Home /News /trend /

பாலைவனத்தில் பூக்களா? பூத்துக்குலுங்கும் அட்டகாமா பாலைவனம்.... கண்ணைக் கவரும் காட்சிகள் !

பாலைவனத்தில் பூக்களா? பூத்துக்குலுங்கும் அட்டகாமா பாலைவனம்.... கண்ணைக் கவரும் காட்சிகள் !

பூத்துக்குலுங்கும் அட்டகாமா பாலைவனம்

பூத்துக்குலுங்கும் அட்டகாமா பாலைவனம்

Atacama Desert | பாலைவனத்தில் சாதாரணமாக ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை மழை பொழியும். அந்த மழையின் போது புதைந்த விதைகள் முளைத்து பூக்கும். இதை "டெஸியர்டோ புளோரிடோ" desierto florido (மலரும் பாலைவனம்) நிகழ்வு என்றுக் குறிப்பிடுகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai | Tamil Nadu
உலகின் வறண்ட நிலத்தில் அதிகபட்சமாக நான்கு புற்கள் வளர்ந்தாலே அதிசயித்து பார்ப்போம். இங்கு ஒரு பாலைவனமே பூத்துக் குலுங்குகிறது.

உலகின் வறண்ட நிலம் என்று வரையறுக்கப்பட்ட இடம் தென் அமெரிக்காவின் சிலி பகுதியில் உள்ள அட்டகாமா பாலைவனம். இந்த பாலைவனம் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்துக் குலுங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பூத்துக் குலுங்கி வருகிறது.

இந்திய வனப் பணி (IFS) அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பூக்களால் மூடப்பட்ட பாலைவனத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். “சிலியில் உள்ள அட்டகாமா பாலைவனம் பூமியில் மிகவும் வறண்ட இடமாக அறியப்படுகிறது. சராசரி மழை அளவு ஆண்டுக்கு 15 மிமீ. விடக் குறைவு. சில இடங்களில் மழையைப் பெறாமலே இருக்கும். ஆனால் இப்போது அதிக மழை பெய்து, ​​அது ஒரு அதிசய பூமியாக பூத்துக் குலுங்குகிறது," என்று அவர் பதிவிட்டுள்ளார்

எழில் கொஞ்சும் திரிபுராவில் மிஸ் பண்ணக்கூடாத சுற்றுலா இடங்கள்..! ஏரி அரண்மனை முதல் தேவதாமுரா வரை..

பாலைவனத்தில் பூக்களா?

பாலைவனம் என்பதே ஒரு வறண்ட மணல் பூமி. இதில் எப்படி பூ பூத்தது என்று சிந்திக்கிறீர்களா? இந்த பூமியில் உள்ள எல்லா இடங்களும் வானிலை மாறுதலுக்கு புவியியல் மாறுதலுக்கும் உட்பட்டது. பாலைவனத்தை கடந்து செல்லும் காற்று, பறவைகள் பாலைவன நிலத்தில் விதைகளை விட்டுச்செல்லும். அதில் அதிக வெப்பம் தாங்கும் திறன் கொண்ட விதைகள் மண்ணில் புதையுண்டு இருக்கும். நீர் கிடைத்தால் உடனே வளரும் தன்மை பெற்றிருக்கும்.

பாலைவனம் என்பது மற்ற நிலத்தைப்போல் பருவம் தோறும் மழை பெறாது. ஆனால் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு ஒருமுறை  மழைபொழிவை பெறும். சாதாரணமாக 5 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை மழை பொழியும். அந்த மழையின் போது புதைந்த விதைகள் முளைத்து பூக்கும். இதை "டெஸியர்டோ புளோரிடோ" desierto florido (மலரும் பாலைவனம்) நிகழ்வு என்றுக் குறிப்பிடுகின்றனர்.

அட்டகாமா பாலைவனத்தில் கடைசியாக 2017 இல் பூக்கள் பூத்துக் குலுங்கியது. வறண்ட பகுதியில் 200க்கும் மேற்பட்ட தாவர வகைகள் காணப்பட்டன. அதேபோல் 2022 இந்த ஆண்டு மழை பொழிந்து மீண்டும் பூத்துக் குலுங்கி வருகிறது. இது பார்ப்பவர் கண்களை கொள்ளை கொண்டு வருகிறது.
Published by:Ilakkiya GP
First published:

Tags: America

அடுத்த செய்தி