• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • என்னது வாத்து பேசுதா... ஆஸ்திரேலியாவில் வினோதம்...!

என்னது வாத்து பேசுதா... ஆஸ்திரேலியாவில் வினோதம்...!

என்னது வாத்து பேசுதா

என்னது வாத்து பேசுதா

லைடென் பல்கலைக்கழகத்தின் நெறிமுறையாளர்கள் கேரல் டென் கேட் மற்றும் பீட்டர் ஃபுல்லாகர் ஆகியோர் தங்கள் ஆய்வறிக்கையில், ரிப்பரின் குறிப்பிட்ட குரல் வளத்தை அதிலும் அவை "யூ பிளடி ஃபூல்" என்று சொல்லும் போது அது மனித குரலுடன் எந்தளவுக்கு மிக நெருக்கமான ஒற்றுமையைக் கொண்டுள்ளது என்பதை விளக்கியுள்ளனர்.

  • Share this:
2021ம் ஆண்டை ஒரு விசித்திரமான ஆண்டு என்றே அழைக்கலாம். கண்டிப்பாக கொரோனா பரவலை பற்றி இந்த பதிவில் பேசப்போவதில்லை. சில வினோதமான நிகழ்வினை பற்றி தான் பார்க்க போகிறோம். சமீபத்தில் விஞ்ஞானிகள் சிலர் கீரைகளுக்கு மின்னஞ்சல் அனுப்ப கற்றுக்கொடுத்தனர். கேட்பதற்கு ஆச்சர்யமாக இருந்தாலும் தற்போதுள்ள தொழில்நுட்பங்கள் அடிப்படையில் இது சாத்தியமாகியுள்ளது. ஆனால் வாத்துகள் ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டன என்றால் நம்ப முடிகிறதா?

மஸ்க் வாத்துகள் என்று அழைக்கப்படும் பிசியுரா லோபாடா மற்ற உயிரினங்களை காட்டிலும் ஒலிகளை கேட்டு அதை எளிதில் கற்றுக்கொள்ளக்கூடிய ஒரே நீர்ப்பறவை இனங்கள் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பாடல் பறவைகள், கிளிகள் மற்றும் ஹம்மிங்பேர்ட்ஸ் உள்ளிட்ட பிற பறவைகள் வரிசையில் ஒலிகளை கேட்டு அதை அப்படியே பிரதிபலிக்கும் வாத்துகளுக்கான சான்றுகள் கிடைத்திருப்பது இதுவே முதல் முறை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது தொடர்பாக செப்டம்பர் 6 அன்று, ராயல் சொசைட்டி பி-யின் Philosophical Transactions-ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் இந்த கண்டுபிடிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலிய மஸ்க் வாத்துகளின் குரல் சாயல் மற்றும் உற்பத்தி கற்றல் என்ற தலைப்பில் இது வெளியாகியுள்ளது. சான்றுகளின் படி, ரிப்பர் என்று அழைக்கப்படும் ஒரு வளர்ப்பு ஆஸ்திரேலிய மஸ்க் வாத்து, "யூ பிளடி ஃபூல்" என்ற வாக்கியத்தை உச்சரிப்பது மட்டுமல்லாமல் வேகமாக சாத்தப்படும் கதவின் சத்தம் மற்றும் சில பேச்சுகளின் ஒலிகளை அப்படியே மிமிக் செய்வதாக கூறப்படுகிறது.

லைடென் பல்கலைக்கழகத்தின் நெறிமுறையாளர்கள் கேரல் டென் கேட் மற்றும் பீட்டர் ஃபுல்லாகர் ஆகியோர் தங்கள் ஆய்வறிக்கையில், ரிப்பரின் குறிப்பிட்ட குரல் வளத்தை அதிலும் அவை "யூ பிளடி ஃபூல்" என்று சொல்லும் போது அது மனித குரலுடன் எந்தளவுக்கு மிக நெருக்கமான ஒற்றுமையைக் கொண்டுள்ளது என்பதை விளக்கியுள்ளனர். மேலும் ரிப்பர் வாத்து கம்பி வேலிக்கு உள்ளே அடைக்கப்பட்டிருக்கும் போது அவை வெளியிடும் ஒலி பதிவு செய்யப்பட்டது.

Also read... ’நாங்கள் காதலிக்கிறோம்’ சிம்பன்சி குரங்கை காதலித்த பெண் - தடை விதித்த பூங்கா நிர்வாகம்!

அவை ஒரு மீட்டருக்கும் குறைவான தூரத்தில் வைக்கப்பட்டிருந்த மைக்ரோஃபோன் மூலம் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. அப்போது ரிப்பர், பெரும்பாலும் அதனை வளர்த்த உரிமையாளரிடம் இருந்து மீண்டும் மீண்டும் கேட்ட சொற்றொடரின் ஒலியை பிரதிபலித்துள்ளது. ஆனால் அவை எந்த வயதில் இந்த திறனை வெளிப்படுத்தியது என்பது தெரியவில்லை. மனிதர்களை போல ஒலியை எழுப்பும் திறன் ரிப்பர் வாத்தில் மட்டும் கண்டுபிடிக்கவில்லை. முன்னதாக தனது தோட்டக்காரருக்கு "ஹலோ" என்று சொல்ல முயன்ற ஒரு ஆண் மஸ்க் வாத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வாத்துக்கள் மனிதர்களின் பேசும் வார்த்தைகளை ஒலியை கூர்ந்து கவனித்து அதனை அப்படியே பிரதிபலிக்கும் என்பதற்கு ரிப்பர் ஒரு எடுத்துக்காட்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: