முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ரூ.12,000 பட்ஜெட்டில் 28 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்த பெங்களூரு நபர் - எப்படி சாத்தியமானது.?

ரூ.12,000 பட்ஜெட்டில் 28 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்த பெங்களூரு நபர் - எப்படி சாத்தியமானது.?

Visal Vishwanath (Credits: Instagram)

Visal Vishwanath (Credits: Instagram)

Trending | காசிருந்தால் பயணம் செல்லலாமே இதில் என்ன புதுமை என்று யோசிக்கிறீர்களா.? 9 மாதங்கள் மற்றும் 28 மாநிலங்களுக்கு இவர் சுற்று பயணம் செய்ததற்கான பட்ஜெட் வெறும் ரூ.12,000 மட்டும் தான்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் கொரோனா பாதிப்புகள் பலரது வாழ்க்கை மற்றும் வணிகத்தை புரட்டி போட்டு உள்ளது.

கோடிக்கணக்கான மக்களின் வணிகங்கள், திட்டங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையை பாதித்த கோவிட்-19 காரணமாக பலர் இயல்பு நிலையை இழந்தனர். பெரும்பாலான மக்களை போலவே பெங்களூரை சேர்ந்த ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை (Event management company) நடத்தி வந்த விஷால் விஸ்வநாத்தும், கோவிட்-19-ன் கடும் தாக்கத்தால் பிசினஸ் நடத்த முடியாமல் அவதிப்பட்டார். தொற்றுநோயால் நஷ்டத்தை சந்தித்தார்.

ஆனாலும் வாழ்வை அர்த்தமுள்ளதாக்க முடிவு செய்தார். அதற்கு அவர் கையில் எடுத்தது பயணம் என்ற அற்புத ஆயுதம். வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதி பயணம். ஏனெனில் உங்களது மெஷின் வாழ்க்கைக்கு இது ஓய்வு கொடுக்கிறது. பயணம் உண்மையில் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. எனவே இந்தியா முழுவதும் பயணம் மேற்கொள்ள முடிவு செய்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தியும் உள்ளார்.

காசிருந்தால் பயணம் செல்லலாமே இதில் என்ன புதுமை என்று யோசிக்கிறீர்களா? இவர் கிட்டத்தட்ட 9 மாதங்களில் இந்தியாவின் 28 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். இதில் என்ன ஹைலைட் என்று தானே நினைக்கிறீர்கள்? 9 மாதங்கள் மற்றும் 28 மாநிலங்களுக்கு இவர் சுற்று பயணம் செய்ததற்கான பட்ஜெட் வெறும் ரூ.12,000 மட்டும் தான். தற்போது பெங்களூரு BTM லேஅவுட் பகுதியில் வசிக்கும் விசால், 278 நாட்களில் நாடு முழுவதும் 28 மாநிலங்களுக்கான முழு பயணத்தையும் வெறும் ரூ.12,000 பட்ஜெட்டில் எப்படி முடித்தார் என்று ஆச்சரியமாக இருக்கிறதா? தொடர்ந்து படியுங்கள்..

Also Read : ஊழியர்களுக்கு இலவச மேட்ரிமோனியல் சேவையை வழங்கும் மதுரை ஐடி நிறுவனம்!

இது குறித்து இன்ஸ்டாவில் போஸ்ட் ஒன்றை அவரே ஷேர் செய்து உள்ளார். அதில் 'இறுதியாக, நான் நினைத்ததை செய்து விட்டேன்..வாழ்க்கை. எனக்கு கிடைத்த சிறந்த பரிசு. 28 மாநிலங்களையும் உள்ளடக்கிய எனது அகில இந்திய பேக்பேக்கிங்கின் 278 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளேன், வெறும் ரூ.12,000 பட்ஜெட்டில்...




 




View this post on Instagram





 

A post shared by Visal Viswanath (@nomadic_visal)



எனது அனுபவங்களை வார்த்தைகளில் விவரிப்பதில் சிரமம் என்று கூறி உள்ள இவர், இந்த 9 மாதங்கள் நான் சென்ற இடங்கள், நான் சந்தித்த மனிதர்கள், நான் ஏறிய மலைகள், நான் நடந்த சாலைகள், நான் உண்ட உணவு, ஒவ்வொரு கணமும் என்னை வெவ்வேறு வகையான உணர்ச்சிகளுக்கு அழைத்து சென்றது. ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்தேன் என்று உறுதியாக சொல்ல முடியும் என்று கூறி உள்ளார்.




 




View this post on Instagram





 

A post shared by Visal Viswanath (@nomadic_visal)



இந்த 9 மாத சுற்றுப்பயணத்தில் இவர் சென்ற இடங்களில் எல்லாம் ரூம் போட்டு தங்கவில்லை, காசை வீணாக செலவழிக்கவில்லை.. மாறாக கூடாரம் அமைத்து அதில் தங்குவது, கிடைத்த இடத்தில் தூங்குவது, பெரும்பாலான நேரம் பழங்களைத் தின்று வாழ்வது, பயணத்திற்காக லிஃப்ட் கேட்பது உள்ளிட்ட செயல்களை செய்து தனது நோக்கத்தை நிறைவேற்றி உள்ளார் இந்த பெங்களூரு மனிதர்.




 




View this post on Instagram





 

A post shared by Visal Viswanath (@nomadic_visal)



பெங்களூருவிலிருந்து கவுகாத்திக்கு ரயிலில் செல்வதில் துவங்கி பல மாநிலங்களுக்கு விசிட் அடித்து கடைசியாக அவரது சொந்த ஊரான கண்ணூரில் தனது பயணத்தை முடித்துள்ளார் Visal Vishwanath. பல்வேறு நபர்களுடன் பழகுவதும், வெவ்வேறு கலாச்சாரங்களை பார்த்து அனுபவிப்பதும் எனது இந்த பயணத்தின் நோக்கம். 32 வருடங்களில் நான் பெற்ற அனுபவத்தை விட இந்தப் பயணம் எனக்கு அதிக அனுபவத்தைக் கொடுத்தது என்றும் கூறி இருக்கிறார்.

First published:

Tags: India, Trending