யானை மீது உட்கார்ந்தபடி யோகா செய்த பாபா ராம்தேவ்.. நிலைதவறி கீழே விழுந்ததால் பரபரப்பு (வீடியோ)

யானை மீது யோகா செய்தபோது கீழே விழுந்த பாபா ராம்தேவ்

மாணவர்களுக்கு யோகா பயிற்சி தருவதாக அவர் யானை மீது ஏறி யோகா செய்தார். சிறிது நேரத்தில், யானை தனது உடலை அசைத்ததால், பாபா ராம்தேவ் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்.

  • Share this:
மதுராவில் அமைந்துள்ள ராமனரதியில் அமைந்துள்ள  குருசரணன்  ஆசிரமத்திற்கு வந்த பாபா ராம்தேவ் அங்கிருந்த யானை மீது அமர்ந்து யோகா  செய்தார்.  மாணவர்களுக்கு யோகா பயிற்சி தருவதாக அவர் யானை மீது ஏறி யோகா செய்தார். சிறிது நேரத்தில், யானை தனது உடலை அசைத்ததால், பாபா ராம்தேவ் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இந்த, வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கீழே விழுந்து எழுந்து புன்னகையுடன் வேகமாக நடக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அவருக்கு இதில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. யானை அசைத்ததும் கீழே விழுந்து, அவர் எழுந்து விரையும் இந்த, வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Published by:Gunavathy
First published: