Home /News /trend /

50 ஆண்டுகளுக்கு முன்பு மலர்ந்த காதல்... 82 வயது ராஜஸ்தான் நபரை மீண்டும் அணுகிய ஆஸ்திரேலிய பெண்!

50 ஆண்டுகளுக்கு முன்பு மலர்ந்த காதல்... 82 வயது ராஜஸ்தான் நபரை மீண்டும் அணுகிய ஆஸ்திரேலிய பெண்!

82 வயது ராஜஸ்தான் நபர்

82 வயது ராஜஸ்தான் நபர்

ராஜஸ்தானின் பேய் கிராமம் என்று அழைக்கப்படும் குல்தாரா கிராமம் ஜெய்சால்மர் எனும் மாவட்டத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தென்மேற்கு திசையில் அமைந்திருக்கிறது.

  • News18
  • Last Updated :
ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தின் மையத்தில் குல்தாரா என்ற ஆளில்லாத, வெறிச்சோடிய பழைய கிராமம் ஒன்று உள்ளது. ராஜஸ்தானின் பேய் கிராமம் என்று அழைக்கப்படும் குல்தாரா கிராமம் ஜெய்சால்மர் எனும் மாவட்டத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தென்மேற்கு திசையில் அமைந்திருக்கிறது. மேலும் இந்த கிராமம் 85 குக்கிராமங்களை ஒன்றிணைத்து செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

13-ம் நூற்றாண்டில் இருந்தே இந்த கிராமம் இருந்ததாக சில வரலாற்று தகவல்களும் தெரிவிக்கின்றன. மேலும், அன்றைய காலத்தில் வளமான நகரமாக இருந்த குல்தாரா, 19 ஆம் நூற்றாண்டில் கிராமவாசிகள் அங்கிருந்து திடீரென மாயமானதை தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக வெறிச்சோடி காணப்படுகிறது. இயற்கை பேரழிவுகள் மற்றும் உள்ளூர் ஆட்சியாளர்களிடமிருந்து துன்புறுத்தல் ஆகியவையே மக்கள் இப்பகுதியில் இருந்து விலகியதற்கு காரணம் என வரலாற்றாசிரியர்களும் விஞ்ஞானிகளும் கருதினாலும், உள்ளூர் நாட்டுப்புறக் கதைகள் மக்கள் காணாமல் போனதற்கு பேய், சாபம் என பல காரணங்களை முன்வைக்கின்றனர். 1825-ல் தான் அப்பகுதி மக்கள் காணாமல் போயிருக்கின்றனர் என அறியப்படுகிறது. மேலும் இந்த கிராமம் இப்போது பேய் கிராமம் என்று அழைக்கப்படுகிறது.

அந்த கிராமத்தில் பேய் இருக்கிறதோ இல்லையோ இப்போது வரை அப்பகுதியில் ஒருவர் மட்டும் வாழ்ந்து வருகிறார். 82 வயதான அந்த நுழைவாயில் காவலர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை குல்தாரா பகுதியை காவல் காப்பதிலேயே கழித்துவிட்டார். இருப்பினும், அவரது கதை சற்று சுவாரசியமாகவே இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய பெண்ணுடன் மலர்ந்த ஒரு காதல் கதை தான் அது. இது குறித்து அவர் பேசியதாவது, "நான் மெரினாவை முதன்முதலில் சந்தித்தபோது எனக்கு 30 வயது. அவர் ஆஸ்திரேலியாவிலிருந்து ஜெய்சால்மேருக்கு வந்திருந்தார். மெரினா ஐந்து நாள் சுற்று பயணத்திற்காக ராஜஸ்தானுக்கு வந்திருந்தார்.

அவருக்கு ஒட்டகத்தில் சவாரி செய்வது எப்படி என்று நான் கற்றுக் கொடுத்தேன். இந்த சம்பவம் நடந்தது 1970ம் ஆண்டு. அந்த நாட்களில், முதல் பார்வையிலேயே காதல் மலர்வது உண்மையிலேயே சாத்தியம் என்பதை உணர்ந்தேன், ”என்று அவர் கூறினார். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விரும்பினோம். பயணம் முழுவதும், எங்கள் கண்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்வதில் இருந்து விலக்கிக் கொள்ள முடியவில்லை. ஆஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு முன்பு, மெரினா மூன்று மந்திர வார்த்தைகளை என்னிடம் கூறினார். அது தான் ஐ லவ் யூ ”. என்று தெரிவித்துள்ளார்.

ஆக்டோஜெனேரியன் கேட் கீப்பர் சமீபத்தில் ஹ்யூமன்ஸ் ஆஃப் பம்பாயின் பேஸ்புக் பக்கத்தில் இடம்பெற்றார். அங்கு அவர் தனது தனித்துவமான காதல் கதையை பற்றி பகிர்ந்துகொண்டார். அதில் அவர் கூறியதாவது, மெரினா ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பியபோதும் அவர் என்னுடன் தொடர்பில் இருந்தார். மேலும் மெரினா தன் நாட்டுக்கு என்னை அழைத்தார். அவரை சந்திப்பதற்காக விமான பயணத்திற்கு ரூ.30,000 திரட்டி, ஆஸ்திரேலியாவுக்குச் சென்றதை கேட் கீப்பர் நினைவு கூர்ந்தார். அங்கு மெரினாவுடன் மூன்று மாதங்கள் கழித்தார். ஆனால் அவளை திருமணம் செய்து கொள்ளும்படி ராஜஸ்தான் கேட் கீப்பரிடம் கேட்ட பிறகு விஷயங்கள் சிக்கலாகி விட்டது என்று தெரிவித்தார். இது பற்றி அவர் பேசியதாவது, " நான் எனது தாய்நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இல்லை. அவள் இந்தியாவுக்கு என்னுடன் வரத் தயாராக இல்லை.

Also read... திருட சென்ற இடத்தில் இவ்வளோ பணமா? திருடனுக்கு ஏற்பட்ட ஹார்ட் அட்டாக்!

நான் அவளிடம், “இது நீண்ட காலத்திற்கு நம்மில் வேலை செய்யாது” என்று கூறினேன். அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய போது மெரினா எவ்வளவு அழுதார் என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார். ஆனால் என்னால் அவளை மறக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இத்தனை ஆண்டுகளில், மெரினாவுக்கு என்ன ஆனது என்று கேட் கீப்பர் அடிக்கடி நினைத்துக் கொள்வேன் எனத் தெரிவித்தார். இருப்பினும் அவரது குடும்பத்தினர் கொடுத்த அழுத்தம் காரணமாக கேட் கீப்பர் திருமணம் செய்துகொண்டு குல்தாராவில் வேலையை மேற்கொண்டார். அவரும் அவரது மனைவியும் இரண்டு மகன்களைப் பெற்றெடுத்தனர், காலப்போக்கில் அவர்களும் வளர்ந்தார்கள்.

ஆனால் அவரின் காதல் கதை முடிவடையவில்லை. சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, மெரினா தன்னை மீண்டும் கண்டுபிடித்து ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியதாக கேட் கீப்பர் கூறினார். இது நாங்கள் சந்தித்த சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் நடந்துள்ளது. அதில், மெரினா விரைவில் இந்தியா திரும்புவதாகவும் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதையும் வெளிப்படுத்தினார். அப்போதிருந்து, கேட் கீப்பர் தனது முதல் காதலுடன் தொடர்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து பேசிய அந்த நபர், 82 வயதான எனக்கு அந்த கடிதம் நெல்லிக்கனியை கொடுத்தது, மீண்டும் 21 வயதை அடைந்ததாக உணரவைத்ததாகவும் கூறினார். அவருக்கும் அவரது ஆஸ்திரேலிய தோழருக்கும் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பது தெரியாது என்றாலும், ஆக்டோஜெனேரியன் தனது முதல் காதல் இன்னும் ஆரோக்கியமாகவும், உயிருடன், தொடர்பில் இருக்கிறார் என்ற எண்ணத்தில் திருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Rajastan, Trending

அடுத்த செய்தி