ஒன்றரை வயது குழந்தையை சுமந்தபடி ஆறுகளை கடந்து தடுப்பூசி செலுத்தும் பணியில் செவிலியர் - நெகிழவைக்கும் சம்பவம்

கோப்பு படம்

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிக்காக தனது ஒன்றரை வயது குழந்தையை சுமந்து கொண்டு ஆற்றை கடந்து செல்லும் பெண் குறித்த செய்தி பலருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
ஜார்கண்ட் மாநிலத்தில் மன்டி குமாரி என்பவர் ஒப்பந்த அடிப்பைடையில் நர்ஸாக செத்மா ஹெல்த் சப் சென்டரில் பணிபுரி்ந்து வருகிறார். அவரது கணவர் சுனில் ஓரன் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையிழந்துள்ளார். இவர்களுக்கு ஒன்றை வயதில் பெண் குழந்தை உள்ளது. அவர்கள் மஹாடனர் என்ற பகுதியில் வசிக்கின்றனர். அங்கிருந்து 25 கிமீ பயணம் செய்து செத்மா ஹெல்த் சென்டருக்கு செல்ல வேண்டும்.

மன்டி குமாரி சுற்று வட்டார கிராமங்களுக்கு சென்று குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது மற்றும் மருத்துவம் பார்க்கும் பணியில் உள்ளார். அதற்காக அவர் தினமும் 35 கி.மீ வரை நடக்க வேண்டும். அவர் போகும் வழியில் ஆறுகளைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. அதுவும் தன் ஒன்றை வயது குழந்தையை சுமந்து கொண்டு செல்ல வேண்டும்.

Also Read : கியூபாவின் அப்டாலா தடுப்பூசி 92 சதவீத திறனுள்ளது என அறிவிப்பு

இதுகுறித்து நீயூ இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு குமாரி அளித்துள்ள பேட்டியில், நான் போக வேண்டிய சில கிராமங்கள் மிக தொலைவில் இருக்கும். அங்கே செல்வதற்கு ஆறுகளை கடந்து செல்ல வேண்டும். ஆறுகள் மிக ஆழமானது. மேலும் மழை காலங்களில் ஒடைகள் எல்லாம் உருவாகும். சில நேரங்களில் அதில் தண்ணீரின் அளவு அதிகரிக்கும். அதுபோன்ற நேரங்களில் தண்ணீரின் அளவு குறையும் வரை, அக்கிராமங்களுக்கு செல்வதை தவிர்த்து விடுவேன் என்கிறார்.

மேலும் மருத்துவம் பார்க்க செல்லும் போது புரா என்ற ஆற்றை டிஸியா, கோய்ரா, சுகபந்த் என மூன்று வெவ்வேறு ஊர்களில் கடந்து செல்ல நேரிடுமாம். இதுகுறித்து தெரிவித்த அவர், நான் குறைந்தது மாதம் ஒருமுறையாவது ஆற்றைக் கடந்து இந்த ஊர்களுக்கு செல்ல வேண்டியது இருக்கும். அதுவும் அடர்த்தியான காடுகளுக்குள் நடந்து செல்ல வேண்டியிருக்கும் என்றார். ஊரடங்கு காரணமாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் அவரது கணவரும் சில தூரங்கள் வரை அவருடன் நடந்து வருவாராம்.

Also Read : மூன்று மாநிலங்களில் அதிகம் காணப்படும் டெல்டா பிளஸ் வைரஸ்

மருத்துவ அலுவலர் அமித் கல்கோ, மருத்துவ பணியாளர்கள் தினசரி பணிக்காக ஆறுகளையும், அடர்ந்த காடுகளையும் கடக்க வேண்டியிருக்கிறது என்று தெரிவித்தார். குமாரிக்கு தனது கணவர் வேலையிழந்ததன் காரணமாக, அவர் குடும்பத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. மேலும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் மனதில் வைத்து இந்த பணியை செய்து வருகிறார். தனது பிரசவத்தின் போது கூட 3 மாதங்கள் ஓய்வெடுத்துக் கொண்டு தனது பணியை தொடர்ந்திருக்கிறார். இந்த இக்கட்டான கொரோனா எனும் பெருந்தொற்று காலத்தில் குமாரி போன்ற தங்கள் உயிரையும் பொருட்படுத்தாத சுகாதாரப் பணியாளர்களின் சேவை தான் மக்களுக்கு ஒரு வித நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: