ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இது குப்பை இல்லை ஹேண்ட் பேக்! பேஷன் ஷோவை ஆச்சரியப்படுத்திய லேஸ் பாக்கெட் கைப்பை!

இது குப்பை இல்லை ஹேண்ட் பேக்! பேஷன் ஷோவை ஆச்சரியப்படுத்திய லேஸ் பாக்கெட் கைப்பை!

லேஸ் கைப்பைகள்

லேஸ் கைப்பைகள்

நாம் தினமும் பெட்டிக் கடையில் பார்க்கும் லேஸ் பாக்கட்டை ஆடம்பர ஆடை அலங்கார பொருள்கள் தயாரிக்கும் நிறுவனம் கைப்பையாகத் தயார் செய்து அறிமுகம் செய்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • intern, IndiaParisParis

  பாலென்சியாக (Balenciaga) என்ற பிரபல ஆடம்பர பொருள்கள் தயாரிக்கும் நிறுவனம் பாரிஸ் பேஷன் விழாவில் லேஸ் வடிவில் வடிவமைத்த கைப்பையை வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த கைப்பையின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

  அதைப் பார்த்த நெடிசன்கள் விலகா அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். பாரிஸ் பேஷன் விழாவில் நடைமேடையில் நடந்து வந்த மாடல் கையில் சிப்ஸ் பாக்கெட் இருந்துள்ளது. அதைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்ட நிலையில் அது உண்மையில் ஒரு பை என்பதைத் தெரிவித்துள்ளனர்.

  லேஸ் நிறுவனத்துடன் கைகோத்து இந்த வித்தியாசமான கைப்பையை உருவாக்கியுள்ளனர். நெட்டிசன்கள் பலரும் கடையில் லேஸ் சிப்ஸ் வாங்கி அதைப் புகைப்படம் எடுத்துத் தான் அந்த ஆடம்பர விலை உயர்ந்த கைப்பையை வைத்துள்ளனர் என்று சொல்லிக்கொண்டு வருகின்றனர். அந்த அளவிற்கு லேஸ் சிப்ஸ் பாக்கெட்டிற்கும் கைப்பைக்கும் பத்து பொருத்தங்களும் பக்காவாக உள்ளது.
   
  View this post on Instagram

   

  A post shared by Balenciaga by Demna (@demnagram)  லேஸ் பையில் புகைப்படத்தை நிறுவனத்தின் வடிவமைப்பாளர் டெம்னா குவாசலியா (Demna Gvasalia) வெளியிட்டுள்ளார். அதில் சிவப்பு, மஞ்சல் மற்றும் நீலம் என்று மூன்று நிறங்கள் இடம்பெற்றுள்ளது.

  Also Read : வாங்க, வாங்க..! டெலிவரி பாய்க்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு - வைரலான வீடியோ!

  அதனைத் தொடர்ந்து லேஸ் நிறுவனமும் கையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. ஃபேஷன் என்று பலவிதமான ஆடம்பர அலங்காரப் பொருட்கள் ஒவ்வொரு ஆண்டும் வெளிவருவதில் இதும் ஒன்று என்று இணைந்துள்ளது.

  Published by:Janvi
  First published:

  Tags: Fashion, Viral