Baba Ka Dhaba 2.0 - சாலையோர கடைக்காரருக்கு உதவ முன்வந்த Zomato!

Baba Ka Dhaba 2.0 - சாலையோர கடைக்காரருக்கு உதவ முன்வந்த Zomato!

சாலையோர கடைக்காரருக்கு உதவ முன்வந்த Zomato

முழுமையாக ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், வியாபாரம் ஏதும் இல்லாமல் தத்தளித்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மும்பையில் சாலையோரக் கடை நடத்தி வரும் இளைஞர் ஒருவரின் நிலையை அறிந்து, அவருக்கு உதவ zomato நிறுவனம் முன்வந்துள்ளது.

கொரோனா காலத்தில் சாலையோர உணவகம் நடத்தி வந்த சிறு, குறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். முழுமையாக ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், வியாபாரம் ஏதும் இல்லாமல் தத்தளித்தனர். பெரிய உணவகங்கள் ஆன்லைன் உணவு செயலிகள் மூலம் இணைப்பை ஏற்படுத்தி தங்களது தொழிலை தக்க வைத்துக்கொண்ட நிலையில், சாலையோர வியாபாரிகள் நிலை கவலைக்குரியதாக மாறியது.

குறிப்பாக, டெல்லியில் சாலையோரக் கடை நடத்தி வரும் முதியவர் பாபா, வியாபாரம் குறித்து கண்ணீர் மல்க பேசிய வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து சாலையோர வியாபாரிகளின் நிலை வெளிச்சத்துக்கு வந்தது. அந்த வீடியோவுக்குப் பிறகு பலரும் அவரது கடைக்கு நேரடியாக சென்று நெட்டிசன்கள் தங்களது ஆதரவை தெரிவித்தனர். தற்போது அப்படியான நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று மும்பையில் நடந்துள்ளது.

மும்பை வெர்சோவா பீச் பகுதியில் லிட்டி சோகா (‘Litti-Chokha’) சாலையோர உணவகத்தை யோகேஷ் நடத்தி வருகிறார். கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட அவர், உணவகத்தை நடத்த zomato போன்ற ஆன்லைன் நிறுவனங்களின் சப்போர்ட் தேவைப்படுவதாக வாடிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார். பிரியாஷ்னு திவிபெடி (Priyanshu Dwibedi) என்ற வாடிக்கையாளர் யோகேஷூக்கு உதவ முன்வந்து, அவரின் கோரிக்கையை டிவிட்டரில் பதிவிட்டார். அதில், யோகேஷ் வெர்சோவா சாலையோரக் கடை நடத்தி வருவதாகவும், உணவு வியாபாரம் செய்ய சோமோட்டோ நிறுவனத்தின் ஆதரவு தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

சோமோட்டோ நிறுவனத்தின் ஆதரவு இல்லையென்றால், யோகேஷ் வியாபாரத்தை கைவிடும் மனநிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். சோமோட்டோ உள்ளிட்ட நிறுவனங்களையும் தனது பதிவுக்கு டேக் செய்திருந்தார். பிரியாஷ்னுவின் டிவிட்டரைப் பார்த்த நெட்டிசன்கள், யோகேஷின் கடைக்கு நேரடியாக சென்று ஆதரவளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர். அதனால், அவர் கடை இருக்கும் இடத்தை சரியாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டர். நெட்டிசன்களின் கோரிக்கைக்கு ஏற்ப யோகேஷின் கடை இருக்கும் இடம் குறித்த தகவலை பிரியாஷ்னு பதிவு செய்தார்.

Also read... பைக் சாகசத்தில் ஈடுபட்ட பெண்கள் - இன்ஸ்டாவில் வைரலான வீடியோவால் கடுப்பான போலீஸார்!

சிறிது நேரம் கழித்து சோமோட்டோ நிறுவனமும், பிரியாஷ்னு பதிவுக்கு பதில் அளித்தது. அதில், யோகேஷின் தகவலை தனிப்பட்ட முறையில் நிறுவனத்துக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டது. விரைவில் தங்கள் நிறுவனம் சார்பில் யோகேஷை தொடர்பு கொண்டு தங்கள் நிறுவன ஊழியர்கள் உதவுவார்கள் என சோமோட்டோ கூறியது. இதனையடுத்து யோகேஷ் குறித்த தகவலை பிரியாஷ்னுவும் சோமோட்டோவுக்கு அனுப்பி வைத்தார். அண்மையில் சோமோட்டோ நிறுவன ஊழியருக்கும், பெண் ஒருவருக்கும் மோதல் ஏற்பட்டு சர்ச்சையான நிலையில், சோமோட்டோ நிறுவனத்தின் இந்த மனிதாபிமான செயல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: