• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • 24 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட பாகுபலி மோமோ - இணையத்தில் வைரல்

24 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட பாகுபலி மோமோ - இணையத்தில் வைரல்

24 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட பாகுபலி மோமோ

24 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட பாகுபலி மோமோ

மும்பையில் உள்ள மெஸ்ஸி அடா என்ற கடையில் தான் இந்த பாகுபலி மோமோ விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  • Share this:
இந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான உணவுவகைகள் , தின்பண்டங்கள் பிரபலமானதாக இருக்கும். காரம் , புளிப்பு, இனிப்பு என வெவ்வேறு சுவைகளில் விற்பனை செய்யப்படும் ஏதோ ஒரு தின்பண்டத்திற்கு நம் நாக்கு அடிமையாக இருக்கும். மேலும் நாள்தோறும் புது வகையான உணவுகளும் வந்தவண்ணம் உள்ளது. இதில் புதுமையாகவும், அனைவரையும் கவரும் வகையிலும் இருப்பதற்காக ஒரு சில வித்தியாசமான தின்பண்டங்களை செய்கின்றனர்.

பொதுவாக உணவு பொருட்கள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும், அதில் சில வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளும் போது அது நெட்டிசன்களை கவர்ந்து விரைவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடுகிறது. அந்த வரிசையில் சமீபத்திய ட்ரெண்டிங்கில் இடம் பெற்றிருப்பது "பாகுபலி மோமோ". இந்த மோமோ தற்போது பிரபலமாகி வருகிறது. அப்படி இதில் என்ன ஸ்பெஷல் என்றால், சுமார் 2 கிலோ எடையில் தயார் செய்யப்பட்டுள்ள இந்த மோமோவில் தங்க இழை சேர்த்து தயார் செய்யப்பட்டுள்ளது.

 Bahubali Momo Mumbai Eatery Sells

மும்பையில் உள்ள மெஸ்ஸி அடா என்ற கடையில் தான் இந்த பாகுபலி மோமோ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கடைக்கு சென்ற பெண் ஒருவர் தான் இதனை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். அதில், பாகுபலி தங்க மோமோ, இந்தியாவில் முதல்முறையாக 2 கிலோ எடை கொண்ட தங்க இழை கொண்ட மோமோ என்றும், இதில் சீஸ், காய்கறிகள் கொண்டு உட்பகுதியும் 24 கேரட் தங்க இழையால் வெளிப்பகுதி மூடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த மோமோஸ் புதினா, ஆரஞ்சு, மோஜிட்டோ என மூன்று வகையான சட்னியுடன் பரிமாறப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



இந்த சுவையான மோமோ அதன் அளவு, தங்க இழையால் மட்டுமல்ல, அதனுடன் வரும் மசாலாப் பொருட்களின் காரணமாகவும் சிறப்பு வாய்ந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். 7-8 பேர் சேர்ந்து சாப்பிடும் அளவிற்கு தயார் செய்யப்பட்டுள்ள இந்த மோமோ ரூ. 1299 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மோமோஸ் நன்கு வேக வைத்து நிறைவுடன் எடுத்து சூடாக இருக்கும் போது அதன் மேற்பரப்பில் தங்க இழை ஒட்டப்படுகிறது என கூறுகின்றனர்.



இந்த பாகுபலி தங்க மோமோ குறித்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும் நெட்டிசன் ஒருவர், “ஆஹா! இது உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது என்றும் மற்றொருவர் புதுமையான மோமோ என்று குறிப்பிட்டுள்ளார்.

 




 

மேலும் இந்த மோமோவை வாங்க விரும்புபவர்கள் எவ்வளவு தேவையோ தன்னை முன்பதிவு செய்து கொள்ளலாம். அதற்காக +91 99308 11824 / 9321838095 என்ற எண்ணையும் கொடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: