அமெரிக்காவைச் சேர்ந்த 3 நபர்கள், தங்கள் நாட்டில் உள்ள 50 மாகாணங்களுக்கும் சென்று வர வேண்டும் என்ற கனவை நிறைவேற்றியுள்ளனர். மொத்தம் 7,200 மைல் தொலைவு பயணத்தை மிக குறுகிய காலத்தில் நிறைவு செய்து சாதனை படைத்துள்ளனர். இந்தப் பயணத்திற்கு ரூ.9.5 லட்சம் செலவாகியுள்ளது.
பீட்டர் மெக்கோன்வில்லே, பவேல் க்ரெசீடோவ், அப்துல்லாஹி சலாஹ் ஆகிய மூவரும் அமெரிக்க மாகாணங்களை மிக விரைவாக பார்வையிட்டுள்ளனர். இவர்களது பயண நேரம் என்பது 5 நாட்கள், 13 மணி நேரம் மற்றும் 10 நிமிடங்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஜஸ்டின் மோரீஸ், தாமஸ் கெனான் ஆகிய இருவரும் இதேபோன்று அமெரிக்க மாகாணங்களை சுற்றி வந்து சாதனை படைத்திருந்தார்கள். அவர்களது பயண நேரம் என்பது 5 நாட்கள், 16 மணி நேரம் மற்றும் 20 நிமிடங்கள் என்று கணக்கிடப்பட்டது. இந்நிலையில், இதைவிட 3 மணி நேரம், 10 நிமிடம் குறைவான நேரத்தில் பயணித்து இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
Read More : ஸ்கூட்டருடன் அந்தரத்தில் தொங்கிய உரிமையாளர்... அதிரடி காட்டிய போலீஸ்! வைரலாகும் வீடியோ..
கின்னஸ் சாதனை புத்தகத்தில், எவ்வளவு வேகம் என்பது குறித்த தகவல்கள் இடம்பெறவில்லை என்றாலும் கூட, இந்தக் குழுவினரின் சாதனை என்பது தற்போது 50 மாகாணங்களின் கிளப்பில் இடம்பெற்றுள்ளது.
ஏன் நேர கணக்கு கிடையாது
பயணங்கள் தொடர்பான சாதனைகளில் நேரத்தை கணக்கிடும் வழக்கத்தை கின்னஸ் உலகை சாதனை பதிவு அமைப்பு கடந்த 1996ஆம் ஆண்டில் கைவிட்டது. ஏனென்றால், சாதனை செய்ய விரும்பும் நபர்கள் மிக கடுமையாகவும், ஆபத்தாகவும் பயணம் செய்வதை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
எப்போது பயணம் தொடங்கியது
முன்னதாக மெக்கோன்வில்லே மற்றும் அவரது நண்பர்கள் கடந்த மே மாதம் 13ஆம் தேதியன்று வெர்மோண்ட் என்ற பகுதியில் இருந்து தங்களின் பயணத்தை தொடங்கினர். இந்தப் பயணம் ஹவேலி பகுதியில் நிறைவடைந்தது.
விமானப் பயணக் கட்டணம், எரிவாயு, உணவு மற்றும் இதர அடிப்படை பொருட்கள் போன்றவை உள்பட ஒட்டுமொத்தமாக இவர்கள் 12 ஆயிரம் டாலர் (ரூ.9.56 லட்சம்) செலவு செய்துள்ளனர். இந்தப் பயணம் குறித்து அவர் கூறுகையில், “இது மிகவும் புத்துணர்ச்சி அளிப்பதாக அமைந்தது. நீண்ட காலமாகவே இதுபோன்ற பயணத்திற்கு திட்டமிட்டு வந்தோம். தற்போது அது நிறைவடைந்திருப்பதில் அனைவருக்கும் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.
முக்கிய பகுதிகளை பார்வையிட்டனர்
மணிக்கிற்கு நிகராக பயண போட்டியை நடத்தியபோதிலும், டைம்ஸ் சதுக்கம், மவுண்ட் ரஷ்மோர், போனீவில்லே சால்ட் பிளாட்ஸ் போன்ற முக்கிய பகுதிகளையும் இவர்கள் பார்வையிட்டுள்ளனர். மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி இயல்பு வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பாக இரண்டு நாட்கள் இவர்கள் நீர்நிலைகளில் குளித்து ஓய்வெடுத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.