கனவை நிறைவேற்ற வயதெல்லாம் ஒரு தடையா? இன்ஸ்டாவை கலக்கும் 62 வயது டான்ஸ் பாட்டி!

ரவி பாலா ஷர்மா

வயது என்பது ஒரு நம்பர் தான் என்பதை உணர்த்தும் வகையில் 62 வயதான ரவி பாலா ஷர்மா என்ற பெண்மணி தனது நடன அசைவுகளால் இணையத்தை கலக்கி வருகிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நமக்கு வயதாகி கொண்டே போகிறதே, நமக்கு பிடித்ததை இனி நம்மால் செய்ய முடியுமா.? அப்படியே செய்ய நினைத்தாலும் நமது உடல் ஒத்துழைக்குமா.? இது ஏதோ 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வரும் கவலை அல்ல. சராசரியாக 35 வயதை தாண்டிவிட்டாலே பலரையும் ஆட்டிவைக்கும் ஒரு விஷயமாக வயதை பற்றிய கவலைகள் இன்று இருக்கிறது. இதனிடையே வயது என்பது ஒரு நம்பர் தான் என்பதை உணர்த்தும் வகையில் 62 வயதான ரவி பாலா ஷர்மா என்ற பெண்மணி தனது நடன அசைவுகளால் இணையத்தை கலக்கி வருகிறார்.

இவரது நடன திறமைகளை கண்டு இன்ஸ்டாகிராமில் நாளுக்கு நாள் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது. ரவி பாலா ஷர்மாவின் இன்ஸ்டா கணக்கை சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் ஃபாலோ செய்து வருகின்றனர். அவரது இன்ஸ்டா ரசிகர்கள் "டான்சிங் தாதி" (Dancing Dadi) என்று ரவி பாலா ஷர்மாவை அன்பாக அழைக்கின்றனர். உத்திரபிரதேசத்தின் மொராதாபாத்தில் பிறந்த இவர் தற்போது தனது மகனுடன் மும்பையில் வசித்து வருகிறார். இருவருக்கு தாயான ரவி பாலா ஷர்மா டெல்லி அரசுப் பள்ளியில் மியூசிக் டீச்சராக பணியாற்றியுள்ளார்.

தனது குழந்தை பருவத்தில் பாட்டு, கதக், மற்றும் தபேலா உள்ளிட்டவற்றை கற்று கொண்டு பயிற்சி பெற்றுள்ளார். இன்ஸ்டாவில் பதிவிடும் வீடியோக்களில் இவர் ஒரு பல்துறை நடனக் கலைஞர் என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. நாட்டுப்புற பாடல்கள், பாலிவுட் மற்றும் பாங்க்ரா என பல நடன அசைவுகளை எளிமையும் நேர்த்தியும் கொண்டு இவர் ஆடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது நமக்கு. இந்த கலைகளை தனது 96 வயதான தந்தை சாந்தி ஸ்வரூப் ஷர்மாவிடமிருந்து கற்றுக்கொண்டதாக ரவி பாலா ஷர்மா குறிப்பிட்டுள்ளார்.

பணிகால ஓய்விற்கு பிறகு வீணாக பொழுதை கழிக்காமல் தனது குழந்தை பருவ கனவான நடனம் ஆடுவதை நிறைவேற்றி கொண்டுள்ளார் ரவி பாலா ஷர்மா. இதுகுறித்து பேசிய அவர், சிறுவயதிலிருந்தே நடனமாடுவதை நான் விரும்பினேன், வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் என் ரூமை சாத்தி கொண்டு விரும்பிய நடனங்களை ஆடி மகிழ்வேன். கல்லூரி படித்த பிறகு நான் திருமணம் செய்துகொண்டேன். இதனால் வீட்டு மற்றும் பிற பொறுப்புகள் அதிகரித்ததால், என் நடன ஆசைக்கு தடை ஏற்பட்டது என்றார்.

Also read... திருடன் வந்திருப்பது கூட தெரியாமல் நகை கடையில் அசந்து தூங்கிய காவல் நாய்!

மேலும் திருமணமான 27 வருடங்களுக்கு பின், என் கணவர் இறந்த போது, அந்த இழப்பை என்னால் தாங்கமுடியவில்லை. என் கணவர் இறந்த பிறகு கடும் மனச்சோர்வுக்கு ஆளானேன். எனினும் நான் மீண்டும் நடனம் ஆட வேண்டும் என்பது என் கணவரின் கனவு என்பதை நினைவூட்டி சோர்ந்திருந்த என்னை குடும்பத்தினர் ஊக்கப்படுத்தினர் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

பஞ்சாபி மற்றும் ஹிந்தி சினிமா உலகில் புகழ்பெற்று விளங்கும் பாடகர்-பாடலாசிரியர், நடிகர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளரான தில்ஜித், ரவி பாலா ஷர்மாவின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ரவி பாலா ஷர்மா, "இதை எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருதாக கருதுகிறேன். வயது என்பது ஒரு எண் என்பதை நான் நிரூபித்துள்ளேன்,நீங்களும் உங்கள் வாழ்க்கையின் எந்த கட்டத்திலும் உங்களுக்கு பிடித்ததை செய்து உங்களை நிரூபிக்க முடியும்" என்று ஊக்கம் அளித்துள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: