சட்டை அணிந்து விளையாடும் குட்டி யானை - வைரலாகும் வீடியோ!

சட்டை அணிந்து விளையாடும் குட்டி யானை

விளையாட்டுத்தனமான குட்டி யானையின் செயல்கள் பலரையும் கவர்ந்துள்ளது.

  • Share this:
குட்டி யானை ஒன்று சட்டை அணிந்தவாறு விளையாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது ஊரடங்கு காலத்தில் ஏராளமானோர் சமூக வலைத்தளங்களில் தங்களது நேரத்தை செலவழித்து வரும் நிலையில் எண்ணற்ற வேடிக்கையான வீடியோக்கள் வெளியான வண்ணம் உள்ளது. அதனை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக குட்டி யானைகள் விளையாடும் வீடியோக்கள் அனைத்தும் பார்க்க ரசிக்கும் படியாக இருக்கும். அந்த வகையில் தற்போது போண்டேனி என்ற அழகிய குட்டி யானையின் வேடிக்கையான செயல் உங்களை சிரிக்க வைக்கக்கூடும். ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளையால் ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், குட்டி யானை ஒன்று அழகாக விளையாடுவது தெரிகிறது. மேலும் அந்த வீடியோவில் பொண்டேனி வண்ணமயமான சட்டை அணிந்து மரக்கிளைகள் மற்றும் இலைகளுடன் விளையாடும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த வீடியோவை, “குட்டி யானைகளைப் பொறுத்தவரை, விளையாட்டு நேரம் வேடிக்கையானது மட்டுமல்ல, திறன்களை கற்றுக்கொள்வதற்கான சிறந்த வழியாகும். யானை போல விளையாட்டுத்தனமாக இருங்கள்" என குறிப்பிட்டு ஷேர் செய்துள்ளனர். ஜூன் 23 அன்று பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 18,100 பேர் பார்வையிட்டுள்ளனர், மேலும் ஆயிரக்கணக்கான கமென்ஸ்ட்களையும் பெற்றுள்ளது.விளையாட்டுத்தனமான குட்டி யானையின் செயல்கள் பலரையும் கவர்ந்துள்ளது. பலர் யானையின் வண்ணமயமான சட்டை குறித்து பேசியுள்ளனர். “குழந்தை யானைகள் மிகவும் இனிமையாகவும், அழகாகவும் இருக்கின்றன. அவை சட்டைகள் அணிந்திருக்கும் போது மேலும் அழகாக இருக்கிறது என்று ஒரு ட்விட்டர் யூசர் குறிப்பிட்டுள்ளார். "உலகிற்கு அதிக குழந்தை யானைகள் தேவை" என்று மற்றொருவர் கருத்து தெரிவித்தார்.

Also read... 1 டஜன் மாம்பழங்களை ரூ.1,20,000 கொடுத்து வாங்கிய தொழிலதிபர் - நெகிழ வைக்கும் காரணம்!

முன்னதாக காட்டு யானை ஒன்று குடியிருப்பு அருகாமையில் இருக்கும் மைதானத்துக்குள் நுழைந்து அங்கு இளைஞர்கள் விளையாடிக்கொண்டிருந்த நிலையில், அவர்களிடம் இருந்த பந்தை யானை தனது தும்பிக்கையால் எடுத்தது. பந்தை எடுத்துக் கொண்ட காட்டு யானை, சாலையில் நடந்து சென்றது. இதனைப் பார்த்து வியப்படைந்த அங்கிருந்த இளைஞர்கள், யானை பந்தை எடுத்துச் செல்வதை வீடியோ எடுக்கத் தொடங்கினர். மேலும், பந்தை கொடுக்குமாறு யானையிடம் மன்றாடிறனர். அவர்களின் குரலுக்கு துளியும் செவிசாய்க்காத காட்டுயானை, நடந்து சென்றுவாறே பந்தை எடுத்து விளையாடியா வீடியோ வைரலானது. மேலும் தாய்லாந்தில் உணவு தேடி கிராமத்துக்குள் புகுந்த யானை ஒன்று சமயலறை சுவற்றை உடைத்துக் கொண்டு வீட்டில் இருந்த உணவை சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: