• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • கால்பந்து விளையாடும் குட்டி யானை - இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ

கால்பந்து விளையாடும் குட்டி யானை - இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ

இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ

இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ

Viral Video : குட்டி யானை ஒன்று கால்பந்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • Share this:
    குட்டி யானை ஒன்று கால்பந்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா ( Susanta Nanda IFS ) ட்விட்டரில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் விலங்குகள் மற்றும் பறவைகள் , பாம்புகள் என காடுகளில் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

    அவ்விதம் யானை ஒன்று தண்ணீரில் ஆனந்தமாக தனது குடும்பத்துடன் இணைந்து விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் குட்டி யானை தனது தும்பிக்கையை கொண்டு அழகாக கால்பந்தினை வைத்து மகிழ்வாக விளையாடுகின்றது. இணையத்தில் பலரின் மனங்களையும் இந்த வீடியோ வென்றுள்ளது.



    இந்த வீடியோவை பார்த்த பலரும் , விலங்குகள் ஆனாலும் சரி மனிதர்களும் ஆனாலும் சரி குழந்தைகள் குழந்தைகள் தான் என பதிவிட்டுள்ளனர்.





    இதே போன்று சமீபத்தில் பாண்டா ஒன்று இந்த நிமிடத்தை ரசித்து வாழும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதனை சுசந்தா நந்தா பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் குட்டி பாண்டா ஒன்று நீர் நிரம்பிய சிறிய குட்டையில் ஆனந்தமாக துள்ளி கொண்டு விளையாடி மகிழ்கின்றது.



    இந்த வீடியோவை வெளியிட்டுள்ள வனத்துறை அதிகாரி அதன் மேலே தலைப்பு ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அந்த தலைப்பில் இந்த நொடியில் மகிழ்ச்சியாக இருங்கள், அது போதும். ஒவ்வொரு கணமும் நமக்குத் தேவையானதுதான் என குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: