Home /News /trend /

ஆஸ்திரேலிய பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்... லாட்டரி மூலம் கிடைத்த ரூ.55 லட்சம்!

ஆஸ்திரேலிய பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்... லாட்டரி மூலம் கிடைத்த ரூ.55 லட்சம்!

Lucky Lotteries draw

Lucky Lotteries draw

Trending | சில நாட்கள் இது தொடர்ந்து கொண்டே இருந்த நிலையில் திடீரென தான் லக்கி டிராவில் பங்கேற்ற அக்கவுண்டை லாகின் செய்து பார்த்துள்ளார். அங்கு அவருக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. ஆம், மெயில் பாக்ஸின் குப்பை என புறக்கணிக்கப்பட்ட மெயில் ஒன்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவரை  மில்லினியர் ஆக்கியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு லாட்டரி சீட்டு மூலம் 55 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்துள்ளதாக வந்த செய்தியை முதலில் பொய் என புறக்கணித்துவிட்டு, பின்னர் உண்மை அறிந்து ஓடோடி போய் பரிசுப் பணத்தை வாங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது, எப்படி அடிக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ‘கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும்’ என்ற பழமொழி சிலர் விஷயங்களில் உண்மையாகியிருக்கிறது. கூலித்தொழிலாளி கூட லாட்டரியில் திடீரென அடிக்கும் ஜாக்பாட்டால் ஒரே இரவில் மில்லியனர்கள் ஆனதாக பல செய்திகளை பத்திரிகைகளிலும், சோசியல் மீடியாக்களிலும் பார்த்திருப்போம்.

குப்பையில் கிடைத்த புதையல் போல, மெயில் பாக்ஸின் குப்பை என புறக்கணிக்கப்பட்ட மெயில் ஒன்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவரை மில்லினியர் ஆக்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஃப்ரெஞ்ச்ஸ் ஃபாரஸ்ட் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி லக்கி லாட்டரி டிரா தளமான thelott.com என்ற இணையதளத்தில் இருந்து லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். அந்த லக்கி டிரா முடிந்த பிறகு அந்த பெண்மணி தனது லாட்டரி எண்களை சரி பார்க்க மறந்தும் போயிருக்கிறார்.

  

ஆனால் அந்த பெண்மணி வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 101,000 ஆஸ்திரேலிய டாலர், அதாவது இந்திய மதிப்பில் 55 லட்சம் ரூபாய் பரிசு விழுந்துள்ளது. இதுதொடர்பாக பரிசு போட்டியை நடத்திய இணையதளத்தினர் அந்த பெண்மணியை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால் அவர் அந்த தொலைபேசி அழைப்புகள் அனைத்துமே போலியானவையாக இருக்கலாம் என நினைத்து தவிர்த்திருக்கிறார்.

Also Read : உயிரோடு இருக்கும் போதே இறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பித்த பெண்!

இதுதொடர்பாக லக்கி டிரா இணையதளத்தில் இருந்து அதிகாரப்பூர்வ இ-மெயிலும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் நிச்சயம் இதெல்லாம் ஏதோ மோசடி வேலைகள் என நினைத்து அந்த பெண் தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளார்.

Also Read : ஒரே நாள் இரவில் 20 ஆண்டுகால நினைவுகளை மறந்த பெண்

இதுகுறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ள பெண்மணி "டிராவுக்குப் பிறகு எனக்கு சில தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் வந்தது. ஆனால் தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சலை என்னால் அடையாளம் காண முடியவில்லை, அதனால் நான் பதிலளிக்கவோ அல்லது கவனிக்கவோ இல்லை. மேலும் அவை நிச்சயம் ஒரு மோசடியாக தான் இருக்கும் என உறுதியாக நம்பினேன்” எனத் தெரிவித்துள்ளார்.சில நாட்கள் இது தொடர்ந்து கொண்டே இருந்த நிலையில் திடீரென தான் லக்கி டிராவில் பங்கேற்ற அக்கவுண்டை லாகின் செய்து பார்த்துள்ளார். அங்கு அவருக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. ஆம், ஆஸ்திரேலிய மதிப்பில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான டாலர்களை வெற்றி பெற்றுள்ளதை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார். இதனை தனது கணவரிடமும் பகிர்ந்து கொண்ட அந்த பெண்மணி, ஒன்றிற்கு நான்கு முறை நமக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளதா? என்பதையும் சோதித்து உறுதிபடுத்திக்கொண்டுள்ளார்.

Also Read : பிச்சை எடுத்து வாழ்ந்த பெண் இறந்த பிறகு குடும்பத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆன்லைன் தளத்தை அணுகி தான் ஜாக்பாட் வென்றுள்ளதை உறுதி செய்துள்ளார். தற்போது பரிசுத்தொகை வங்கி கணக்கிற்கு வருவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக லக்கி டிராவில் பங்கேற்று வருவதாகவும், இதுவரை சிறிய தொகையை கூட ஜெயிக்காத பெண்ணுக்கு, இப்படியொரு ஜாக்பாட் அடித்திருப்பது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Lottery, Trending

அடுத்த செய்தி