Home /News /trend /

கொஞ்சம் தள்ளிப்படுங்க அண்ணே, நானும் தூங்கணும் - பாகனுடன் விளையாடி மகிழும் குட்டி யானை

கொஞ்சம் தள்ளிப்படுங்க அண்ணே, நானும் தூங்கணும் - பாகனுடன் விளையாடி மகிழும் குட்டி யானை

கொஞ்சி விளையாடும் யானையின் வைரல் வீடியோ

கொஞ்சி விளையாடும் யானையின் வைரல் வீடியோ

உருவத்தில் பெரியதாக இருந்தாலும், சின்னஞ்சிறு பாகனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு யானை நடந்து கொள்ளும். யானையும், பாகனும் கொஞ்சி மகிழும் வீடியோக்கள் அவ்வபோது சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.

    மனிதர்களுடன் மிக நெருக்கமாகப் பழகும் வன விலங்குகளில் யானைக்கு தான் முதலிடம். சின்ன குட்டி நிலையில் இருந்து யானையை ஒருவர் வளர்த்து விட்டால், அவர்களுடன் யானை மிக அன்யோன்யமாக ஒட்டிக் கொள்ளும். வீட்டில் நம் குழந்தைகள் செய்யும் குரும்புத்தனங்களைக் காட்டிலும் யானைக் குட்டிகள் செய்யும் குரும்புத்தனம் பார்க்கவே அழகாக இருக்கும்.

    உருவத்தில் பெரியதாக இருந்தாலும், சின்னஞ்சிறு பாகனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு யானை நடந்து கொள்ளும். யானையும், பாகனும் கொஞ்சி மகிழும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. அவை அனைத்துமே வைரல் ஆகி விடுகின்றன. ஏனென்றால், நேரில் பார்த்தாலும் சரி அல்லது வீடியோவில் பார்த்தாலும் சரி, யானை என்றால் நமக்கும் குதூகலமான விஷயம் தான்.

    அப்படியொரு வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி (IFS) சாம்ராட் கௌடா அண்மையில் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவானது, பெரிய யானை மற்றும் குட்டி யானை ஆகியவை தடுப்புக்குள் வைக்கப்ப்பட்டிருக்கும் காட்சியுடன் தொடங்குகிறது. அருகாமையில் யானையின் பாகன் தரையில் மெத்தைவிரிப்பை போட்டு தூங்கிக் கொண்டிருக்கிறார்.

    Read More : பேனிக் அட்டாக்கில் மயங்கி விழுந்த பெண்; கண்டுகொள்ளாத ஏர் இந்தியா ஊழியர்கள்! - வைரல் வீடியோவில் நடந்தது என்ன?


    அந்த சமயத்தில் தடுப்புகளை தாண்டி வெளியேறும் குட்டி யானை, தனது பாகனின் படுக்கையில் தனக்கும் இடம் கேட்கிறது. அவர் இடம் கொடுக்கவில்லை என்றதும் விடாப்படியாக போராடிய அந்த யானைக் குட்டி இறுதியில் இடம் பிடித்து படுத்துக் கொண்டது. எஞ்சிய இடத்தில் பாகனும் படுத்துக் கொள்கிறார். ஏதோ, அப்பாவும், பிள்ளையும் விளையாடி மகிழ்வதைப் போல, பாகனுடன் இந்த யானைக் குட்டி செய்யும் சேட்டைகள் நம் கண்களுக்கு விருந்து படைப்பதாக அமைந்துள்ளன.



    டிவிட்டரில் இந்த வீடியோவை 1.8 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். நெட்டிசன்கள் பலரும் வீடியோவுக்கு ஹார்டின் குறியீடுகளை கிளிக் செய்திருப்பதுடன், நெகிழ்ச்சியான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த குட்டி யானையைக் காட்டிலும் அழகான விஷயம் இந்த உலகில் உண்டா என்று நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார். மற்றொருவரின் கமெண்டில், “யானை விளையாடுவதை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

    டிவிட்டரில் நாள் முழுவதும் ஆட்சேபகரமான, சர்ச்சைக்குரிய பதிவுகள் பலவற்றை நாம் கடந்து வரும் தருணத்தில், இந்த குட்டி யானையின் வீடியோவை பார்த்தால் எல்லாவற்றையும் மறந்து, மனம் உருகி விடுவோம் என்று மற்றொரு பதிவாளர் தெரிவித்துள்ளார்.

    யானையிடம் பால் குடித்த குழந்தை

    டிவிட்டரில் சில நாட்களுக்கு முன்பு மற்றொரு வீடியோ இதேபோல வைரல் ஆனது. அந்த வீடியோவில், பெண் யானை நின்று கொண்டிருக்க, அதன் கீழே சென்று விளையாடும் சின்னஞ்சிறு குழந்தை சர்வ சாதாரணமாக பால் கறந்து குடிக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அசாம் மாநிலத்தின் கோலாஹட் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் இந்த நிகழ்வு பதிவாகியிருந்தது.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Elephant, Trending, Viral

    அடுத்த செய்தி