ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மகளுக்கு கர்ப்பப்பை தானம் செய்த தாய்! தான் வளர்ந்த கருப்பையிலேயே தன் வாரிசை வளர்க்கும் அதிசயம்!

மகளுக்கு கர்ப்பப்பை தானம் செய்த தாய்! தான் வளர்ந்த கருப்பையிலேயே தன் வாரிசை வளர்க்கும் அதிசயம்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இன்றைய மருத்துவ வளர்ச்சியின் காரணமாக, கர்ப்பப்பை சார்ந்த பல சிக்கல்களுக்கு தீர்வு காணப்படும் நிலையில், அவர்களுக்கும் குழந்தைப்பேறு கிடைக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

குழந்தை வரம் என்பது சாதாரண விஷயமா என்ன? சாதாரணமாக சாலையில் பயணிக்கும்போது கண்களால் நோட்டமிடுங்கள். நம்மைச் சுற்றிலும் எத்தனை கருத்தரித்தல் மையங்கள் இருக்கின்றன என்பதை பாருங்கள். கணவன், மனைவி இருவருமே முழு உடல் தகுதியோடு இருக்கும் பட்சத்தில் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் எந்தச் சிக்கலும் இருப்பதில்லை.

ஆனால், இருவரில் யாருக்காவது ஒருவருக்கு ஏதேனும் சிறு பிரச்சினை இருந்தால் கூட, கருத்தரிக்க பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாகிவிடுகிறது. குறிப்பாக, பெண்களுக்கு கர்ப்பப்பை சார்ந்து பிரச்சனைகள் எழுகின்றபோது முந்தைய காலங்களில் குழந்தை பெற்றுக் கொள்ளவே முடியாது என்ற நிலை இருந்தது.

ஆனால், இன்றைய மருத்துவ வளர்ச்சியின் காரணமாக, கர்ப்பப்பை சார்ந்த பல சிக்கல்களுக்கு தீர்வு காணப்படும் நிலையில், அவர்களுக்கும் குழந்தைப்பேறு கிடைக்கிறது. இதன் அடிப்படையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் வளர்ந்த அதே கருவறையில் தனக்கான குழந்தையை சுமக்கப் போகிறார். ஏன் இந்த நிலை ஏற்படுகிறது? இது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்விகளுக்கு மருத்துவ உலகம் பதில் அளிக்கிறது.

Read More : உலகிலேயே மிக நீளமாக நகம் வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த 5 நபர்கள் இதோ.! 

கர்ப்பபையில் சிக்கலை எதிர்கொண்ட இளம்பெண் :

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ்டி பிரயண்ட் என்ற 29 வயதான பெண் கடந்த ஆண்டு குழந்தை பெற்றுக் கொண்டார். ஆனால், கர்ப்ப காலத்திலும், குழந்தையை பெற்றெடுத்த போதிலும் அவர் எதிர்கொண்ட சிக்கல்களால், கர்ப்பப்பையானது மீண்டும் குழந்தையை சுமக்கும் தகுதியை இழந்துவிட்டது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

ஆனால், கிறிஸ்டிக்கு மற்றொரு குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. இதையடுத்து, வாடகை தாய் அடிப்படையில் குழந்தை பெறுவது, குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது போன்ற சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்தார்.

ஆனால், ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாகாணத்திலும் வாடகை தாய் தொடர்பாக வெவ்வேறு கடினமான விதிமுறைகள் பின்பற்றப்படுவதை தெரிந்து கொண்டார். அதே சமயம், இன்னொரு குழந்தை வேண்டும் என்ற அவரது கனவையும் கைவிட முடியவில்லை. அத்தகைய சூழலில் தான் அவர் மற்றொரு விஷயத்தை தெரிந்து கொண்டார்.

அதாவது, நவீன மருத்துவத்தில் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியும் என்றும், தன்னுடைய கர்ப்பப்பையை நீக்கிவிட்டு வேறொரு கர்ப்பப்பையை பொருத்திக் கொள்வதன் மூலமாக தான் மீண்டும் குழந்தை பெற முடியும் என்று தீர்மானித்தார்.

கர்ப்பப்பை தானம் செய்யும் தாயார் :

ஒரு மகளுக்கு என்ன பிரச்சனை என்றாலும் துடிதுடித்து நிற்பவர் அம்மா தான். மகளுக்காக எதையும், எந்த அளவுக்கும் செய்ய துணிவார்கள். அப்படி இருக்கையில், கிறிஸ்டியின் தாயாரும் அதேபோன்றதொரு முடிவை எடுத்தார். அதாவது, கிறிஸ்டிக்கு அவரது தாயாரிடம் இருந்தே கர்ப்பப்பையை தானமாக பெற்று பொருத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

தன்னுடைய மகள் மீண்டும் தாயாக இருப்பதைப் பார்க்க ஆவலுடன் இருப்பதாக கிறிஸ்டியின் தாயார் கூறியுள்ளார். உலகெங்கிலும் இதுவரையில் 70க்கும் மேற்பட்டோருக்கு கர்ப்பப்பை மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், அதில் 40 சதவீதம் பேர் வெற்றி அடைந்துள்ளனர் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். அதே பாணியில், இவர்களது அறுவை சிகிச்சையும் வெற்றி அடையும் பட்சத்தில், கிறிஸ்டி வளர்ந்த அதே கருவறையில், தனக்கான குழந்தையை சுமக்க போகிறார் என்பது நெகிழ்ச்சியான விஷயமாக அமையும்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Trending News, Trending Video, Viral