• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • குட்டி யானையின் ’ஆனந்த’ குளியல்! பார்த்தால் மெர்சலாயிடுவீங்க

குட்டி யானையின் ’ஆனந்த’ குளியல்! பார்த்தால் மெர்சலாயிடுவீங்க

குட்டி யானை

குட்டி யானை

குட்டி யானை ஒன்று ஆற்று நீரில் உற்சாகமாக குளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

  • Share this:
மழை காலம் தொடங்கியிருப்பதால் ஆங்காங்கே பெய்யும் மழையால் வனப்பகுதியில் இருக்கும் ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியிருக்கிறது. இது வனவிலங்குகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

டிவிட்டரில் பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோவில், யானைக் குடும்பம் ஒன்று தண்ணீர் பருகுவதற்காக ஆறு ஒன்றுக்கு செல்கிறது. அங்கு பெருக்கெடுத்து ஓடும் நீரைப் பார்த்த அந்த குடும்பத்தில் இருந்த குட்டி யானைக்கு குளிக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டு நீரில் இறங்கி குளிக்க முயற்சிக்கிறது.

ஆனால் கரையில் இருக்கும் தாய் யானை குட்டி யானையை பத்திரமாக பாதுகாக்கிறது. ஆற்றில் ஆழம் இல்லை என்றவுடன் குட்டி யானை நீரில் இறங்க அனுமதித்தது. மேலும், தன்னுடைய பார்வையில் இருந்து விலகி சென்றுவிடாத வண்ணம் குட்டி யானையின் அருகிலேயே இரண்டு பெரிய யானைகளும் தண்ணீருக்குள் பாதுகாப்பாக நிற்கின்றன. தண்ணீரும் குளிர்ச்சியாக இருந்ததால், பெரிய யானைகளும் பின்னர் தண்ணீரில் குளித்தன.

ALSO READ |  இந்த குழந்தையின் மைண்ட் வாய்ஸ் என்ன? மீம்ஸ்களில் வைரலாகும் அடுத்த சுட்டிக் குழந்தை

குறிப்பாக, தண்ணீரில் குட்டி யானை போடும் ஆட்டம், வீடியோ பார்ப்பவர்கள் அனைவரையும் ரசிக்க வைக்கும். அந்தளவுக்கு கியூட்டாக இருக்கிறது. இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுதா ராமன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், குட்டி யானையின் தாய் கூட, தன் குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்வதில் அதீத அக்கறை செலுத்துகிறது.

 



 

அந்த குட்டியானை பார்வையில் இருந்து விலகிச் செல்லா வண்ணம் அரணாக இருப்பதை பார்க்கும்போது, சூழ்நிலைகள் சரியாக எதிர்கொள்ளும் என்ற நம்பிக்கை வந்தவுடன் மட்டுமே அதனை தனியாக அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் நன்றாக புலப்படுகிறது. குட்டி யானையின் குளியலும், தாய் யானை அதன்மீது காட்டும் அக்கறையும் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், ரசிக்கும்படி இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

அவர் பகிர்ந்த இந்த வீடியோ உடனடியாக நெட்டிசன்களின் கவனத்தையும் ஈர்த்து பலரும் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும், கமெண்டுகளையும் அந்த வீடியோ பெற்றுள்ளது. வீடியோ பதிவுக்கு கீழ் கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன்கள், விலங்குகள் கூட தங்கள் குழந்தைகளின் மீது அதீத அக்கறை செலுத்துவதை நம்மால் பார்க்க முடிகிறது, சூப்பரான வீடியோ என நெட்டிசன் ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

ALSO READ |  ஸ்கூல் பெல்ட் மாதிரி இருக்கு - ரூ.35,000க்கு மகள் வாங்கிய பெல்ட்டை பார்த்து ஷாக்கான அம்மா!

அண்மைக் காலமாக யானைகளின் வீடியோக்கள் அதிகளவு வைரலாகி வருகின்றன. அசாம் ராணுவ கேம்புக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று, விளையாட்டு மைதானத்தில் இருந்த கூடைப்பந்தை எடுத்து விளையாடிய வீடியோ பெரும் வரவேற்பை பெற்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

மற்றொரு வீடியோவில் கவுகாத்தியில் சாலையில் நிற்கும் இருசக்கர வாகனத்தில் இருக்கும் ஹெல்மெட்டை எடுக்கும் யானை, அதனை பலாப்பழம் என நினைத்து சாப்பிட்ட வீடியோவும் டிரெண்டிங்கில் இடம்பிடித்திருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: