என்ன ஒரு வில்லத்தனம்...! இணையத்தை கலக்கும் குட்டி கொரில்லா

என்ன ஒரு வில்லத்தனம்...! இணையத்தை கலக்கும் குட்டி கொரில்லா
கொரில்லாவின் கியூட் செயல்
  • Share this:
சிறு வயதில் குழந்தைகள் ஆனாலும் சரி, விலங்குகள் ஆனாலும் சரி செய்யும் அனைத்துமே குறும்பு தான். குழந்தைகள் செய்யும் குறும்புகள் விரும்பிதான் செய்கிறார்களா என தெரியாது ஆனால், திரும்ப திரும்ப நம்மை விரும்ப வைத்து விடுகிறார்கள் எளிதில்..

வீட்டை இரண்டாக்கும் குறும்பு குழந்தைகள் தான் வீட்டில் உள்ளவர்களையும் ஒன்றாக்குகிறது. அவ்விதம் குழந்தைகள் போலவே குட்டி கொரில்லா ஒன்று செய்யும் குறும்பு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு பதிவிட்டுள்ள இந்த வீடியோவில், குட்டி கொரில்லா ஒன்று மிக அழகாக குட்டி திண்டின் மீது ஏறி வைக்கோல் மீது குதித்து குதித்து விளையாடுகிறது. பின்னர் அதன் தாய் வந்து எப்ப பாரு விளையாட்டுத் தனம் வா சுருதி போலாம் என்பன போல கொரில்லாவை எடுத்து கொண்டு நகர்கிறது.


ஓயாது மீண்டும் மீண்டும் தனக்கு பிடித்த செயலை செய்யும் குட்டி கொரில்லாவின் கியூட் செயல் இணையவாசிகளை கவர்ந்துள்ளது.

 

First published: March 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading