ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

அரிதான நிகழ்வு.. இரண்டு அங்குல வாலுடன் பிறந்த பெண் குழந்தை !

அரிதான நிகழ்வு.. இரண்டு அங்குல வாலுடன் பிறந்த பெண் குழந்தை !

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மிருதுவாக தோல் மற்றும் மெல்லிய முடியால் மூடப்பட்டிருந்த 3 மிமீ முதல் 5 மிமீ விட்டம் கொண்ட சிறிய சதை பகுதி கூடுதலாக வளர்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • chennai |

மெக்சிகோ நியூவோ லியோனில் உள்ள மருத்துவமனையில் ஒரு பெண் குழந்தை 2 அங்குல நீள வாலுடன் பிறந்துள்ளது.Josue Rueda தலைமையிலான மருத்துவர்கள், மெக்சிகோவில் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இது என்று குறிப்பிட்டுள்ளனர்.

இருபதுகளில் இருக்கும் பெற்றோருக்கு நிறைமாதமாக பிறந்துள்ள இந்த குழந்தைக்கு 5.7-சென்டிமீட்டர் நீளமுள்ள வால் பிறக்கும் போதே இருந்துள்ளது. மிருதுவாக தோல் மற்றும் மெல்லிய முடியால் மூடப்பட்டிருந்த 3 மிமீ முதல் 5 மிமீ விட்டம் கொண்ட சிறிய சதை பகுதி கூடுதலாக வளர்ந்துள்ளது.

தாயும் சேயும் நலமாக இருக்கும் நிலையில் கர்ப்ப காலத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. இது சாதாரண நிகழ்வு தான். பயப்படும் அளவிலான பிரச்சனை இல்லை என்று மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : 5000 கிமீ பயணம் செய்து தேடிவந்த காதலி.. அடித்துக்கொன்று உடல் உறுப்புகளை திருடிய காதலன்!

அஅந்த பெண் குழந்தை பிறகும் போது முதுகெலும்பின் நுனியில் ஒட்டியிருந்த கூடுதல் சதைப்பகுதி ஒன்று இருப்பது மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தையின் பின்புறம் இருந்ததால் வால் போன்ற அமைப்பாக இருக்குமோ என்று கருதினர். ஆனால் தன்னிச்சையான அசைவுகள் எதையும் அந்த சதை பகுதி காட்டவில்லை. ஊசியால் அதை குத்தியபோது குழந்தை அழுதது.

அவள் இரண்டு மாத குழந்தையாக இருந்தபோது செய்யப்பட்ட ஒரு சிறிய அறுவை சிகிச்சையில் வால் அகற்றப்பட்டுள்ளதுது. அது தசை, இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளைக் கொண்ட "உண்மையான வால்" என்று பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் விலங்குகளில் இருப்பதைப் போன்ற எலும்புகள் அதில் இல்லை.

இதையும் படிங்க :தப்பிச்சிட்டோம்'.. தீப்பிடித்த விமானம்.. அசராமல் செல்ஃபி எடுத்த ஜோடி..! கடுப்பான நெட்டிசன்ஸ்!

கருப்பையில் உருவாகும் அணைத்து கருவிற்கும் வால் முளைக்கும் என்று கருதப்படுகிறது, ஆனால் பொதுவாக அந்த அப்பகுதி மீண்டும் உடலில் மீண்டும் உறிஞ்சப்பட்டு வால் எலும்பை உருவாக்குகிறது.இதனால் வால் போன்ற அமைப்பு மறைந்துவிடுகிறது. இந்த குழந்தைக்கு அந்த சதை தங்கிவிட்டது. அதனால் பிறக்கும்போதும் வாழ் அமைப்பு இருந்தது என்று மருத்துவர்கள் விளக்கம் தருகின்றனர்.

உண்மையான வால் என்பது மிகவும் அரிதானது, 2017 ஆம் ஆண்டளவில் 195 நிகழ்வுகள் அடையாளம் காணப்பட்டன. அதில் மிக நீளமானது 20 சென்டிமீட்டர்கள் (7.9 அங்குலம்) கொண்டதாகும்.அவை பெரும்பாலும் சிறுவர்களிடமே காணப்படுகின்றன. 17 குழந்தைகளில் வால்கள் கொண்ட குழந்தைகளில் ஒன்று மூளை அல்லது மண்டை ஓட்டின் வளர்ச்சிக் கோளாறுகளால் பாதிக்கப்படுகிறது. அதற்கு என்ன காரணம் என்று மருத்துவர்களுக்கு இன்று வரை தெரியவில்லை

First published:

Tags: Mexico, Trending News