• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • மணலில் ‘ராமாயண’ ஓவியங்கள்… அயோத்தியில் மணல் கலைஞர் சாதனை!

மணலில் ‘ராமாயண’ ஓவியங்கள்… அயோத்தியில் மணல் கலைஞர் சாதனை!

மணலில் ‘ராமாயண’ ஓவியங்கள்

மணலில் ‘ராமாயண’ ஓவியங்கள்

இந்த கட்டுமான பணியில் ஐஐடி சென்னையை சேர்ந்த சிறந்த வல்லுநகள் ஈடுபட்டிருக்கின்றனர்.

  • Share this:
அயோத்தியில் மணல் கலைஞர் ரூபேஷ் சிங் ராமாயணத்தில் வரும் காட்சிகளை மணலில் வரைந்து சாதனை படைத்திருக்கிறார். ராமாயணத்தின் புகழ்பெற்ற அத்தியாயங்களான பாரத் மிலாப், ராம் லக்ஷ்மன், சீதா ஆகியவற்றை மணலில் உருவாக்கி உள்ளார்.

16-ம் நூற்றாண்டை சேர்ந்த பாபர் மசூதி இந்துத்துவ ஆதரவாளர்களால் 1992ல் இடிக்கப்பட்டது. பின்னர் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அயோத்தியில் 5 ஏக்கர் நிலம் இஸ்லாமிய மசூதி கட்ட ஒதுக்கீடு செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.

360 அடி நீளம், 235 அடி அகலத்தில் அமையவுள்ள இந்த கோயில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களில் கட்டப்படுகிறது. கட்டுமானப் பணிகளில் இரும்பு மற்றும் செங்கற்கள் பயன்படுத்தப்படவில்லை. மூன்று தளங்களைக் கொண்டிருக்கும் இந்த கோயிலில், ஐந்து மண்டபங்கள் இருக்கும் வகையில் உருவாக உள்ளது. பக்தர்களுக்கென்று தனி மையம், அருங்காட்சியகம், ஆராய்ச்சி மையம், ஆடிட்டோரியம், கால்நடை மையம் ஆகியவற்றையும் இந்த கோயில் கொண்டிருக்கும் வகையில் உருவாக்கி வருகிறார்கள்.

இந்த கட்டுமான பணியில் ஐஐடி சென்னையை சேர்ந்த சிறந்த வல்லுநகள் ஈடுபட்டிருக்கின்றனர். ஒவ்வொரு தளத்திற்கும் 106 தூண்கள் வீதம் மொத்தம் 318 தூண்கள் நிறுவப்பட உள்ளன. இந்த தூண்கள் அனைத்தும் இந்து புராணங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்படும். தூண்களில் அனுமன், கிருஷ்ணர் போன்ற பிற கடவுள்களின் சிலைகள் இந்து மத புனிதர்களின் ஆலோசனையின் பேரில் வடிவமைக்கப்படும். இந்தக் கோயில் முதலில் இரண்டு தளங்களைக் கொண்டிருக்கும் என தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் தற்போது, கோயிலின் மேம்படுத்துவதற்காக மூன்றாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.கங்கை, யமுனை, புராணங்களில் நம்பப்படும் சரஸ்வதி நதியிலிருந்து மண்ணும், தண்ணீரும் கொண்டு வந்து பூமி பூஜையில் பயன்படுத்தப்படும். இது தவிர தேசிய தலைநகரிலுள்ள கோயில்கள், குருத்வாராக்கள் உள்ளிட்ட 11 புனித இடங்களிலிருந்து மண், மணல் பயன்படுத்தப்படும்’ என்று கோவில் கமிட்டி அறிவித்து இருக்கின்றனர்.

வருகின்ற தீபாவளி பண்டிகையை பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இதனையொட்டி, மணல் கலைஞரான ரூபேஷ் சிங், ராமாயணத்தின் புகழ்பெற்ற அத்தியாயங்களான பாரத் மிலாப், ராம் லக்ஷ்மன், சீதா ஆகியவற்றை மணலில் உருவாக்கி உள்ளார். "திரேதா யுகத்தின்" அடையாளமாக உருவாக்கி இருக்கிறார். இந்து மதத்தில் உள்ள நான்கு யுகங்களில் திரேதா யுகமும் ஒன்று ஆகும்.

Also read... டிஎஸ்பி மகளுக்கு சல்யூட் செய்த டிஐஜி தந்தை - வைரலான புகைப்படம்!

இதுபற்றி பேசிய மணல் கலைஞரான ரூபேஷ் சிங், ‘எனது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் ஆகும். வரைய பல பொருட்கள் தேவைப்படும்.எனவே தான், என்னுடைய பெற்றோரை தொந்தரவு செய்யாமல் மணலில் ஓவியம் வரைய தொடங்கினேன். எனது பெற்றோருக்கு கலை தொடர்பான கருவிகளின் செலவுகளை தாங்க முடியாததால், நான் இந்த மணல் கலையை தேர்ந்தெடுத்தேன். மலிவு விலையில் மணலைப் பயன்படுத்தி ஓவியங்களை உருவாக்க தொடங்கினேன்.

மக்களிடமிருந்தும், ஊடகங்களிடமிருந்தும் எனக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்துள்ளது. இது மிகவும் தனித்துவமான கலை வடிவம் ஆகும். உலகின் மிகப்பெரிய மணல் கலையை உருவாக்கும் கனவு எனக்கு உள்ளது.அது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்’ என்று கூறினார்.இந்த மணல் சிற்பம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: