ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இந்தியாவில் இந்த ஆண்டு இயற்கை பேரழிவு ஏற்படும் - வாங்கா பாபாவின் எச்சரிக்கை.!

இந்தியாவில் இந்த ஆண்டு இயற்கை பேரழிவு ஏற்படும் - வாங்கா பாபாவின் எச்சரிக்கை.!

வாங்கா பாபா

வாங்கா பாபா

Baba Vanga Predictions | வாங்கா பாபா இறந்து கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், 5000 ஆண்டுகளுக்கு வரை, உலகில் நிகழக்கூடிய மிகவும் முக்கியமான விஷயங்கள் அனைத்தையுமே இவர் கணித்துவிட்டு போயிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகத்தில் எந்த எந்த நாடுகளில் எந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்று வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நபர்கள் கணித்து வருகின்றனர். இவர்களுக்கு எல்லாம் முன்னோடி என்றால் அது நாஸ்டர்டாமஸ் என்று கூறலாம். உலகத்தில் எந்த ஆண்டுகளில் எந்த நாடுகளில் எந்தவிதமான பாதிப்புகள் எல்லாம் ஏற்படும் என்று ஏகப்பட்ட கணிப்புகளை குறிப்புகளாக சொல்லியிருக்கிறார். அவர் கூறிய பல விஷயங்கள் உண்மையாக நடந்தும் இருக்கின்றன.

ஜூனியர் நாஸ்டர்டாமஸ் என்று வாங்கா பாபா என்ற ஒரு சைக்கிக்கை கூறலாம். கண் பார்வையில்லாத வாங்கா பாபா கூறிய பல கணிப்புகள் உண்மையாகி உள்ளன. 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் இயற்கை பேரழிவால் மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இது எவ்வளவு தூரம் உண்மையாகும் சாத்தியம் இருக்கிறது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

வாங்கா பாபா பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர். இவர் ஒரு உளவியலாளர் என்று கூறப்படுகிறது. வாங்கா பாபாவின் ஏலியன் தாக்குதல், சுனாமி தாக்குதல், என்று உலகத்தையே புரட்டிப் போட்ட பல விஷயங்களை கணித்து, அவை உண்மையாகி உள்ளன. இதனாலேயே, இந்தியாவில் இயற்கை பேரழிவு ஏற்படும் ஆபத்து இருக்கிறது என்ற கணிப்பு அச்சுறுத்தக் கூடியதாக இருக்கிறது.

இதுவரை இந்த பார்வையற்ற வாங்க பாபாவின் கணிப்புகளில் கிட்டத்தட்ட 85% நடந்துள்ளது. சோவியத் யூனியன் கலைக்கப்பட்டது, இளவரசி டயானாவின் திடீர் மரணம், தெற்காசிய நாடுகளில் சுனாமி மற்றும் அமெரிக்காவின் பராக் ஓபாமா பிரெஸிடெண்ட் ஆனது ஆகியவற்றை வாங்க பாபா கணித்துள்ளார். உலக அளவிலேயே இந்த நிகழ்வுகள் மிகப்பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் இவரது கணிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது.

வாங்கா பாபா இறந்து கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், 5000 ஆண்டுகளுக்கு வரை, உலகில் நிகழக்கூடிய மிகவும் முக்கியமான விஷயங்கள் அனைத்தையுமே இவர் கணித்துவிட்டு போயிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Also Read : வாங்கா பாபாவின் இரண்டு கணிப்புகள் உண்மையாகிவிட்டன – இன்னும் என்ன நடக்கப் போகிறது.?

ஏற்கனவே உண்மையான வாங்கா பாபாவின் கணிப்புகள்

ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் தீவிரமான வெள்ளம் பாதிப்பு உண்டாகும் மேலும் பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதலால் உயிர் இழப்பும் கணிசமாக இருக்கும். அதை உண்மையாக்கும் படி, ஆஸ்திரேலியாவின் தென் கிழக்கு கரையோரப் பகுதிகளில் ஏற்கனவே தீவிரமாக பாதிக்கப்பட்டு வருகின்றன.

உலகத்தில் உள்ள மிகப்பெரிய நகரங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். தண்ணீருக்காக ஒரு போர் உருவாகலாம் என்றும் பாபா கணித்துள்ளார். போர்ச்சுகல் மற்றும் இத்தாலி நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும், அதனால் வெட்டுக்கிளி தாக்குதல் மற்றும் பஞ்சம் ஏற்படும் என்றும் அவர் கணித்துள்ளார்.

Also Read : இந்த போட்டோவில் நிஜமாகவே சிறுத்தை மறைந்திருக்கிறதா.? முடிந்தால் கண்டுபிடியுங்கள்.!

வாங்கா பாபாவின் எதிர்கால கணிப்புகள்

* 2023 ஆம் ஆண்டில் பூமியின் ஆர்பிட் மாறும்

* 2028 ஆம் ஆண்டில் விஞ்ஞானிகள் வீனஸ் கிரகத்துக்கு செல்வார்கள்.

* உறுப்பு மாற்று சிகிச்சை மூலம், 2046 ஆம் ஆண்டுக்குப் பிறகு, மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 100 ஆண்டுகளாக மாறும்.

* அடுத்த நூற்றாண்டில், இரவு நேரம் என்பதே இல்லாமல் போகும். அதாவது, செயற்கை சூரியன் மூலம், பூமி நாள் முழுவதும் பகலாக இருக்க வைக்கும்.

* உலகம் 5079 ஆம் ஆண்டு அழியும் என்றும் கணித்துள்ளார்.

Published by:Selvi M
First published:

Tags: India, Trending