தனது பிறந்தநாளை விண்வெளியில் கொண்டாடிய ISS வீராங்கனை... வைரலாகும் புகைப்படங்கள்!

பிறந்தநாளை விண்வெளியில் கொண்டாடிய ISS வீராங்கனை

டின்னர் பார்ட்டியில், சீஸ் கொண்ட க்வெஸாடில்லாஸ் மற்றும் டார்ட்டில்லா-பீஸ்ஸாக்கள்! குக்கீ டெகரேட்டிங்! "மெழுகுவர்த்திகள்" கொண்ட சாக்லேட் கேக்! ஆகியவை உள்ளன.

  • Share this:
விண்வெளியில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் நமக்கு ஆச்சர்யத்தையும், எதிர்பார்ப்பையும் கூட்டுகிறது. பலர் விண்வெளியில் நடக்கும் அறிவியல் அதிசயங்களை கண்டுபிடிக்க விண்வெளிக்கு பறக்கின்றனர். மேலும் பலர் விண்வெளியில் அதிசயங்களை தெரிந்துகொள்வதில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். அவர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் விதத்தில் நாசா பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறது.

மேலும், பல அதிசயங்களை காண விண்வெளி நிறுவனங்கள் மற்றும் வீரர் வீராங்கனைகளின் சமூக வலைதள பக்கத்தை நெட்டிசன்கள் ஃபாலோ செய்து வருகிறார்கள். அந்த வகையில் விண்வெளி ரசிகர்களை மீண்டும் wow சொல்ல வைக்கும் அளவுக்கு ஒரு சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தற்போது இருக்கும் விண்வெளி வீரர் மேகன் மெக் ஆர்தரின் என்பவர் தனது பிறந்தநாளை விண்வெளியில் கொண்டாடியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் கொண்டாட்டங்களின் சில படங்களை அவர் பகிர்ந்துள்ளார். பலர் தங்களது பிறந்தநாளை தங்களது கனவு இடத்தில் கொண்டாட நினைப்பர். அதன்படி மேகன் மெக் ஆர்தருக்கு விண்வெளியில் கொண்டாடும் அனுபவம் கிடைத்துள்ளது. அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் ஆச்சர்யத்தில் உறைந்துள்ளனர். பிறந்தநாள் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததோடு, "எனது Expedition 65 குழு நண்பர்களுடன் சிறப்பான பிறந்தநாள் டின்னர்! என் ஸ்பேஸ் பிரதர்சுடன் (#SpaceBrothers) பிறந்தநாள் நன்றாக சென்றது.

மேலும் டின்னர் பார்ட்டியில், சீஸ் கொண்ட க்வெஸாடில்லாஸ் மற்றும் டார்ட்டில்லா-பீஸ்ஸாக்கள்! குக்கீ டெகரேட்டிங்! "மெழுகுவர்த்திகள்" கொண்ட சாக்லேட் கேக்! ஆகியவை உள்ளன. நாங்கள் இன்னும் ஐஸ்கிரீம் பேக்கை திறக்கவில்லை, அதனால் 2 வது பார்ட்டி இருக்கிறது என்று அர்த்தம்." என கேப்ஷன் செய்துள்ளார்.இந்த பதிவு பகிரப்படத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான லைக்ஸ் மற்றும் வியூஸ்களை பெற்றுள்ளது. மேலும், ட்விட்டர் யூசர்கள் பலர் எண்ணற்ற கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் விண்வெளி வீரருக்கு "பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று பலர் கருத்து பிரிவில் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Also read... கோவிட் தொற்றுக்கு தாயை இழந்த பின் 'ஆக்ஸிஜன் ஆட்டோ' மூலம் 800-க்கும் மேற்பட்ட உயிர்களை காப்பாற்றிய சாதனை பெண்மணி!

அதில் ஒரு யூசர் குறிப்பிட்டிருந்தாதவது, " ஐஸ்கிரீமை கதவுக்கு வெளியே விடுங்கள். யாரும் அதைத் திருட மாட்டார்கள். அது நன்றாகவும் குளிராகவும் இருக்கும். அயர்லாந்திலிருந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள், ”என்று நகைச்சுவையாக பதிவிட்டிருந்தார். மற்றொரு யூசர்,"இது ஒரு அற்புதமான பிறந்தநாள் கொண்டாட்டம். பிரபஞ்சத்தின் இளவரசி, ”என்று பதிவிட்டிருந்தார். "உங்கள் பிறந்த நாள் இந்த உலகத்திற்கு வெளியே கொண்டாடப்படுகிறது என்று நம்புகிறேன்! பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ” என்று மூன்றில் ஒரு பங்கு யூசர்கள் கமெண்ட் செய்திருந்தனர். தற்போது, விண்வெளி வீராங்கனையின் பிறந்தநாள் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.
Published by:Vinothini Aandisamy
First published: