கபினி பகுதியில் சிறுத்தையும், கருசிறுத்தையும் சந்தித்துக்கொண்ட காட்சிகள் - வைரல் வீடியோ!

சிறுத்தையும், கருசிறுத்தையும் சந்தித்துக்கொண்ட காட்சிகள்

சிறுத்தையும், சாயா என்ற பிளாக் பாந்தரும் (கருஞ்சிறுத்தை) சந்தித்து கொண்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கர்நாடகாவின் ஹுன்சூரில் உள்ள கபினி வனவிலங்கு சரணாலயத்தில் அதிகம் காணப்படும் உயிரினங்களில் ஒன்றான சிறுத்தையும், சாயா என்ற பிளாக் பாந்தரும் (கருஞ்சிறுத்தை) சந்தித்து கொண்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இன்போசிஸின் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி மற்றும் பிளான்தெரபிஸ்ட் ரோஹினி நிலேகனி ஆகியோர் கடந்த மார்ச் 6ம் தேதி இந்த காட்சியை நேரில் கண்டுள்ளனர். மேலும் அதனை வீடியோப்பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

  ட்விட்டரில் இந்த வீடியோவை பதிவிட்ட நந்தன் நிலேகனி, " மார்ச் 6, கபினி வனவிலங்கு சரணாலயத்தில் இந்த காட்சிகளைப் பார்த்தேன். பிளாக் பாந்தருக்கும் அதன் எதிரியான ஸ்கார்ஃபேஸ் சிறுத்தைக்கும் இடையிலான மற்றொரு காவிய சந்திப்பு!" என்று கேப்சன் செய்துள்ளார். சுமார் 54 விநாடிகள் கொண்ட அந்த வீடியோ கிளிப்பில் இரண்டு பெரிய விலங்கினங்களும் ஒரு மரத்தில் ஒருவருக்கொருவர் எதிர்கொள்ளும் காட்சிகள் அடங்கியுள்ளன. மரத்தின் நடுப்பகுதியில் நின்று கொண்டிருந்த கருஞ்சிறுத்தை, அதற்கு மேலே ஒரு கிளையில் நின்று கொண்டிருந்த சிறுத்தையை நோக்கி வேகமாக ஏறுவதைக் காணலாம். மேலும் இரு சிறுத்தைகளும் நேருக்குநேர் சந்தித்து கர்ஜிக்கும் அந்த நொடி காண்போரை சிலிர்க்க வைக்கிறது.  இந்த வீடியோப்பதிவு குறித்து வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஷாஸ் ஜங்கின் கூறியதாவது, ஸ்கார்ஃபேஸ் என்று அழைக்கப்படும் சிறுத்தை, அதன் முகம் முழுவதும் பல மகத்தான தழும்புகளை பெற்ற பின்னர் அதற்கு அந்த பெயர் கிடைத்தது. இதற்கிடையில், சாயா, வனவிலங்கு சரணாலயத்தில் இருக்கும் ஒரே ஒரு கருஞ்சிறுத்தை ஆகும் என்று கூறியுள்ளார்.

  Also read... கர்நாடகா வனப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளை துரத்திய யானை - வைரலாகும் வீடியோ!

  இந்த வீடியோ இணையத்தில் வெளியான பிறகு தற்போது வரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இதனைக் கண்டு ரசித்துள்ளனர். மேலும் பல கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும், பல நெட்டிசன்கள் கருஞ்சிறுத்தைக்கும், சிறுத்தைக்கும் இடையிலான சந்திப்புக்குப் பிறகு என்ன நடந்தது என்பதை அறிய ஆர்வமாக இருப்பதாக கமெண்ட் செய்துள்ளனர். மேலும், இந்த நிகழ்வை நேரில் பார்த்த நீங்கள் மிகவும் பாக்கியசாலிகள் என்று நந்தனுக்கு சிலர் வாழ்த்து செய்திகளை பகிர்ந்துள்ளனர்.  மேலும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் நந்தன், தனது மனைவி ரோகிணி நிலேகனி எடுத்த பிளாக் பாந்தரின் ஒரு பிரமிக்க வைக்கும் புகைப்படத்தையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், மீண்டும் ஒரு நல்ல அனுபவத்தை கபினி சுற்றுலா தந்திருக்கிறது என பதிவிட்டிருந்தார். இதிலிருந்து பெரிய பூனை மீதான நிலேகனியின் அன்பு நன்கு அறியப்பட்டுள்ளது மற்றும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. டெக்கான் ஹெரால்டு அறிக்கையின்படி, ரோஹினி கபினியை தனக்கு பிடித்த வனவிலங்கு இடமாக வர்ணித்ததாகவும், அது ஒரு ‘சிறப்புமிக்க இடம்’ என்று கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: