'அம்மா.. ஏம்மா.. கொடுமை படுத்துற.. ப்ளீஸ் மா' 1,2,3 சொல்ல கதறி அழும் சிறுவன் - இணையத்தில் வைரலாக பரவும் வீடியோ

'அம்மா.. ஏம்மா.. கொடுமை படுத்துற.. ப்ளீஸ் மா' 1,2,3 சொல்ல கதறி அழும் சிறுவன் - இணையத்தில் வைரலாக பரவும் வீடியோ

வைரல் வீடியோ

ஒரு சிறுவன் 1,2,3 சொல்ல தனது அம்மாவிடம் அழுது கொண்டு புலம்பும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 • Share this:
  சமீபத்தில் இணையத்தில் சிறுவனின் அழுகுரல் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. அதனை க்ளிக் செய்து பார்த்தால் அதில் சிறுவன் ஒருவன் தனது தாயிடம் 1,2,3 சொல்ல அழுது கொண்டு ‘அம்மா.. ஏன்மா.. கொடுமை படுத்துற.. ப்ளீஸ் மா ஐயோ’ என கதறும் படி உள்ளது.

  இதனை பார்த்த நெட்டிசன்களில் ஒருவர், இந்த கொரோனா காலத்திற்கு பிறகு குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்புவதும், பள்ளி ஆசிரியர்கள் பாடம் புகட்டுவதும் அவ்வளவு எளிதல்ல. காலம் தான் குழந்தைகளை நல்வழி படுத்தவேண்டும் என கமெண்ட் செய்துள்ளார்.

  மற்றுமொருவர், இது சிரிக்கவேண்டிய விஷயம் அல்ல. சிந்திக்கவேண்டிய விஷயம். ஒரு தலைமுறையின் எதிர்காலமே வீணாகிவருகிறது என பதிவிட்டுள்ளார்.

     இன்னும் சிலர் இது தவிர்க்கப்பட வேண்டும் எனவும், குழந்தைகளை பெற்றோர் துன்புறுத்துவதை அனுமதிக்க கூடாது எனவும் பதிவிட்டுள்ளனர்.

  இதே போன்று கடந்த ஆண்டு இளைஞர்கள் சிலர் சிறுவனை கடத்தப்போவதாகக் கூறி நாடகமாட அதனால் அந்த சிறுவன் பதறி அழும் காட்சி வீடியோவாக எடுத்து டிக் டாக்கில் வைரலாக்கப்பட்டது. அந்த இளைஞர்கள் இணையவாசிகளின் கோபத்திற்கும் உள்ளானர்கள். ம்மா.. என்னை போட்டு சாகடிக்கறாங்கம்மா.. எங்கம்மா இருக்கே.. என்னை வந்து காப்பாத்தும்மா" என அந்த சிறுவன் பதறி அழும் காட்சி பலரையும் பதபதைக்க வைத்தது. டிக் டாக் லைக்குக்காக இப்படியெல்லாமா செய்வது என்று பலரையும் கோபமடையச் செய்தது அந்த வீடியோ.

      

  இவ்விதம் தொடர்ந்து குழந்தைகளை வைத்து கதறி அழும் படி இணையத்தில் வைரலாக பரவும் வீடியோக்கள் ஒரு தரப்பு மக்களிடையே சிரிப்பை வரவழைத்தாலும் பெரும்பாலும் கோவத்தை தூண்டும் விதமாகவே உள்ளது.
  Published by:Sankaravadivoo G
  First published: