’தன்னாட்சி’ பரபரப்பை ஏற்படுத்திய ஏ. ஆர் ரஹ்மானின் ட்வீட்!

ஏ.ஆர் ரஹ்மானின் இந்த திடீர் ட்வீட் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

news18
Updated: June 4, 2019, 4:09 PM IST
’தன்னாட்சி’ பரபரப்பை ஏற்படுத்திய ஏ. ஆர் ரஹ்மானின் ட்வீட்!
ஏ ஆர் ரஹ்மான்
news18
Updated: June 4, 2019, 4:09 PM IST
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தனது ட்விட்டரில் ‘தன்னாட்சி’ என்று பொருள் தரும் ஆங்கில வார்த்தையை ட்வீட் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய கல்விக்கொள்கையின் படி இந்தி பேசாத மாநிலங்களும் இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை அறிக்கை அனுப்பியிருந்தது.

இதற்கு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தேன் கூட்டில் கல்லெறியும் முயற்சி என்று திமுக இதனை விமர்சித்திருந்தது.


தமிழக அரசும் இருமொழிக்கொள்கை என்பதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று உறுதியாக தெரிவித்தது.

இந்த நேரத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான், பஞ்சாபிலும் தமிழ் பரவுகிறது என்று ட்வீட் செய்து, தனது பாடலை பஞ்சாப் பாடகர் பாடும் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார்.இதனை அடுத்து, இந்தி கட்டாயம் அல்ல என்றும் விருப்பப்பாடமாக தேர்வு செய்யலாம் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரை அறிக்கையில் திருத்தம் செய்தது.

இதற்கும் ரியாக்ட் செய்த ஏ.ஆர் ரஹ்மான் ”அழகிய தீர்வு தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல... திருத்தப்பட்டது வரைவு!” என்று ட்வீட் செய்திருந்தார்.இந்நிலையில், திடீரென தன்னாட்சி என்று பொருள்தரக்கூடிய AUTONOMOUS என்ற வார்த்தையை பகிர்ந்து, கேம்ப்ரிட்ஜ் ஆங்கில அகராதியில் அதற்கான விளக்கம் என்று அதன் இணைப்பையும் ட்வீட் செய்துள்ளார்.ஏ.ஆர் ரஹ்மானின் இந்த திடீர் ட்வீட் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

“என்ன சொல்லவருகிறார் ஏ.ஆர் ரஹ்மான்?” என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். 

First published: June 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...