Viral Video : "அட இது என் நிழலா?" தன் நிழலை பார்த்து வியந்த ஒட்டக குட்டி - வைரலாகும் வீடியோ

தன் நிழலை பார்த்து வியந்த ஒட்டக குட்டி

முதன் முதளாக கூட்டை விட்டு வெளியில் வந்த புதிதாக பிறந்த ஒட்டக குட்டி தன் நிழலை பார்த்து வியந்து செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • Share this:
ஆஸ்திரேலியாவின் மொனார்டோவில் உள்ள விலங்கியல் பூங்காவில் உள்ள ஒட்டகத்தின் பெயர் கொராங்கோ. இது கடந்த மே 7 ஆம் தேதி குட்டி ஒன்றை ஈன்றது. கடந்த சில நாட்களாக கூண்டிற்குள்ளேயே இருந்த அந்தக் குட்டி முதன்முறையாக மே 21 ஆம் தேதி வெளியில் வந்தது. அப்போது, வெயில் நின்ற ஒட்டக குட்டி தன்னுடைய நிழல் கீழே விழுவதை பார்த்து வியப்படைந்ததை பூங்கா ஊழியர்கள் வீடியோவாக பதிவு செய்தனர்.

இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், காலை சூரிய ஒளியில் நிற்கும் ஒட்ட குட்டி, தன்னுடைய நிழல் இருப்பதை ஆச்சரியத்துடன் பார்க்கிறது. பிறந்த சில நாட்கள் ஆன அந்த ஒட்டகக்குட்டி முதன்முறையாக கூண்டை விட்டு வெளியே வந்துள்ளது. நிழலை பார்த்து பல்வேறு பாவணைகள் செய்யும் அந்த ஒட்டகக் குட்டி, தன்னுடைய உருவத்தின் போலி என்பதை அதனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பூங்காவிற்கு புதிதாக வருகை தந்துள்ள குட்டி ஒட்டகத்துக்கு பெயர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.

ALSO READ | தண்ணீருக்கு தவித்த கழுகிற்கு தாகம் போக்கிய வழிபோக்கர்கள் - வைரல் வீடியோ!

ஒட்டகத்தின் குழந்தை நடை பூங்கா ஊழியர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதன் ஒவ்வொரு அசைவையும் பதிவு செய்த ஊழியர்கள், ஒட்டக குட்டியிடமும் பேசினர். இது உன்னுடைய நிழலா? அல்லது உன்னுடைய தோழரா? என ஊழியர்கள் கேட்கும்போது அந்த ஒட்டக குட்டி நிழலைப் பார்த்தவாறே அங்கும் இங்கும் நடை பயில்கிறது. இந்த வீடியோ மூலம் புதிதாக வரும் ஒட்டக குட்டிகள், நிழலை எப்படி ஆச்சரியத்துடன் பார்க்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

 

 



 

 



 

 



 

ஒட்டக குட்டியின் வருகை குறித்து பேசிய பூங்கா ஊழியர் ஒருவர், "கொராங்கோ ஒட்டகத்தை நீண்ட நாட்களாக பராமரித்து வந்தோம். கோடை காலம் என்பதால், கூடுதல் கவனம் கொடுத்து அதனை பராமரித்தோம். கர்ப்பமாக இருந்த அது, மே 7 ஆம் தேதி குட்டியை ஈன்றது. வெயிலைப் பார்க்காத குட்டி ஒட்டகம் சுமார் 3 வாரங்களுக்குப் பிறகு வெளியிலுக்கு வந்தது. எங்களுக்கே ஆச்சரியமாக இருந்தது.  நடை, செய்கை அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. உடனடியாக இதனை வீடியோவாக பதிவு செய்ய எண்ணிணோம்.

ALSO READ | குக்கூ குக்கூ... ட்விட்டர் போச்சா... வாழ்த்து சொல்லும் பௌத்தர்கள் - இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங் இவை தான்!

கேமராவில் பதிவு செய்யத் தொடங்கியவுடன், வெளியிலுக்கு வந்த குட்டி ஒட்டகம், தன்னுடைய நிழலை வியந்து பார்த்தது.முதல் முறையாக தன்னுடைய நிழலைப் பார்ப்பதால், அதற்கு தன்னுடைய நிழல் என்று தெரிய வாய்ப்பில்லை. அதனுடைய செய்கைகள் நிழலில் எதிரொலித்தது அதற்கு வியப்பாக இருந்திருக்கலாம்.

 

 



 

 

ஒட்டக குட்டிகள் தங்களின் நிழலை முதன்முறையாக பார்க்கும்போது எப்படி ரியாக்ட் செய்யும் என்பதை பார்க்க நாங்களும் ஆவலாக இருந்தோம். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" எனக் கூறினார். இந்த வீடியோவை ஆயிரக்கணக்கான நெட்டிசன்களும் லைக் செய்துள்ளனர். பார்பதற்கு மிகவும் அழகாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

 



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

 
Published by:Sankaravadivoo G
First published: