இந்திய தடகள வீராங்கணையான டூட்டி சந்த் 2020ஆம் ஆண்டு நாடு முழுவதும் அறியப்பட்டார். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றது. இந்தியாவிற்காக ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றது என அடுத்தடுத்து நிகழ்த்தி இந்தியாவை திரும்பி பார்க்கவைத்தார். அதோடு, 100 மீட்டர் தூரத்தை 11.17 விநாடிகளில் கடந்து தேசிய அளவில் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.
இப்படி தடகளத்தில் இவர் நிகழ்த்திய சாதனைகளுக்காக அர்ஜூனா விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டார் டூட்டி சந்த்.ஷ. இதுபோன்ற சாதனைகளால் அவர் நாடு முழுவதும் அறியப்பட்டதை விட கடந்த 2019ஆம் ஆண்டு நாடு முழுவதும் பிரபலமாக அறியப்பட்டார். அதாவது பெண்ணான டூட்டி சந்த், தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக பொதுவெளியில் அறிவித்து நாடு முழுவதையும் திரும்பி பார்க்க வைத்தார்.
டூட்டி சந்த் ஒடிசாவில் தனது சொந்த கிராமத்தில் மோனோலிசா என்ற பெண்ணை காதலிப்பதாக பகிரங்கமாக அறிவித்தார். தற்போது, தான் காதலிக்கும் பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் டூட்டி சந்த்.. புகைப்படத்திற்கு மேல் அன்பு தன்பு தான்… என பதிவிட்டுள்ளார். டூட்டி சந்த் மற்றும் மோனோலிசா இருவரும் பார்ட்டி வியர் உடை அணிந்து மிடுக்காக அமர்ந்தவாறு போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.
“Loved you yesterday, love you still, always have, always will.” pic.twitter.com/1q3HRlEAmG
— Dutee Chand (@DuteeChand) December 2, 2022
2019 ஆம் ஆண்டு தன்பாலின ஈர்ப்பாளர் என அறிவித்தவுடன் அவரது குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது போல் பலரும் அதிருப்தி தெரிவித்துளள்னர். ஆனால் யாரையும், எதையும் பொருட்படுத்தவில்லை டூட்டி சந்த். தான் காதலிக்கும் பெண்ணுடன் நட்பை தொடர்ந்துள்ளார். தற்போது முதல்முறையாக தனது இணையுடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் டூட்டி சந்த். தனிபாலின ஈர்ப்பாளர் என தன்னை அறிவித்துக் கொண்ட இந்தியாவின் முதல் தடகள் வீராங்கணை டூட்டி சந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று தன் இணையோடு சந்த் பதிவிட்டிருக்கும் பதிவில்…நேற்று உன்னை காதலித்தேன், இன்றும் காதலிக்கிறேன், நாளையும் என்றம் காதலித்துக்கொண்டே இருப்பேன் எனக் குறிப்பிட்டு தனது காதலின் ஆழத்தை வெளிப்படுத்தியுள்ளார் டூட்டி சந்த்…
செய்தியாளர் : ரொசாரியோ ராய்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.