Home /News /trend /

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பெயரில் அசாமில் தேயிலை தூள் அறிமுகம்... ரஷ்யாவுக்கு எதிரான துணிச்சலுக்கு பாராட்டு

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பெயரில் அசாமில் தேயிலை தூள் அறிமுகம்... ரஷ்யாவுக்கு எதிரான துணிச்சலுக்கு பாராட்டு

மீட்பதற்கு உதவி செய்வோம் என்று அமெரிக்கா அறிவித்தது. அதனை ஜெலன்ஸ்கி ஏற்காமல் தங்களுக்கு போரிட ஆயுதங்கள் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

மீட்பதற்கு உதவி செய்வோம் என்று அமெரிக்கா அறிவித்தது. அதனை ஜெலன்ஸ்கி ஏற்காமல் தங்களுக்கு போரிட ஆயுதங்கள் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

மீட்பதற்கு உதவி செய்வோம் என்று அமெரிக்கா அறிவித்தது. அதனை ஜெலன்ஸ்கி ஏற்காமல் தங்களுக்கு போரிட ஆயுதங்கள் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

    ரஷ்யாவை எதிர்த்து நிற்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் துணிச்சலை பாராட்டும் விதமாக அவரது பெயரில் அசாமில் தேயிலைத் தூள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா கடந்த மாதம் 24-ம் தேதி போரைத் தொடங்கியது. 3 வாரங்களைக் கடந்து போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், எதிர்த்து போரிடுவது என்ற முடிவில் இருந்து உக்ரைன் ராணுவம் பின்வாங்கவில்லை. அந்நாட்டு மக்களில் பெரும்பாலானோரும் ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர்.

    உக்ரைனின் இந்த துடிப்பு மிக்க போராட்டத்திற்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியே முக்கிய காரணமாக இருக்கிறார். போர் தொடங்கியது முதல் நாள்தோறும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு நாட்டு மக்களையும், ராணுவத்தினரையும் உற்சாகப்படுத்தி வருகிறார்.

    இதையும் படிங்க - ரூ.12 ஆயிரத்தில் 3 ஐபோன்: ஓ.எல்.எக்ஸ் விளம்பரத்தை பார்த்து பணத்தை பறிகொடுத்த டி.ஜி.பியின் வாகன ஓட்டுநர்

    வல்லரசு நாடான ரஷ்யாவை எதிர்த்து ஜெலன்ஸ்கி மேற்கொள்ளும் போர் நடவடிக்கைகள், அவருக்கு உலகம் முழுவதும் இருந்து ஆதரவை அளித்துள்ளன. கடந்த 2 மாதங்களில் ஜெலன்ஸ்கி என்ற பெயர் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளது.

    இந்நிலையில், உக்ரைன் அதிபரின் துணிச்சலை பாராட்டும் விதமாக அவரது பெயரில் அசாமில் தேயிலை தூள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜெலன்ஸ்கி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த தேயிலை தூள் பாக்கெட்டில், ரியலி ஸ்ட்ராக் (வலிமை மிக்கது) என்று டேக்லைன் பொறிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க - ரஷ்யத் தாக்குதலால் மரியுபோலில் 80% கட்டடங்கள் சேதம் - உக்ரைன்

    இதுதொடர்பாக தேயிலை நிறுவனத்தின் இயக்குனர் ரஞ்சித் பருவா கூறுகையில், 'ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்து துணிச்சலாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செயல்பட்டு வருகிறார். அவரது மன உறுதியையும் வீரத்தையும் பாராட்டும் வகையில் அவரது பெயரில் தேயிலை தூள் அறிமுகம் செய்யப்படுகிறது.

    போர் நடக்கும் பகுதியில் ஜெலன்ஸ்கி சிக்கியுள்ளார். அவரை மீட்பதற்கு உதவி செய்வோம் என்று அமெரிக்கா அறிவித்தது. அதனை ஜெலன்ஸ்கி ஏற்காமல் தங்களுக்கு போரிட ஆயுதங்கள் வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இது அவருடைய வீரத்தை வெளிப்படுத்துகிறது' என்றார். ஜெலன்ஸ்கி டீக்கு நெட்டிசன்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Russia - Ukraine

    அடுத்த செய்தி