காண்டாமிருகம் செய்த கின்னஸ் சாதனை.. இப்படியொரு சாதனையா? நெட்டிசன்கள் வியப்பு..
ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்து மிருகக்காட்சி சாலையில் வளரும் இகுவானா காண்டாமிருகம், மிக அதிக வயதான காண்டாமிருகம் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.

காண்டாமிருகம் செய்த கின்னஸ் சாதனை
- News18 Tamil
- Last Updated: January 21, 2021, 2:11 PM IST
1980-ஆம் ஆண்டு சிட்னியில் உள்ள தரோங்கா (Taronga) மிருகக்காட்சி சாலையில் பிறந்த இந்த காண்டா மிருகம் 1993 ஆம் ஆண்டு குயீன்ஸ்லாந்து மிருகக்காட்சி சாலைக்கு மாற்றப்பட்டது. அப்போது இருந்து அங்கு பராமரிக்கப்பட்டு வரும் இகுவானா காண்டாமிருகம், தற்போது உயிரோடு இருக்கும் இகுவான இன காண்டாமிருகங்களில் அதிக வயதான காண்டாமிருகம் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. இதனையொட்டி, அந்த காண்டா மிருகத்துக்கு கின்னஸ் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், இதே இனத்தைச் சேர்ந்த காண்டா மிருகம் ஒன்று 23 வயது வரை வாழ்ந்தது சாதனையாக இருந்தது. அந்த சாதனையை 41 வயது இகுவானா காண்டாமிருகம் முறியடித்துள்ளது. டொமினிகன் குடியரசு மற்றும் ஹைட்டி நாடுகளுக்கு சொந்தமான ஹிஸ்பானியோலா தீவில் (Hispaniola Island) அதிக எண்ணிக்கையிலான காண்டாமிருகங்கள் உள்ளன.Crikey! Rhino has received a @GWR for the oldest living rhinoceros iguana! He will be turning 41 this year and is such a special part of our #AustraliaZoo family. He celebrated this remarkable honour with his favourite snack, hibiscus flowers!
Congratulations, Rhino!💚 pic.twitter.com/XL2MDWWNBb
— Australia Zoo (@AustraliaZoo) January 18, 2021
அங்குள்ள காண்டாமிருகங்கள் பொதுவாக 17 வயது வரை வாழ்ந்தாலும், சைக்ளூரா (Cyclura (rock iguana) இனத்தைச் சேர்ந்த சில காண்டாமிருகங்கங்கள் 80 வயது வரை வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது. இகுவானா காண்டாமிருகம் கின்னஸ் சாதனை படைத்துள்ளதை குயீன்ஸ்லாந்து மிருகக்காட்சி சாலையின் டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், இகுவான காண்டாமிருகத்தின் புகைப்படமும், கின்னஸ் சாதனைக்கு கொடுக்கப்பட்ட சான்றிதழும் இடம்பெற்றுள்ளது. மேலும், அந்த டிவிட்டர் பக்கத்தில் காண்டாமிருகத்துக்கு “Congratulations, Rhino, என வாழ்த்தும் தெரிவித்துள்ளனர். நவம்பர் 29 ஆம் தேதியே கின்னஸ் சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்தாலும், ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்து மிருகக்காட்சி சாலை ஜனவரி 19 ஆம் தேதி தான் அறிவித்துள்ளது.
Our rhinoceros iguana, Rhino, received a Guinness World Record for being the ‘World’s Oldest Rhinoceros Iguana’. At nearly 41 years of age, Rhino lives at Australia Zoo and loves basking in the sun while eating his favourite treat, hibiscus flowers.
We love you dearly, Rhino!🌺 pic.twitter.com/PkJwvtKqG2
— Bindi Irwin (@BindiIrwin) January 18, 2021

இதனையொட்டி இகுவானா காண்டாமிருகத்துக்கு பலரும் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் தொலைக்காட்சிகளில் பிரபலமாகவும், மிருகக்காட்சி சாலையில் பணியாற்றிக்கொண்டிருக்கும் பிந்தி இர்வினும் (Bindi Irwin), தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இகுவானாவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், இகுவானா தனக்கு பிரியமான உணவான ஹைபிஸ்கஸ் மலர்களை (hibiscus flowers) சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே அந்த மிருகக்காட்சி சாலைக்கு சென்ற பலரும், இகுவானா காண்டாமிருகத்துக்கு தங்களின் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.