தன்னை படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட யூடியூபர் மீது 'பாபா கா தாபா' முதியவர் மோசடி புகார்!

'பாபா கா தாபா' உரிமையாளர்

பாபா கா தபாவின் உரிமையாளர் காந்தா பிரசாத், வீடியோவை படம்பிடித்த யூடியூபரால் ஏமார்ந்ததாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

 • Share this:
  டெல்லி மால்வியாநகர் பகுதியில் அனுமன் கோயில் அருகே "பாபா கா தாபா" என்ற சிறிய உணவகம் நடத்தி வந்த 80 வயது முதியவர் கந்தா பிரசாத் கொரோனா காரணமாக கடைக்கு யாரும் வரமால் வருவாய் இன்றி பாதிக்கப்பட்டார்.

  1990ம் ஆண்டில் இருந்து சிறிய உணவகத்தை நடத்தி வரும் அவர், கொரோனா ஊரடங்கு காரணமாக நாள்தோறும் வருவாயின்றி கடை நடத்தி வந்துள்ளார். இதனை அறிந்த யூடியூபர் கெளரவ் வாசன் கடந்த 6ம் தேதி யூடியூபில் முதியவர் மற்றும் அவரின் மனைவி படும் துயரத்தை பதிவிட்டு வீடியோ வெளியிட்டிருந்தார்.

  வீடியோவில் பேசிய கந்தா பிரசாத் ஒரு நாளைக்கு 60 ரூபாய் மட்டுமே வருவாய் கிடைப்பதாக கண்ணீர் சிந்தினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கந்தா பிரசாத் கடைக்கு கூட்டம் அலைமோதியது.

   

      

  இந்நிலையில் தற்போது பாபா கா தபாவின் உரிமையாளர் காந்தா பிரசாத், அந்த வீடியோவை படம்பிடித்த யூடியூபரால் ஏமார்ந்ததாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

  ஓட்டல் உரிமையாளரான காந்தா பிரசாத் அளித்த புகாரின் பேரில் கவுரவ் வாசன் (இன்ஸ்டாகிராம்-யூடியூபர்) தங்கள் ஓட்டல் வீடியோக்களை சமூக ஊடகத்தில் பரப்பி, அதன் மூலம் நன்கொடை பெற்றுள்ளதாகவும், பின்னர் அந்த நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் காந்தா பிரசாத் கூறியுள்ளார்.  கவுரவ் வாசன் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வங்கி கணக்கு எண்களை நன்கொடைக்கு பகிர்ந்துள்ளதாக புகார் அளித்துள்ளார். மேலும் இந்த நன்கொடை குறித்து ‘பாபா கா தாபா’ வின் உரிமையாளர்களான காந்தா பிரசாத் மற்றும் அவரது மனைவிக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது என்று கூறப்படுகிறது.

  கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கினால் தனது சிறிய ஹோட்டல் மோசமாக பாதிக்கப்பட்டதை கண்ணீருடன் விவரித்த அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை காரணம் காட்டி கவுரவ் வாசன் என்பவர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரசாத் உட்பட பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இது தொடர்பாக காவல்துறைக்கு அவர் அளித்த புகாரில், பிரசாத், கவுரவ் வாசன் தனது வீடியோவை படம்பிடித்து ஆன்லைனில் வெளியிட்டார். மேலும் ஓட்டல் உரிமையாளருக்கு பணத்தை நன்கொடையாக வழங்குமாறு சமூக ஊடகங்களில் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். வாசன் வேண்டுமென்றே தனது குடும்பத்தினர் / நண்பர்கள் வங்கி விவரங்கள் மற்றும் மொபைல் எண்களை மட்டுமே நன்கொடையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்,  மேலும் ஓட்டல் தம்பதிக்கு எந்த தகவலையும் வழங்காமல் பல்வேறு வகையான பேமண்ட்கள், அதாவது வங்கி கணக்கு / வாலலெட்கள் மூலம் பெரும் தொகையை சேகரித்தார். அந்த யூடியூபர் தனக்கு நிதி பரிவர்த்தனை விவரங்களை வழங்கவில்லை என்று பிரசாத் குற்றம் சாட்டினார்.

  இது குறித்து விவரித்த போலீஸ் அதிகாரி அதுல் குமார் தாக்கூர், மால்வியா நகர் காவல் நிலையத்தில் நாங்கள் நேற்று இது சம்மந்தமாக புகார் பெற்றோம், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் இதுவரை FIR (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்யப்படவில்லை.

  ALSO READ |  Bigg Boss Tamil 4 | பிக்பாஸில் இருந்து வெளியேறிய வேல்முருகன்.. அடுத்த டார்கெட்டில் ஆரி, அர்ச்சனா..

  "பாபா கா தாபா"  வீடியோ சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் ஊடங்களில் வெளியான அந்த வீடியோவால் சில மணி நேரத்தில், மால்வியா நகரில் உள்ள அந்த சிறிய உணவகத்திற்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர்.

  அங்குள்ள சில உள்ளூர்வாசிகள் சினிமா பிரபலங்களை இந்த ஏழை தம்பதியினருக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டனர். பாபா கா தாபா ஓட்டல் உரிமையாளரின் கண்ணீர் வரவழைக்கும் வீடியோவை
  கண்ட அடுத்த நாளே கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கஸ்டமர்கள் ஹோட்டலை சூழ்ந்து ஓட்டல் உரிமையாளரை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தனர்.  இதுபோன்ற நேர்மையான மற்றும் உண்மையான உழைப்பாளிகளை, ஏமாற்றும் எவரானாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
  Published by:Sankaravadivoo G
  First published: