புட்ட பொம்மா பாடலுக்கு மனைவியுடன் சேர்ந்து நடனம் ஆடி அசத்திய வார்னர்! வைரல் வீடியோ

எஸ்.எஸ்.தமன் இசையில் உருவான புட்ட பொம்மா என்ற பாடலும் நடனமும் மாநில எல்லைகளைக் கடந்து பல தரப்பு மக்களுக்கும் சென்றடைந்தது.

புட்ட பொம்மா பாடலுக்கு மனைவியுடன் சேர்ந்து நடனம் ஆடி அசத்திய வார்னர்! வைரல் வீடியோ
வார்னர்
  • Share this:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அவரது மனைவியுடன் இணைந்து புட்டபொம்மா பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான திரைப்படம் அல வைகுந்தாபுரம்லூ. அந்தப் படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தில் எஸ்.எஸ்.தமன் இசையில் உருவான புட்ட பொம்மா என்ற பாடலும் நடனமும் மாநில எல்லைகளைக் கடந்து பல தரப்பு மக்களுக்கும் சென்றடைந்தது.

இந்தநிலையில், கொரோனா ஊரடங்கில் இருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அவரது மனைவி கேன்டிஸ் வார்னருடன் இணைந்து புட்டபொம்மா பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோ டிக்டாக் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது. அதனையடுத்து, ட்விட்டரில் புட்டபொம்மா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகிவருகிறது.





 




View this post on Instagram




 

It’s tiktok time #buttabomma get out of your comfort zone people lol @candywarner1


A post shared by David Warner (@davidwarner31) on





Also see:
First published: April 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading