உணவு டெலிவரி செய்யும் நபருக்கு கால் செய்த போது, ஒரு நிமிடம் வந்துவிடுவேன் என்று பதிலளித்துள்ளார். பின்னர் 10 நிமிடங்களுக்குப் பிறகு காலிங் பெல் அடித்ததும் திட்டுவதற்காக வந்த என்னை வருத்தமடைய செய்தார் அந்த உணவு டெலிவரிமேன் என்று தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தெரிவித்தது அனைவரையும் வருத்தமடைய செய்துள்ளது.

Also Read : கைக்குழந்தையுடன் உணவு டெலிவரி செய்யும் தந்தை.. இணையத்தை வென்ற வீடியோ!

ஆம், ரோஹித் தன்னுடைய பதிவில், 40 வயது நரைத்த முடி, ஒற்றைக்காலுடன் சப்போட்டிற்காக ஊன்றுகோல் வைத்திருந்த மாற்றுத்திறனாளி தான் கிருஷ்ணப்பா என்றும் அவரைப் பார்த்ததும் நான் மன்னித்து விடுங்கள் என்று கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கிருஷ்ணப்பா ரத்தோட், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக கொரோனா தொற்று சமயத்தில் தன்னுடைய வேலையை இழந்ததாகவும், தனக்கு 3 குழந்தைகள் இருப்பதால் இந்த பணியைத் தொடர்வதாகத் தெரிவித்தார் எனவும் பதிவிட்டிருந்தார்.பொதுவாக உணவு டெலிவரி மேனாக வேலை பார்ப்பது என்பது கஷ்டமான பணி என்றாலும் பொருளாதார சூழல் காரணமாக இந்த முடிவை அவர் எடுத்துள்ளார் என மிகுந்த வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார். காலையில் பணியை ஆரம்பிப்பதாகவும் ஓய்வின்றி வேலைப்பார்த்து முடிப்பேன் என்று பேசிக்கொண்டிருக்கும் போது என்னுடைய அடுத்த டெலிவரிக்கு நேரம் ஆகிவிட்டது கிளம்புகிறேன் என்று அவர் தெரிவித்த வார்த்தை என்னை நெகிழ செய்ததாக ரோஹித் சோசியல் மீடியா வாயிலாக தெரிவித்துள்ளார்.

Also Read : ஜொமோட்டோ உணவு டெலிவரி ஊழியரை காலணியால் தாக்கிய இளம்பெண் - அதிர்ச்சி வீடியோ

இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த மாற்றுத்திறனாளி கிருஷ்ணப்பா ரத்தோட்டிற்கு பலர் உதவு முன்வந்துள்ளார். குறிப்பாக தங்களது நிறுவனத்தில் வேலை இருப்பதாகவும் அவரின் எண்ணை எங்களுக்கு அனுப்பி வையுங்கள் என்றும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். சோசியல் மீடியாவில் வலம் வரும் இந்த ஒரு பதிவால் ஒரு குடும்பமே மகிழ்ச்சியடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Food Delivery boys, Swiggy, Trending

அடுத்த செய்தி