ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

சிங்கத்திடம் இரையை பங்கு கேட்ட குட்டி கழுதைப்புலி! சிங்கம் செய்த செயல்...வைரல் வீடியோ

சிங்கத்திடம் இரையை பங்கு கேட்ட குட்டி கழுதைப்புலி! சிங்கம் செய்த செயல்...வைரல் வீடியோ

சிங்கத்திடம் இரையை பங்கு கேட்ட குட்டி கழுதைப்புலி

சிங்கத்திடம் இரையை பங்கு கேட்ட குட்டி கழுதைப்புலி

Lion Viral Video | 209,009 க்கும் அதிகமான லைக்ஸ்களைப் பெற்றுள்ள இந்த வீடியோவில் விலங்குகளின் ராஜ்ஜியம் எவ்வளவு சுவாரசியமானது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  விலங்குகளின் ராஜ்ஜியம், எவ்வளவுக்கு எவவ்ளவு ஆபத்தானதோ, அதே அளவிற்கு சுவாரஸ்யமானதும் கூட! பல வகையான உயிரனங்கள் ஒன்றுகூடி வாழும் அந்த உலகம் எவ்வளவு சுவாரஸ்யமானது என்பதை சில நொடிகளில் வெளிப்படுத்தும் ஒரு வீடியோ தான், 'வைல்ட் அனிமல் லவ்வர்ஸ்' மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது.

  காட்டின் ராஜாவான ஒரு சிங்கத்தின் அருகில் செல்ல, வளர்ந்த ஹைனாக்களே (கழுதைப்புலி) அச்சம் கொள்ளும் நிலைப்பாட்டில், "இளங்கன்று பயம் அறியாது" என்கிற பழமொழியை நிரூபிக்கும் வண்ணம் 2 குட்டி ஹைனாக்கள் ஒரு சிங்கத்தை நேருக்கு நேர் சந்திக்கும் வீடியோ, இன்ஸ்டாகிராமில் வெளியாகி லைக்ஸ்களையும், கமெண்ட்களையும் அள்ளிக்கொண்டு இருக்கிறது.

  சிங்கம் அதன் வலிமை காரணமாக காட்டின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. ஒரு சிங்கம் கர்ஜிக்கும் போது காடுகளில் உள்ள மற்ற விலங்குகள் பயந்து நடுங்குகின்றன, சிங்கத்தின் வாய்க்கு நாம் இரையாகிவிட கூடாது என்று அலறியடித்து ஓடுகின்றன. அப்படியான சிங்கத்தை ஹைனாக்கள் எதிர்த்து நின்றதா? அதுவும் குட்டி ஹைனாக்கள்? ஆம், உண்மைதான்!

  Read More : ஏழை சிறுவனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போக்குவரத்து காவலர் - குவியும் பாராட்டு!

  குறிப்பிட்ட வீடியோவில், ஒரு சிங்கம் தான் வேட்டையாடிய இரையை "கூலாக அமர்ந்து" சாப்பிட்டு கொண்டிருக்கிறது. சிங்கத்தின் உண்மையான வலிமையை முன்பின் அறியாத இரண்டு குட்டி ஹைனாக்கள், அதன் அருகில் சென்று இரையில் பங்குகேட்க முயற்சிக்கின்றன. உணவின் மீது மட்டுமே இருந்த சிங்கத்தின் கவனம் சட்டென்று குட்டி ஹைனாக்கள் மீது திரும்பியது. சிங்கம் தன் தலையை திருப்பிய வேகத்தில் இரண்டு ஹைனா குட்டிகளில், பின்னால் இருந்த ஒரு குட்டி ஓட்டம் எடுத்தது. ஆனால் முன்னால் இருந்த குட்டி ஹைனா பெரிதும் அச்சம் கொள்ளாமல், ஒவ்வொரு அடியாய் பின்னோக்கி எடுத்து வைத்து, சிங்கத்தின் முகத்தை நேருக்கு நேர் பார்த்தது.

  அந்த சிங்கம், முன் நிற்கும் குட்டி ஹைனாவை மிகவும் எளிதில் தாக்கியிருக்கலாம்; சிங்கம் ஒரு தட்டு தட்டினால் அந்த குட்டி ஹைனா தடம் தெரியாமல் போய் விடும். ஆனால் அதிர்ஷ்டவசமாக, சிங்கம் எந்த தாக்குதலையும் நிகழ்த்தவில்லை, ஆனால் எதிர்நின்ற குட்டி ஹைனாவை ஓரிரு நொடிகள் முறைத்து பார்த்தது. அந்த பார்வை சிங்கத்தின் கடைசி எச்சரிக்கை என்பதை புரிந்துகொண்ட குட்டி ஹைனா இடத்தை காலி செய்தது.

  வைல்ட் லைஃப் அனிமல் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவிற்கு மிக மிக பொருத்தமான கேப்ஷன் எழுதப்பட்டுள்ளது - “பார்வையால் கொல்ல முடியும் என்றால்".
   
  View this post on Instagram

   

  A post shared by Wildlifeanimall (@wildlifeanimall)  இதுவரை 209,009 க்கும் அதிகமான லைக்ஸ்களைப் பெற்றுள்ள இந்த வீடியோவில் விலங்குகளின் ராஜ்ஜியம் எவ்வளவு சுவாரசியமானது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. வலியது தான் உயிர் பிழைக்கும் என்கிற கோட்பாட்டின் கீழ் வேட்டையாடி உயிர் வாழும் குணம் கொண்ட சிங்கம், ஒப்பீட்டளவில் துளியும் வலிமை இல்லாத குட்டி ஹைனாக்கள் மீது இரக்கம் காட்டுவதையும், உணவிற்காக உயிர் பறிக்கும் அரக்கனின் அருகில் செல்ல துணியும், துளியும் பயம் அறியாத குட்டி ஹைனாக்களையும் - இயற்கையின் சுவாரசியமான படைப்புகள் என்று கூறாது, வேறு என்னவென்று கூறுவது?!

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Trending, Viral Video