பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவில் முதலுதவி பொருட்கள், பிஸ்கேட், சாக்லேட் போன்ற பொருட்களை வைத்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறார்.
பெங்களூரூ எப்போழுதும் போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போன நகரம். இதனால் எரிச்சலடையும் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுநரும் ஒவ்வொரு வழியை கடைபிடிப்பார்கள். இந்நிலையில், பெங்களூரூ ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், “நம்ம யாத்ரி” எனற செல்போன் செயலியை ஆரம்பித்துள்ளனர். இந்த செயலி மூலம் ஆட்டோ ஓட்டும் ஓட்டுநர் ஒருவர் சமூக வளைதளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறார்.
உத்தம் காஷ்யப் என்பவர் இவரை பற்றி ட்விட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், “ராஜேஷ் பெங்களூருவில் ஆட்டோ ஒட்டுநராக உள்ளார். அவரது ஆட்டோவில் பல வாடிக்கையாளர் பயன்படுத்த சானிடைசர்கள், முதலுதவி பொருட்கள் மற்றும் சாக்லேட் போன்ற பொருட்களை வைத்துள்ளார். அவரிடம் இந்த பொருட்கள் பற்றி கேட்டபோது, வாடிக்கையாளர்தான் தனக்கு எல்லாமே என என்னிடம் கூறினார். ராஜேஷுக்கு பாராட்டுகள்” என அவர் தெரிவித்திருந்தார்.
இந்த போஸ்ட் வைரலான நிலையில், பலர் இந்த போஸ்டில் கமெண்ட் செய்தனர். அதில் ஒருவர், ராஜேஷை போல பலர் நமக்கு தேவை என தெரிவித்திருந்தார். மற்றொருவர், வாடிக்கையாளர் சேவை அருமையாக உள்ளது. அவருக்கு மகிழ்ச்சியாக தான் டிப்ஸ் அளிப்பேன் எனவும் தெரிவித்திருந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Auto Driver, Bangalore