வாக்கை நிறைவேற்றிய ஆனந்த் மஹிந்திரா - அக்சர் படேல் நெகிழ்ச்சி!

வாக்கை நிறைவேற்றிய ஆனந்த் மஹிந்திரா - அக்சர் படேல் நெகிழ்ச்சி!

ஆனந்த் மஹிந்திரா

அக்சர் படேல் அணிந்திருந்த பிராண்ட் கண்ணாடியை வாங்கி அணிய விரும்புவதாக டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தன்னைப்போல் கண்ணாடி அணிந்துகொண்டு அதனை சமூகவலைதளத்தில் பதிவிட்ட இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் அக்சர் படேல் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா, தீவிர கிரிக்கெட் ரசிகர் ஆவார். இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை கைப்பற்றியதை வெகுவாக பாராட்டிய அவர், அந்த வெற்றியை நினைவு கூறும் விதமாக அக்சர் படேல் அணிந்திருந்த பிராண்ட் கண்ணாடியை வாங்கி அணிய விரும்புவதாக டிவிட்டரில் தெரிவித்திருந்தார். அதனை தற்போது செய்தும் காட்டியிருக்கிறார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை 3 -2 என அண்மையில் கைப்பற்றிய இந்திய அணி, தற்போது அந்த அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. அதற்கு முன்னதாக இரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்றது. அந்த தொடரையும் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியிருந்தது. இந்த டெஸ்ட் தொடரில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல், 3 போட்டிகளில் விளையாடி, 27 விக்கெட்டுகளை கைப்பற்றி அமர்களப்படுத்தியிருந்தார்.

அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்திருந்த நிலையில், இந்திய தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்தார். அதாவது, இங்கிலாந்துக்கு எதிரான தொடரைக் கைப்பற்றிய இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்த அவர், அந்த தொடரில் சிறப்பாக விளையாடிய அக்சர் படேலின் பங்களிப்பை நினைவு கூறும் விதமாக அவர் அணிந்து விளையாடிய கண் கண்ணாடியை வாங்கப்போவதாக அறிவித்திருந்தார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அக்சர் படேல் அணிந்திருந்த கண்ணாடியை பதிவிட்ட அவர், அந்த கண்ணாடி என்ன பிராண்ட்? நான் எங்கே வாங்க முடியும்?’ என கேட்டிருந்தார்.

Also read... வயது என்பது எண் தான் - குட்டிக் கரணம் செய்து அசத்திய வயதான நபர்!

இதனை அடுத்து, இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான 2-வது டி20 போட்டிக்கு முன்னதாக ட்வீட் செய்த ஆனந்த் மஹிந்திரா, ‘இந்தியாவின் வெற்றியை நினைவு கூறும் விதமாக, அக்சரின் சன் கிளாஸை நான் பெறப் போவதாக அறிவித்திருந்தேன். தற்போது ஒரு ஜோடி கண்ணாடியை நான் வாங்கியுள்ளேன். இன்றைய போட்டியைக் காண அனைவரும் ஆவலாக உள்ளனர். டிவி பார்க்க எந்த சன் கிளாஸ்களும் தேவையில்லை என்பது அனைவருக்கும் தெரியும். எனது மனைவிக்கு கூட இவருக்கு என்ன ஆகிவிட்டது என நினைக்கத் தோன்றும். ஆனாலும், இது நல்ல அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கலாம்’ என பதிவிட்டிருந்தார்.


இந்நிலையில், இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்றதையடுத்து, அக்சர் படேல் அணிந்திருந்த அதேவகை பிராண்ட் சன்கிளாஸை அணிந்து அந்த புகைப்படத்தையும் டிவிட்டரில் பதிவிட்டார். தான் கூறியதுபோல் அதிர்ஷ்டம் நடந்துவிட்டதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார். ஆன்ந்த் மஹிந்திராவின் டிவிட் இணையத்தில் வைரலானது. அக்சர் படேலும் அவரின் டிவிட்டுக்கு பதில் அளித்தார். அதில், அந்த கண்ணாடி ஆனந்த் மஹிந்திராவுக்கு மிகவும் கூலாக இருப்பதாக கூறினார். மேலும், தனக்கு ஆதரவு அளித்த உங்களுக்கு மிகவும் நன்றி சார் என்றும் அக்சர் படேல் கூறியுள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: