போலீஸ் விசாரணையின் போது பொதுவெளியில் வாயு வெளியேற்றிய நபருக்கு அபராதம்!

போலீஸ் விசாரணையின் போது பொதுவெளியில் வாயு வெளியேற்றிய நபருக்கு அபராதம்!

மாதிரி படம்

கடந்த வருடம் ஜூன் 5-ஆம் தேதி காலை நேரம் ஒன்றின் போது குறிப்பிட்ட நபர் பூங்கா ஒன்றில் உட்கார்ந்து இருந்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பல நேரங்களில் உடலில் ஏற்படும் தவிர்க்க முடியாத அசௌகரிய கோளாறாக இருப்பது வாயு வெளியேற்றம். ஆஸ்திரிய நட்டு தலைநகரான வியன்னாவில் இது தொடர்பான சம்பவத்தில் விதிக்கப்பட்ட அபராதத்தை மேல்முறையீடு செய்து குறைத்துள்ளார் குற்றம்சாட்டப்பட்ட நபர். கடந்த வருடம் ஜூன் 5-ஆம் தேதி காலை நேரம் ஒன்றின் போது குறிப்பிட்ட நபர் பூங்கா ஒன்றில் உட்கார்ந்து இருந்துள்ளார். அப்போது அவரருகே சென்ற போலீஸ் அதிகாரிகள் அவரிடம் யார், எந்த பகுதியை சேர்ந்தவர், எதிராக பூங்காவில் உட்கார்ந்திருக்கிறார் என்பது பற்றி விசாரணை நடத்தி உள்ளனர்.

அப்போது போலீஸார் கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்காமலும், அவர்களின் விசாரணைக்கு ஒத்துழைக்காமலும் முரண்டு பிடித்துள்ளார். இருப்பினும் போலீஸார் விடாமல் அவரிடம் கேள்விகளை கேட்டபடி இருந்தனர். இதில் எரிச்சலடைந்த அந்த நபர் போலீஸ் கேள்விகளை கேட்டு கொண்டிருக்கும் போதே பூங்காவின் இருக்கையில் இருந்து எழுந்து நன்றாக சத்தமாக உடலில் இருக்கும் வாயுவை வெளியேற்றி உள்ளார். ஏற்கனவே கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லாமல் இருந்ததால் அந்த நபர் மீது கடுப்பில் இருந்த போலீஸார், அவரின் இந்த செயலால் மேலும் சூடாகி விட்டனர்.

இதனை தொடர்ந்து அந்த நபருக்கு பொது இடத்தில் அதிக சத்தமிட்டு இடையூறு விளைவித்ததாக கூறி 500 யூரோக்கள்(ரூ.44,687) அபராதம் விதித்து விட்டனர். வினோதமான இந்த அபராதத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்று முறையிட்டார் அந்த நபர். நீதிமன்றத்தில் அபராதத்தை நியாயப்படுத்திய வியன்னா போலீஸார், அவர் எழுப்பிய சத்தம் இயற்கையான வாயு வெளியேற்றத்தை விடவும் அதிகமாக இருந்தது என்றனர். தற்செயலாக இது நிகழ்ந்திருந்தால் பெரிதாக்கி இருக்க மாட்டோம்.

ஆனால் அவர் அதிகாரிகளை பார்த்து வேண்டுமென்றே வெறுப்பேற்றும் வகையில் இந்த செயலை செய்தார். அவர் ஏற்கனவே அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் விசாரணைக்கு ஒத்துழைக்காத வகையிலும் நடந்துகொண்டார் அவர் என்று வாதிட்டது. ஆனால் "உடலில் இருக்கு வாயுவை வெளியேற்றுவது என்பது ஒரு ‘உயிரியல் செயல்முறை’. இதை வேண்டுமென்றே செய்தாலும் கூட வாயு வெளியேற்றுவது கருத்துச் சுதந்திரத்தின் கீழ் சரியானதாக கருதப்பட வேண்டும்.

Also read... பஞ்சாப் பெண்ணை விரும்பிய ஆந்திரா பையன் - குடும்பத்தில் நடந்த சுவாரஸ்யம்!

எனவே எனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை தள்ளுபடி செய்து நான் குற்றமற்றவன் என்று தீர்ப்பு வழங்க வேண்டம் என அபராதம் விதிக்கப்பட்ட நபர் வாதிட்டார். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிமன்றம், எவ்வாறாயினும் கண்ணியத்தின் எல்லைகளை நபரின் செயல் மீறி விட்டது. இது அபத்தமானது என்பதில் மாற்று கருத்து இல்லை. இது குறிப்பிட்ட நபரின் சராசரி மற்றும் முதல் குற்றம் என்பதால் அபராதத்தை 100 யூரோவாக குறைப்பதாக (ரூ.8,948) தீர்ப்பு வழங்கியுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: