Home /News /trend /

மீன்பிடி தூண்டிலை வைத்து நகைக்கடையில் கொள்ளையடித்த திருடன்..! வெளியானது சிசிடிவி காட்சிகள்

மீன்பிடி தூண்டிலை வைத்து நகைக்கடையில் கொள்ளையடித்த திருடன்..! வெளியானது சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

ஆஸ்திரேலியாவில் நகைக்கடையில் தூண்டிலை வைத்து ஒருவர் நெக்லஸை திருடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள ஒரு நகைக்கடையில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் நெக்லஸைத் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

அந்த வீடியோவில் உள்ள திருடன் முதலில் நகைக்கடையின் கண்ணாடி ஜன்னலை உடைக்கிறார். அதன்பின மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் தூண்டிலைப் பயன்படுத்தி, நெக்லஸை லாவகமாக எடுக்கிறார்.



அந்த நெக்லஸ், இந்திய மதிப்பில் 60 ஆயிரம் ரூபாய். இவையனைத்தும் அருகில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாக, தற்போது அந்த காட்சிகளை இணையத்தில் வெளியிட்டுள்ள விக்டோரியா மாகாண காவல்துறை இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் தெரிவிக்ககோரி அறிவுறுத்தியுள்ளது.
Published by:Vijay R
First published:

Tags: Viral Video

அடுத்த செய்தி