பெண் உடல் என்றால் என்ன? ஆடையில்லா தோற்றத்தில் இளம்பெண்கள் நடனம்...! உருக்கமான வீடியோ

பெண் உடல் என்றால் என்ன? ஆடையில்லா தோற்றத்தில் இளம்பெண்கள் நடனம்...! உருக்கமான வீடியோ
  • Share this:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொலைக்காட்சி தொடரில் இளம்பெண்கள் அணிந்துவந்த உடை அனைவரது கவனத்தையும் பெற்று பாராட்டுகளை குவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ரியால்டி ஷோவில் பங்கேற்ற இளம்பெண்களின் நடனம் அனைவரது கண்களையும் கலங்க வைத்து விட்டது. மேடையில் இளம்பெண் குழுவினர் வந்து நின்ற உடனே அனவைரும் வியப்புடனும் ஆர்வத்துடனும் அவர்களை பார்த்தனர். அதற்கு காரணம் அவர்கள் அணிந்து வந்த உடை தான்.

தோல் நிறத்திலான நீச்சல் உடையை அவர்கள் அணிந்து வந்திருந்தனர். ஆடையில்லா தோற்றத்தில் இளம்பெண்கள் காட்சியளிக்க அவர்களிடம் நடுவர் இதுகுறித்து கேட்டு அறிந்தார். அப்போது இளம்பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் உடல்ரீதியான தொந்தரவு பாதிக்கப்படுகின்றனர். அதனை எடுத்துரைக்கவே நாங்கள் இது போன்று வந்திருக்கிறோம் என்று கூறினார். மேலும் இதுப்போன்ற பிரச்னைகளால் தாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம் என்றார்.


இளம்பெண்களை தற்போதைய சமூகத்தில் எப்படி பார்க்கிறார்கள், அவர்களது உடை, வலைதளங்களில் இளம்பெண்கள் குறித்து பரப்படும் போலியான செய்திகள் என அனைத்து அவலங்களையும் நடனம் மூலமாக அவர்கள் வெளிப்படுத்தினார்கள். இதை பார்த்த பார்வையாளர்கள், நடுவர்கள் உள்ளிட்ட அனைவரது கண்களும் கலங்கின.இளம்பெண்களில் நடனத்திற்கு பின் பேசிய பெண் நடுவர் உங்களின் உணர்வுகளையும், மன சோகங்களையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்று அழுதுக்கொண்டே சொன்னார். மேலும் என்னை மன்னித்து விடுங்கள் எனது கண்ணீரை என்னால் அடக்க முடியவில்லை என்று தெரிவித்தார். சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை பார்த்த பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.Also Watch

First published: October 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading